search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புஷ்பரதேஸ்வரர்"

    • ஞாயிறு திருத்தலம் சென்னையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
    • சென்னையில் உள்ள நவக்கிரக தலங்களில் இந்த தலம் சூர்ய தலம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

    ஞாயிறு கோவில் பற்றிய 25 பயனுள்ள தகவல்கள்

    1.ஞாயிறு திருத்தலம் சென்னையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

    செங்குன்றத்தில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் இருக்கிறது.

    2. சோழ மன்னர் கட்டிய இந்த கோவிலில் பல்லவ மன்னர்கள், சேர அரசர்கள், விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்து வழிபட்டுள்ளனர்.

    3. இத்தலத்து ஈசன் தாமரைப்பூவில் இருந்து தோன்றியவர் என்பதால் புஷ்பரதேஸ்வரர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    4. இத்தலத்தில் 14 செப்பு திருமேனிகள் உள்ளன.

    அவை அனைத்தும் சோழர் கால படைப்புகளாகும்.

    ஆலயத்தில் தனி அறையில் இந்த செப்பு சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    5. சென்னையில் உள்ள நவக்கிரக தலங்களில் இந்த தலம் சூர்ய தலம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

    6. இங்குள்ள சூரிய பகவானுக்கு கோதுமை பொங்கல் அல்லது கோதுமை பாயாசம் படைத்து வழிபட்டால்

    கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் ஊடல்கள் தீரும்.

    பிரிந்து போன தம்பதிகளை மீண்டும் ஒன்று சேர்க்கும் ஆற்றலும் இத்தலத்துக்கு உண்டு.

    7. வேண்டுதல் நிறைவேறிய பிறகு இத்தலத்துக்கு வந்து சூரிய பகவானுக்கு வஸ்திரம் சார்த்தி வழிபாடு செய்கிறார்கள்.

    8. இத்தலத்தின் தலமரமாக நாகலிங்க மரம் உள்ளது. தல புஷ்பமாக செந்தாமரை மலர் போற்றப்படுகிறது.

    9. இத்தலத்துக்கு செல்லும் போது, பஞ்சேஷ்டி, ஆண்டார் குப்பம், சிறுவாபுரி ஆகிய இடங்களுக்கும் சென்று வரும்

    வகையில் பயணத்தை அமைத்துக் கொண்டால், அன்றைய தினம் மிகச்சிறந்த ஆன்மிக பயண தினமாக அமையும்.

    10. ஞாயிறு கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகள் ஒரு காலத்தில் செல்வ வளம் பெற்று திகழ்ந்தன.

    இதனால் அந்த பகுதி, 'ஞாயிறு நாடு' என்று பெயர் பெற்றிருந்தது.

    11. மூர்ததி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளும் ஒருங்கிணைந்த தலமாக ஞாயிறு தலம் உள்ளது.

    12. கருவறையில் மூலவர் புஷ்பரதேஸ்வர் பஞ்சாசனத்தில் அமர்ந்துள்ளார்.

    இவர் சுயம்புவாக தோன்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    13. சித்திரை மாதம் 1ந்தேதி முதல் 5ந்தேதி வரை ஈசன் மீதும் அம்பிகை மீதும் சூரிய ஒளிவிழும்.

    தமிழ்ப்புத்தாண்டை சூரிய பகவான் இத்தலத்து ஈசன் காலடியில் பட்டு ஆசி வாங்கி தொடங்குவதாக ஐதீகம்.

    சூரியனின் இந்த வழிப்பாட்டை அந்த 5 நாட்களும் காலை 6.10 மணி முதல் 6.30 மணி வரை பக்தர்கள் காணலாம்.

    14. இத்தலம், கண்நோய், சூரியப்புத்தி தோஷம், பித்ரு சாபம் ஆகிய மூன்றையும் தீர்ப்பதில் புகழ் பெற்றது.

    15. சங்கிலி நாச்சியாருக்கு இத்தலத்தில் தனி சன்னதி உள்ளது.

    அமாவாசை தினத்தன்று இந்த சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    16. இத்தலத்துக்கு விருட்சமான நாகலிங்க மரம் சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கணிக்கப்பட்டுள்ளது.

    குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த நாகலிங்க மரத்தில் தொட்டில் கட்டி தொங்க விடுவதுண்டு.

