என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

எப்போது செவ்வாய் பிரச்சனைகள் செய்யும்?
- செவ்வாய் இரண்டாம் கட்டத்தில் வரும் போது, திருமணம் மற்றும் சொந்த வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படலாம்
- அவருடைய ஆளுமை குணத்தால் அவருடைய குடும்பத்தாருடன் அவருக்கு நல்லுறவு இருக்காது.
1.செவ்வாய் முதல் கட்டத்தில் வரும் போது, திருமணத்தில் சண்டை சச்சரவுகளையும், வன்முறைகளையும் ஏற்படுத்த வாய்ப்புண்டு
2.செவ்வாய் இரண்டாம் கட்டத்தில் வரும் போது, திருமணம் மற்றும் சொந்த வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டு, அந்த நபரின் குடும்பம் பாதிக்கப்படும்.
3.செவ்வாய் நான்காம் கட்டத்தில் வரும் போது, தொழில் ரீதியான வாழ்க்கையில் பெரும் தோல்வியை சந்திப்பார்கள். ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறிக்கொண்டே இருப்பார்கள்.
4.செவ்வாய் ஏழாம் கட்டத்தில் வரும் போது, அந்த நபரிடம் இருக்கும் அளவுக்கு அதிகமான ஆற்றல் திறன் அவரை கடும் கோபக்காரராக வைத்திருக்கும். அவருடைய ஆளுமை குணத்தால் அவருடைய குடும்பத்தாருடன் அவருக்கு நல்லுறவு இருக்காது.
5. செவ்வாய் எட்டாம் கட்டத்தில் வரும் போது, தன் வீட்டு பெரியவர்களின் பகைக்கு ஆளாகி தந்தை வழி சொத்தை இழப்பார்கள்.
6. செவ்வாய் பத்தாம் கட்டத்தில் வரும் போது, அந்த நபர் மனநிலை பிரச்சனையால் அவதிப்படுவார். மேலும் எதிரிகளுடன் கூடிய நிதி சார்ந்த நஷ்டங்களை சந்திப்பார்.






