என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிபாடு கோவில்கள்"

    • இரு சித்தர்களுமே சதுரகிரிக்கு சென்று வந்திருப்பதாக தகவல்கள் உள்ளது.
    • அக்னி குண்டத்தில் போட்ட பொருட்கள் 2 பெண்களாக மாறி 2 முனிவர்களையும் சுற்றிச்சுற்றி வந்தது.

    குப்பை மேட்டில் போட்ட விபூதியின் மகத்துவத்தால் 9 வயது நிறைந்த சிறுவனாக, அதுவும் தியானம் செய்த கோலத்தில் இருந்த சிறுவன் தான் 'கோரக்கர்'. கோரக்கர் மூலிகையால் பிறந்த இவரை தான் 'கோரக்க சித்தர்' என அழைப்பதாக பழமையான தமிழ் நூல் கூறுகிறது.

    மேலும், தனது தாயே தன்னை குப்பை தொட்டியில் போட்டு விட்டதால், இத்தனை நாட்களில் அந்த குப்பை தொட்டியில் நாற்றத்தோடு கஷ்டப்பட்ட நான் இனி உன்னோடு இருக்க இஷ்டமில்லை. எனவே, இந்த சித்தருடன் என்னை அனுப்பிவிடு என்று கூறிய மகனின் பேச்சை கேட்டு அந்த சித்தருடன் கோரக்கரை அனுப்பி வைத்தார்.

    நாலா திசைகளிலும் தன்னை மறந்து சென்ற கோரக்கர் படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மனின் தொழிலை தான் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, ஆழ்ந்த சக்தியை பெறுவதற்காக பிரம்ம முனியுடன் இணைந்து யாகத்தை தொடங்கினார்.

    இதனையடுத்து படைக்கும் தொழில் சித்தர்களின் கைக்கு போய்விட்டால், தமக்கு மதிப்பு இருக்காது என அஞ்சிய தேவர்கள் அக்னியையும், வருணனையும் அனுப்பி யாகத்தை அழிக்க வேலை செய்தனர். இதனை அடுத்து அக்னி குண்டத்தில் போட்ட பொருட்கள் 2 பெண்களாக மாறி 2 முனிவர்களையும் சுற்றிச்சுற்றி வந்தது. இருந்தாலும் பிரம்ம முனியும், கோரக்கரும் எங்கள் யாகத்தை அழிப்பதற்காக நீங்கள் பெண்களாக வந்தீர்களா? என்று கூறி நீரை தெளித்து அவர்களை செடிகளாக மாற்றி விட்டார்கள்.

    அந்த செடிகள் தான் காயகல்ப செடிகள் என அழைக்கப்படுகிறது. மேலும், அதிகளவு கோபம் கொண்ட சித்தர்கள் தங்கள் பலத்தை இழந்த காரணத்தால் படைக்கும் தொழிலை செய்யக்கூடிய வித்தையை கற்றுக்கொள்ள முடியாமல் போனது. இதனை அடுத்து சிவபெருமானின் கட்டளைக்கு இணங்க காயகல்பத்தை கொண்டு உலக உயிர்கள் நோய்நொடி இல்லாமல் வாழ்வதற்கான மருந்தை தயாரிக்க கூடிய பணிகளை செய்ய ஆரம்பித்தார்கள்.

    அந்த வகையில், இந்த இரு சித்தர்களுமே சதுரகிரிக்கு சென்று வந்திருப்பதாக தகவல்கள் உள்ளது. மேலும், சித்து வேலைகள் செய்து பல மக்களுக்கு வாழ்வளித்த கோரக்கர், பேரூரில் சித்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இவர் எழுதிய நூல்களில் மிக சிறப்பானதாக கோரக்கர் சந்திர ரேகை, கோரக்கர் நம நாச திறவுகோல், ரச மணிமேகலை போன்றவை முக்கியமான நூல்களாக கருதப்படுகிறது.

    • தமிழகத்தில் ஒரு சித்தரின் ஜீவசமாதி கோவிலில் துறவிகள் குவிந்து இருப்பது இங்கு மட்டுமே.
    • கோரக்கர் நீண்ட நாள் அங்கு தங்கியிருந்தமையால் இங்கு அபரிமிதமான சக்தி உண்டு.

    ஒரு இடத்தில் ஒரு சித்தர் ஜீவசமாதி அடைந்து இருந்தாலே அந்த இடம் அருள் அலைகள் நிரம்பிய இடமாக திகழும். சில இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட சித்தர்கள் அடங்கி இருப்பார்கள். அத்தகைய இடங்களில் சித்தர்களின் அருள் பொங்கி வழியும்.

    அதே சமயத்தில், ஒரே இடத்தில் அதிக அளவில் சித்தர்கள் முக்தி அடைந்து இருக்கிறார்கள் என்றால் அந்த இடம் எத்தகைய மகிமை வாய்ந்த புண்ணிய தலமாக இருக்கக்கூடும். சித்தர்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த மகிமை புரியும். அந்த இடம் நாகப்பட்டினம் மாவட்டம், வடக்கு பொய்கை நல்லூர் எனும் ஊர் ஆகும். இங்கு கோரக்கர் சித்தரின் ஜீவசமாதி பீடம் அமைந்துள்ளது.

    இந்த ஜீவசமாதிக்கு நாம் எப்போது சென்றாலும் முன்பகுதியில் காவி உடை அணிந்த சிவனடியார்கள் நூற்றுக்கணக்கில் நிறைந்துள்ளதை பார்க்கலாம். தமிழகத்தில் ஒரு சித்தரின் ஜீவசமாதி கோவிலில் துறவிகள் குவிந்து இருப்பது இங்கு மட்டுமே.

    அந்த துறவிகளில் பலர் நிரந்தரமாகவே கோரக்கர் சித்தர் ஆசிரமத்தில் தங்கி உள்ளனர். ஆசிரமத்தின் உள்ளே நுழையும்போதே ஏதோ ஓர் இனம்புரியாத அமைதி நமக்குள் ஊடுருவி விடுவதை நம்மால் உணர முடியும். அதிக அளவில் சித்தர்கள் முக்தி அடைந்த இடம் என்பதால் மனதுக்குள் வேறு சிந்தனைகளே வருவது இல்லை.

    மனம் முழுக்க 'கோரக்கர் சித்தர்' நிறைந்து விடுகிறார். அங்கு அமர்ந்து சில நிமிடங்கள் தியானம் செய்தால் மனதில் நேர்மறையான எண்ணங்கள் தோன்றும். கோரக்கர் நீண்ட நாள் அங்கு தங்கியிருந்தமையால் இங்கு அபரிமிதமான சக்தி உண்டு.

    ஒவ்வொரு வியாழக்கிழமை, பவுர்ணமி மற்றும் அமாவாசை போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து கோரக்கரை தரிசனம் செய்து இரவில் தங்கி செல்கின்றனர்.

    • செவ்வாய் என்பது கோபத்தை குறிக்கும்.
    • செவ்வாய் தோஷக்காரர்களுக்கு அதிக ஆற்றல் திறன் இருக்கும்.

    செவ்வாய் என்பது கோபத்தை குறிக்கும்.

    அதனால் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு கோபம் கொள்ளும் குணம் அதிகமாக இருக்கக்கூடும்.

    செவ்வாய் தோஷக்காரர்களுக்கு அதிக ஆற்றல் திறன் இருக்கும்.

    அதனை அழிவிற்கு பயன்படுத்தாதவாறு அதனை அவர்கள் சரியாக வழிநடத்திட வேண்டும்.

    செவ்வாய் தோஷத்தால் திருமணம் தாமதமாகும்.

    செவ்வாய் தோஷம் திருமணத்தில் டென்ஷன் மற்றும் முரண்பாடுகளை உண்டாக்கும்.

    செவ்வாய் தோஷம் கொண்ட இருவர் திருமணம் செய்து கொண்டால் இந்த கிரகத்தின் தாக்கங்கள் ஒன்றுமில்லாமல் போய்விடும் என நம்பப்படுகிறது.

    சென்ற ஜென்மத்தில் தங்கள் கணவன் அல்லது மனைவியை ஒழுங்காக நடத்தாதவர்களுக்கு தான் இந்த தோஷம் உண்டாகும் என நம்பப்படுகிறது.

    • செவ்வாய் இரண்டாம் கட்டத்தில் வரும் போது, திருமணம் மற்றும் சொந்த வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படலாம்
    • அவருடைய ஆளுமை குணத்தால் அவருடைய குடும்பத்தாருடன் அவருக்கு நல்லுறவு இருக்காது.

    1.செவ்வாய் முதல் கட்டத்தில் வரும் போது, திருமணத்தில் சண்டை சச்சரவுகளையும், வன்முறைகளையும் ஏற்படுத்த வாய்ப்புண்டு

    2.செவ்வாய் இரண்டாம் கட்டத்தில் வரும் போது, திருமணம் மற்றும் சொந்த வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டு, அந்த நபரின் குடும்பம் பாதிக்கப்படும்.

    3.செவ்வாய் நான்காம் கட்டத்தில் வரும் போது, தொழில் ரீதியான வாழ்க்கையில் பெரும் தோல்வியை சந்திப்பார்கள். ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறிக்கொண்டே இருப்பார்கள்.

    4.செவ்வாய் ஏழாம் கட்டத்தில் வரும் போது, அந்த நபரிடம் இருக்கும் அளவுக்கு அதிகமான ஆற்றல் திறன் அவரை கடும் கோபக்காரராக வைத்திருக்கும். அவருடைய ஆளுமை குணத்தால் அவருடைய குடும்பத்தாருடன் அவருக்கு நல்லுறவு இருக்காது.

    5. செவ்வாய் எட்டாம் கட்டத்தில் வரும் போது, தன் வீட்டு பெரியவர்களின் பகைக்கு ஆளாகி தந்தை வழி சொத்தை இழப்பார்கள்.

    6. செவ்வாய் பத்தாம் கட்டத்தில் வரும் போது, அந்த நபர் மனநிலை பிரச்சனையால் அவதிப்படுவார். மேலும் எதிரிகளுடன் கூடிய நிதி சார்ந்த நஷ்டங்களை சந்திப்பார்.

    • செவ்வாய் கேது சனி சேர்க்கையில் பிறக்கும் போது தகுந்த உதவிகள் கிடைத்திருக்காது.
    • செவ்வாயுடன் சூரியன் குரு சேர்க்கையில் பெரியோர்களின் ஆசிகளுடனான சூழ்நிலை அவர்கள் பிறந்தபோது இருக்கும்.

    நமது உடம்பிலே ஓடும் இரத்தத்தின் அளவு , அது செல்லும் குழாய்களின் அமைப்பு, அது செல்லும் வேகம் , அது உற்பத்தியாகும் திறன், எந்தந்த உடல் உறுப்புகளுக்கு எவ்வளவு இரத்தம் செல்லும் என்பன பற்றிய விவரங்களை முழுமையாக அறிவிப்பது ஜாதகத்திலிருக்கும் செவ்வாய்தான்.

    ஒரு ஜாதகத்திலே செவ்வாய்தோஷம் இருக்கிறது என்று சொன்னால் அவருக்கு இரத்தம் எங்கு, எந்தமாதிரி செல்கிறது என்பதை வைத்து இவருக்கு இது எந்த மாதிரி விளைவுகளை உருவாக்கும் என்பதை கண்டு அதற்கு பொருத்தமான இணையை தேர்வு செய்வது வழக்கமாகும்.

    உதாரமாக பாலின உறுப்புகளுக்கு அதிகளவில் இரத்தம் செல்லும்போது காமஉணர்வு அதிகமாக இருக்கும்.

    காம விளையாட்டும் அதிகமிருக்கும் எனவே அதற்கு சமமான ஜோடி சேர்த்தால்தான் அவரது மனம் வேறுநபரை நாடாது. கணவன் மனைவி ஒற்றுமையும் நன்றாக இருக்கும்.

    இப்படியாக ஒவ்வொரு உறுப்புக்கும் எவ்வளவு இரத்தம் செல்கிறது.

    அங்கு என்னபடியான விளைவை ஏற்படுத்துகிறது என்பது விவரங்களை ஜாதகத்தில் இருக்கும் செவ்வாயை வைத்து அறியலாம்.

    செவ்வாய் ராகு சேர்கையில் மோசமான சூழ்நிலையில் பிறநதிருப்பார்கள்

    செவ்வாய் கேது சனி சேர்க்கையில் பிறக்கும் போது தகுந்த உதவிகள் கிடைத்திருக்காது.

    செவ்வாயுடன் சூரியன் குரு சேர்க்கையில் பெரியோர்களின் ஆசிகளுடனான சூழ்நிலை அவர்கள் பிறந்தபோது இருக்கும். இப்படி பல... விஷயங்களையும் அறிய வைப்பது செவ்வாய்தான்.

    தாமத புத்திரம் முதலிய பிரச்சனைகள் செவ்வாய் கிரகத்தினால் ஏற்படலாம்.

    திருமண தடை, திருமண முயற்சி தோல்வி, திருப்தியில்லா மணவாழ்க்கை, வேற்றுமதத்தில்

    மண முடித்து பிரிவினையாதல், பிறருடைய வாழ்க்கை துணைவரின் மேல் காதல் கொள்ளுதல், தகாத உறவு,

    சந்தேக குணம், இடைக்கால பிரிவு, மக்கட்பேரின்மை, மணமுறிவு மணமக்களுக்குள் அன்பின்மை, ஒற்றுமை

    இன்மை, விட்டுகொடுத்தல் இல்லாத தன்மை, முரட்டு பிடிவாதம், சந்ததி இன்மை, சுகமின்மை, ஒழுக்கமின்மை,

    இல்லற வாழ்க்கையின் நன்மை அறியாமை, மாங்கல்ய பலமில்லாமை, ஆயுள் பலமின்மை,புத்திர தடை,

    தத்து புத்திரம், கர்பம் கலைதல், அற்ப ஆயுள் புத்திரம் , புத்திர சோகம், தாமத புத்திரம்

    முதலிய பிரச்சனைகள் செவ்வாய் கிரகத்தினால் ஏற்படலாம்.

    • கும்ப விவாகம் என்ற ஒரு வகையான திருமணம் இந்த தோஷத்தின் தாக்கங்களை குறைக்க உதவிடும்.
    • இந்த தோஷத்தின் தாக்கம் 28 வயதுக்கு பிறகு குறையும் என்பதால், அதன்பின் திருமணம் செய்யவே அறிவுறுத்தப்படுகிறது.

    1.செவ்வாய் தோஷம் கொண்ட இருவர் திருமணம் செய்து கொண்டால் இந்த கிரகத்தின் தாக்கங்கள் ஒன்றுமில்லாமல் போய் விடும்.

    2.கும்ப விவாகம் என்ற ஒரு வகையான திருமணம் இந்த தோஷத்தின் தாக்கங்களை குறைக்க உதவிடும். இந்த வகை திருமணத்தில், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஒரு மரத்தையோ அல்லது தாழியையோ திருமணம் செய்ய வேண்டும். இது செவ்வாய் தோஷத்தை ஒன்றுமில்லாமல் செய்து விடும்.

    3.செவ்வாய்க்கிழமைகளில் உண்ணாவிரதம் இருந்தால் செவ்வாய் தோஷங்களின் எதிர்மறையான தாக்கங்கள் குறையும். விரதத்தின் போது, செவ்வாய் தோஷக்காரர்கள் துவரம் பருப்பை மட்டுமே உண்ணலாம்.

    4.செவ்வாய்க்கிழமைகளில் நவகிரக மந்திரம் மற்றும் ஆஞ்சநேயர் மந்திரங்களை பாடினால், செவ்வாய் தோஷக்காரர்களுக்கு நல்ல பலனை அளிக்கும்.

    5. செவ்வாய்க்கிழமைகளில் பூஜைகள் புரிவதும், ஆஞ்சநேயர் கோவில்களுக்கு செல்வதும் கூட இந்த தோஷத்தை போக்குவதற்கான சிறந்த வழியாகும்.

    6.செவ்வாய் தோஷக்காரர்கள் இரத்தக்கல் பதித்த தங்க மோதிரத்தை தங்கள் வலது கரத்தில் உள்ள மோதிர விரலில் அணிய ஜோசியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

    7.இந்த தோஷத்தின் தாக்கம் 28 வயதுக்கு பிறகு குறையும் என்பதால், அதற்கு பிறகு திருமணம் செய்யவே அறிவுறுத்தப்படுகிறது.

    • குருவின் வீடுகளிலோ, குருவுடன் இணைந்தோ, குருவின் பார்வையைப் பெற்றிருந்தாலோ தோஷம் இல்லை.
    • செவ்வாய் சனியுடன் இணைந்தால் தோஷம் இல்லை

    1.மேற்சொன்ன இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பனிரெண்டாம் வீடுகளில் செவ்வாய் ஆட்சியாகவோ, உச்சமாகவோ, நீசமாகவோ இருந்தால் தோஷம் இல்லை.

    2.குருவின் வீடுகளிலோ, குருவுடன் இணைந்தோ, குருவின் பார்வையைப் பெற்றிருந்தாலோ தோஷம் இல்லை.

    3.சுக்கிரனின் வீடுகளான ரிஷபம், துலாமில் இருந்தாலும் தோஷம் இல்லை.

    4. சுக்கிரனுக்கு நான்கு, ஏழு, பத்து ஆகிய கேந்திரங்களில் செவ்வாய் இருந்தாலும் தோஷம் இல்லை.

    5.மேற்கண்ட வீடுகளில் செவ்வாய் சந்திரனுடனோ, புதனுடனோ அல்லது இருவரும் சேர்ந்து இணைந்திருந்தாலோ தோஷம் இல்லை.

    6.ராகு, கேதுக்களுடன் செவ்வாய் நெருக்கமாக இணைந்து பலவீனம் பெற்றிருந்தால் தோஷம் இல்லை.

    7.மேஷம் விருச்சிகம் கடகம் சிம்மம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை.

    8.சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.

    9.செவ்வாய் சனியுடன் இணைந்தால் தோஷம் இல்லை

    10.அஸ்தமன செவ்வாய்க்கு தோஷம் இல்லை.

    11.செவ்வாய் பரிவர்த்தனை பெற்றிருந்தால் தோஷம் இல்லை.

    • உடைக்காமல் இருக்கும் முழுத்துவரையை சிகப்புத்துணியில் பொட்டலம் கட்டிக் கொள்ள வேண்டும்.
    • இவற்றுடன் வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், வாழை பழம் ஆகியவற்றையும் சேர்த்து கண் சிவந்த வேதியரிடம் தானம் கொடுக்க வேண்டும்.

    வாழைப்பூத் தானம்:

    ஒரு மரத்தில் இருக்கும் முழு வாழைப்பூவும் அதே மரத்தில் காய்த்த பழமும், அதே மரத்தில் கிழக்கு நோக்கிய நுனி இலையையும் வெற்றிலை பாக்கும் மஞ்சள் துணியும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இவைகளை இலையில் வைத்து தானம் வாங்குபரை நடுவீட்டில் உட்காரவைத்து தந்து விட வேண்டும்.

    துவரை தானம்:

    உடைக்காமல் இருக்கும் முழுத்துவரையை சிகப்புத்துணியில் பொட்டலம் கட்டிக் கொள்ள வேண்டும்.

    இவற்றுடன் வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், வாழை பழம் ஆகியவற்றையும் சேர்த்து கண் சிவந்த வேதியரிடம் தானம் கொடுக்க வேண்டும்.

    • சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து, பூமியில் விழுந்த ஒரு துளியே செவ்வாய் ஆகும்.
    • பலமும், வீர்யமும் பெற்று, ஒளி வீசிப் பிரகாசிக்கும் இவன் அங்காரகன் என்று புகழ் பெற்றான்.

    சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து, பூமியில் விழுந்த ஒரு துளியே செவ்வாய் ஆகும்.

    பூமாதேவியினால் வளர்க்கப்பட்டவன் செவ்வாய் (தரணீ கர்ப்ப சம் பூதம்) என விளக்குகிறார் ஸ்ரீ வியாச பகவான்.

    பரத்வாஜ முனிவரின் கருணையினால், அவரது மகனாக வளர்ந்து, நவக்கிரகங்களில், அக்கினிக்குச் சமமான ஒளியும், பலமும், வீர்யமும் பெற்று, ஒளி வீசிப் பிரகாசிக்கும் இவன் அங்காரகன் என்று புகழ் பெற்றான்.

    செந்நிறத்தில், கொழுத்து விட்டுப் பிரகாசிக்கும் நெருப்பைப் போல் ஜொலிப்பதால், "செவ்வாய்" என்று பெயரை அடைந்தான்.

    கிரேக்க பாசையில் "மாஸ்" எனப் போற்றப்பட்ட இக்கிரகம், பூமி, நிலம், செம்பு, உத்தம சகோதரர்கள், சேனைகளுக்குத் தலைமை, பிடிவாதம், நினைத்ததைச் சாதித்தே தீரும் வல்லமை.

    முன்கோபம் ஆகியவற்றிற்கு காரகத்துவம் பெற்றவர் ஆவார்.

    • ஜோதிட சாஸ்திரங்கள் செவ்வாயை முருகனின் அம்சமாக கருதுகிறது.
    • அதனால் முருகனை வழிபட தோஷம் அகலும்.

    ஜோதிட சாஸ்திரங்கள் செவ்வாயை முருகனின் அம்சமாக கருதுகிறது. அதனால் முருகனை வழிபட தோஷம் அகலும்.

    பழனி, வைத்தீஸ்வரன் கோயில், திருச்சிறுகுடி ஆகிய முருகன் தலங்கள் செவ்வாய் கிரகத்துடன் தொடர்பு கொண்டதாகும்.

    சென்னையில் புராண பெருமையுடன் கூடிய குன்றத்தூர் குமரன் கோவில், பாரிமுனை கந்தகோட்டம்,

    கபாலி கோவிலில் உள்ள முருகன் சன்னதி, வடபழனி முருகன் கோவில், பூந்தமல்லியில் உள்ள வைத்தீஸ்வரன்

    கோவில் மற்றும் பெசன்ட் நகரில் கட்டப்பட்டுள்ள அறுபடைவீடு ஆலயம், வில்லிவாக்கத்தில் உள்ள

    அகத்தீஸ்வரர் ஆலயம் அனைத்தும் செவ்வாய் கிரகம் சம்பந்தமான அனைத்து தோஷங்களுக்கும் பரிகாரமும்,

    தரிசனமும் செய்ய ஏற்ற ஆலயங்கள் ஆகும்.

    1. ஜாதகத்தில் செவ்வாய் நல்ல இடத்தில் அமைந்திருந்தால், அங்காரகன் கடன் தொல்லையின்றி, பூமியையும், செல்வத்தையும், வாகன யோகம் மற்றும் புகழையும் அள்ளிக்கொடுப்பார்.

    2. 9, 18, 27ந் தேதிகளில் பிறந்தவர்களுக்கு அங்காரகன் உரிய கிரகமாகும்.

    3. ஜாதகத்தில் ஒருவரை சிறந்த தலைவனாக்கக்கூடிய ஆற்றல் உடையவர் அங்காரக பகவான். இவர் அருள் இருப்பவரை யாரும் எளிதில் வெல்ல முடியாது.

    4. அவரவர்கள் தங்கள் ஜாதகப்படி செவ்வாய் எந்நிலையில் உள்ளது என்பதை அறிந்து பரிகாரம் செய்துகொள்வது நல்லது.

    • சரித்திரத்தில் புகழ்பெற்ற மாமன்னர்கள், சர்வாதிகாரிகள், செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தான்.
    • மேஷம், விருச்சிகம் ஆகிய இரு லக்கனங்கள் அல்லது ராசிகளில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷம் கிடையாது.

    சரித்திரத்தில் அழியாப் புகழ்பெற்ற பல மாமன்னர்கள், சர்வாதிகாரிகள், மாவீரர்கள் ஆகியோர் செவ்வாயின் தீவிர ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தான்.

    மாமன்னன் அலெக்சாண்டர், ரஷிய சர்வாதிகாரி ஸ்டாலின், ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர், பிரிட்டிஷ் பிரதம மந்திரியாக விளங்கிய வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் செவ்வாயின் சுப பலம் பெற்றவர்களே.

    இவர்கள் அனைவரும், இறுதிக் காலம் வரையில் தங்கள் கொள்கைகளை சிறிதளவும் மாற்றிக் கொள்ளாமல் மூர்க்கத் தனமான துணிவுடன் போராடியதற்கு, அவர்களுக்கு செவ்வாய் அளித்த அதிக பலமே காரணமாகும்.

    மேஷம், விருச்சிகம் ஆகிய இரு லக்கனங்கள் அல்லது இவ்விரு ராசிகளிலும் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷம் கிடையாது அல்லது செவ்வாய் தோஷம் பாதிக்காது என ஜ்யோதிஷ்கிரந்த் என்ற மிகப் புராதனமான, ஜோதிட நூல் அறுதியிட்டுக் கூறுகிறது.

    ×