    17. தல விருட்சமான நாகலிங்க மரம் அருகே மூன்று நாகர்சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    திருமண தடையால் தவிக்கும் இளம் பெண்கள், அந்த நாகர் சிலைகளை சுற்றி மஞ்சள் கிழங்கு சேர்த்து, மஞ்சள் கயிற்றை சுற்றி கட்டினால் உடனடியாக பலன் கிடைக்கிறது.

    18. ஞாயிறு தலத்தில் தினமும் சிவாகம முறைப்படி பூஜைகள் நடத்தப்படுகிறது.

    19. ஆவணி மாதம் சூரிய பகவானுக்கு இத்தலத்தில் 108 சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.

    20. கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை புஷ்பரமேஸ்வரருக்கு ருத்ர ஹோமம், ஏசதின லட்சார்ச்சனை நடத்தப்படுகிறது.

    21. புராதன பழமை சிறப்பு மிக்க இந்த ஆலயத்தில் பிரம்மோற்சவம் நடத்தப்படாமல் உள்ளது.

    இது உண்மையிலேயே மிகப்பெரும் குறையாகும்.

    பக்தர்கள் முன் வந்து ஒத்துழைப்புக் கொடுத்தால் ஆண்டுதோறும் ஜாம்... ஜாம்... என்று பிரம்மோற்சவம் நடத்தலாம்.

    22. ஞாயிறு ஆலயத்தில் வாகனங்கள் ஒன்று கூட இல்லாதது பெரும் குறையாகும்.

    வசதி வாய்ப்புள்ள பக்தர்கள் தங்களால் இயன்ற வாகனங்களை செய்து ஆலயத்துக்கு அன்பளிப்பாக கொடுத்தால் பெரும் புண்ணியம் வந்து சேரும்.

    23. ஞாயிறு ஆலய கருவறை விமானம் 'அஷ்டாங்க விமானம்' என்ற முறைப்படி கட்டப்பட்டுள்ளது.

    மிக, மிக பழமையான ஆலயங்களில் மட்டுமே இத்தகைய அஷ்டாங்க விமான அமைப்பை காண முடியும்.

    24. தினமும் இந்த தலத்தில் 2 கால பூஜை நடத்தப்படுகிறது.

    காலை 8 மணிக்கு ஒரு தடவையும், மாலை 6 மணிக்கு மற்றொரு தடவையும் அபிஷேகம் நடத்தப்படுகிறது.

    25. ஞாயிறு கோவில் தினமும் காலை 7.30 மணி முதல் மதியம் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் திறந்து இருக்கும்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனத்துக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படுகிறது.

    • அந்த எண்ணெய்யை ஞாயிறு புஷ்பரதேஷ்வரர் ஆலயத்தில் விளக்கு எரிக்க பயன்படுத்தினார்கள்.
    • இதுபோல பல தாழிகள் இந்த ஆலயத்தில் இருந்ததாக தெரிகிறது.

    ஞாயிறு புஷ்பரதேஷ்வரர் ஆலயத்துக்கு சென்றால் சுற்று பிரகாரத்தில்,

    திருக்குளத்துக்கு செல்லும் வழியில் மிகப்பெரிய பானை ஒன்று இருப்பதை நீங்கள் பார்க்க முடியும்.

    பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் இந்த தாழி தயாரிக்கப்பட்டுள்ளது.

    அந்த காலத்தில் ஞாயிறு ஊரிலும், அதைச் சுற்றிலும் உள்ள ஊர்களிலும் ஏராளமான இலுப்பை மரங்கள் இருந்தன.

    அந்த மரங்களில் இருந்து எண்ணெய் கிடைத்தது.

    அந்த எண்ணெய்யை ஞாயிறு புஷ்பரதேஷ்வரர் ஆலயத்தில் விளக்கு எரிக்க பயன்படுத்தினார்கள்.

    இலுப்பை எண்ணெய்யை ஆலயத்தில் சேமித்து வைப்பதற்காக இந்த பெரிய தாழி (பானை)யை நம் முன்னோர் உருவாக்கி இருந்தார்கள்.

    இதுபோல பல தாழிகள் இந்த ஆலயத்தில் இருந்ததாக தெரிகிறது.

    இந்த ஒரு பெரிய பானையே மிஞ்சி உள்ளது.

    இவ்வளவு பெரிய பானையில் இலுப்பை எண்ணெய்யை நம் முன்னோர்கள் சேமித்து வந்ததைப் பார்க்கும்போது,

    ஞாயிறு புஷ்பரதேஷ்வரர் ஆலயம், எவ்வளவு பெரிய ஆலயமாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது

    • சீதாசமேத சொர்ண கல்யாணராமருக்கு அடிக்கடி அபிஷேக அலங்காரப் பூஜைகள் நடக்கும்.
    • அபிஷகேத்திற்கு சந்தனம் வழங்கினால், சொர்க்க வாழ்வு கிடைக்கும்.

    சீதாசமேத சொர்ண கல்யாணராமருக்கு அடிக்கடி அபிஷேக அலங்காரப் பூஜைகள் நடக்கும்.

    இந்த அபிஷேகத்துக்கான பொருள்களாக எந்தெந்த பொருட்களை வழங்குவதன் மூலம் என்னென்ன பலன்கள் பெறலாம் என்ற விபரம் வருமாறு:-

    பஞ்சாமிர்தம் - வெற்றி

    பால் - நீண்ட ஆயுள்

    தேன் - இசை ஞானம்

    நெய் - சுகமான வாழ்வு

    பன்னீர் - புகழ்

    சந்தனம் - சொர்க்க வாழ்வு

    பூக்கள் - மகிழ்ச்சி

    குங்குமம் - மங்களம்

    தண்ணீர் அபிஷேகம்- மனசாந்தி

    நல்லெண்ணை - பக்தி

    வாசனை திரவியம் - ஆயுள் வலிமை

    மஞ்சள்பொடி - ராஜவசியம்

    வாழைப்பழம் - பயிர் விருத்தி

    மாம்பழம் - சகல வசியம்

    பலாப்பழம் - உலக வசியம்

    திராட்சைபழம் - பயம் நீங்குதல்

    மாதுளைப்பழம் - பகை நீங்குதல்

    தேங்காய்த்துருவல் - அரசுரிமை

    தயிர் - சந்தான (மக்கள்) விருத்தி

    இளநீர் - நல்ல புத்திரபேரு

    கருப்பஞ்சாறு - சாஸ்திரத் தேர்ச்சி

    பஞ்சகவ்யம் - ஆத்மசுத்தி பால நிவர்த்தி

    எலுமிச்சைப்பழம் - யம பயம் நீக்கும்

    நெல்லி முள்ளிப்பொடி- நோய் நீக்கம்

    வஸ்திரம் - ராஜயோகம்

    புஷ்பம் - மகிழ்ச்சி

    சந்தனம் - செல்வம் சுவர்க்கயோகம்

    கஸ்தூரி - வெற்றி உண்டாகுதல்

    கும்பம் (ஸ்நாயணம்)- அசுவமேத யாகப்பலன்

    • அப்போது சீதா சமேத சொர்ண கல்யாணராமர், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் சிலைகள் கிடைத்தன.
    • முழுவதும் பச்சை நிற மரகத கல்லால் அந்த சிலை வடிவமைக்கப்பட்டு இருந்தது.

    ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் ஆலயத்தின் நுழைவாயில் இடது பக்கம் சீதா சமேத சொர்ண கல்யாணராமர் ஆலயம் உள்ளது.

    இது சமீபத்தில் உருவான ஆலயம்தான்.

    ஆனால் இந்த ஆலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இறை மூர்த்தங்கள் அனைத்தும் பல நூற்றாண்டுகள் முற்பட்டவை.

    கடந்த 2002-ம் ஆண்டு ஞாயிறு கிராமத்தில் பள்ளிக்கூடத்தை சீரமைக்க பள்ளம் தோண்டினார்கள்.

    அப்போது சீதா சமேத சொர்ண கல்யாணராமர், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர் சிலைகள் கிடைத்தன.

    அந்த சிலைகளை தொல்பொருள் துறையினர் ஆய்வு செய்தபோது பல ஆச்சரியமான தகவல்கள் தெரியவந்தன.

    குறிப்பாக சக்கரத்தாழ்வார் சிலை சுமார் 800 ஆண்டுகள் பழமையானது என்று தெரியவந்தது.

    முழுவதும் பச்சை நிற மரகத கல்லால் அந்த சிலை வடிவமைக்கப்பட்டு இருந்தது.

    பல்லவ மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டிருப்பதும் தெரிந்தது.

    இந்த சக்கரத்தாழ்வார் சிலையின் ஒரு பக்கத்தில் சுதர்சனரும், பின்பக்கத்தில் யோக நரசிம்மரும் வீற்றுள்ளனர்.

    இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையும், கடைசி ஞாயிற்றுக்கிழமையும் "இத்தலத்தில் சுதர்சன ஹோமம்" நடத்தப்படுகிறது.

    காலை 9 மணி முதல் 12 மணி வரை இந்த சுதர்சன ஹோமம் நடைபெறும்.

    பக்தர்களும் இந்த ஹோமத்தில் பங்கேற்கலாம்.

    வசதி உள்ளவர்கள் சுதர்சன ஹோமத்திற்கு நெய், பால், தயிர், தேன் போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம்.

    சுதர்சன ஹோமம் செய்தாலோ அல்லது பங்கேற்றாலோ ராகு-கேது தோஷம் உடனே விலகி விடும்.

    இத்தலத்து ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

    ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமான், சூரியனை வழிபட்ட பிறகு மறக்காமல் அருகில் உள்ள சீதா சமேத கல்யாணராமரையும் வழிபடவும்.

    மனதுக்கு அமைதி கிடைக்கும்.

    • ஓம் என்பது பிரணவம், இந்த பிரணவமே வேதத்தின் மூலம்.
    • வி+நாயகன் என்றால், வேறு தலைவர் இல்லாதவர் என்பது பொருள்.

    ஓம் என்பது பிரணவம், இந்த பிரணவமே வேதத்தின் மூலம்.

    ஓம் என்ற ஒலியின் வடிவமே பிள்ளையார்.

    பிள்ளையார் ஒப்பாரும் மிக்கவரும் இல்லாதவர்.

    தனக்கு மேல் தலைவன் இல்லாதவர்.

    வடமொழியில் இவர் பெயர் விநாயகன்.

    வி+நாயகன் என்றால், வேறு தலைவர் இல்லாதவர் என்பது பொருள்.

    அவர் இவ்வாலயததின் முதற் கடவுளாக எழுந்தருளியிருக்கிறார்.

    கி.பி. 7 நூற்றாண்டு இவருக்கு காசியில் துண்டி வினாயகர் என்ற பெயர்.

    பல்லவர் காலத்து சிற்பம் என்ற பெருமையும் உண்டு.

    இவரைச் சிறப்பாக வழிபடும் நாட்கள், வெள்ளிக்கிழமை, மாதந்தோறும் வளர்பிறை சதுர்த்தி, ஆவணி சதுர்த்தி, செவ்வாய்க்கிழமை.

    பிரம்மாவிடம் ஓம் என்ற பிரணவத்தின் விளக்கம் கேட்டுத் தெரியாமல் நின்ற படைப்புக் கடவுளை 

    அடைத்து விட்டுத் தந்தை சிவபெருமானிடம் நியாயம் எடுத்து உரைத்த முருகப்பெருமான்

    இவ்வாலயத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய பெருமானாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாவித்து வருகிறார்.

    இவருக்கு சித்திரை கிருத்திகையில் சிறப்பான விழா நடைபெறுகிறது.

    மற்ற எல்லாக் கிருத்திகை தோறும் வழிபாடு மெய்யன்பர்கள் செய்து வருகிறார்கள்.

    • ஞாயிறு கோவில் ஆதிசங்கரரையும், திருஞானசம்பந்தரையும் தொடர்பு கொண்டது.
    • அன்னையின் தரிசனம் கண்டவர்கள் அங்கேயே சிலையாக நின்று விடுவார்கள்.

    ஞாயிறு கோவில் ஆதிசங்கரரையும், திருஞானசம்பந்தரையும் தொடர்பு கொண்டது.

    இங்கு சொர்ணாம்பிகையை பூ பதஞ்செய்து சில்பப் பிரதிட்சை செய்து நவமாதா பீடத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டசை செய்தார்.

    இதனைக் காட்ட ஒரு தூணில் தண்டமேற்றிய ஆதிசங்கரரின் திருஉருவம் வடிக்கப்பட்டுள்ளது.

    அன்னையின் தரிசனம் கண்டவர்கள் அங்கேயே சிலையாக நின்று விடுவார்கள்.

    தாமரைத்தண்டு போல் விளங்கும் இரண்டு கைகளில் பூத்துக் குலுங்கும் மலர்கள், ஒரு கை அபயமும், அம்பிகையின் பாதங்கள் செம்பஞ்சுக் குழம்பினால் சிவந்திருக்குமாம்.

    இங்கும் குங்கும அர்ச்சனையால் செஞ்சுடர் பூச்சை காணலாம்.

    காமகோடி பீடாதிபதியின் பாதம் பட்ட இடமெல்லாம் காமாட்சியின் தொடர்பு இருந்தாக வேண்டுமே.

    எதிர்ப்புறத் தூணில் ