என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த சர்வாதிகாரிகள்
    X

    செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த சர்வாதிகாரிகள்

    • சரித்திரத்தில் புகழ்பெற்ற மாமன்னர்கள், சர்வாதிகாரிகள், செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தான்.
    • மேஷம், விருச்சிகம் ஆகிய இரு லக்கனங்கள் அல்லது ராசிகளில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷம் கிடையாது.

    சரித்திரத்தில் அழியாப் புகழ்பெற்ற பல மாமன்னர்கள், சர்வாதிகாரிகள், மாவீரர்கள் ஆகியோர் செவ்வாயின் தீவிர ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தான்.

    மாமன்னன் அலெக்சாண்டர், ரஷிய சர்வாதிகாரி ஸ்டாலின், ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர், பிரிட்டிஷ் பிரதம மந்திரியாக விளங்கிய வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் செவ்வாயின் சுப பலம் பெற்றவர்களே.

    இவர்கள் அனைவரும், இறுதிக் காலம் வரையில் தங்கள் கொள்கைகளை சிறிதளவும் மாற்றிக் கொள்ளாமல் மூர்க்கத் தனமான துணிவுடன் போராடியதற்கு, அவர்களுக்கு செவ்வாய் அளித்த அதிக பலமே காரணமாகும்.

    மேஷம், விருச்சிகம் ஆகிய இரு லக்கனங்கள் அல்லது இவ்விரு ராசிகளிலும் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தோஷம் கிடையாது அல்லது செவ்வாய் தோஷம் பாதிக்காது என ஜ்யோதிஷ்கிரந்த் என்ற மிகப் புராதனமான, ஜோதிட நூல் அறுதியிட்டுக் கூறுகிறது.

    Next Story
    ×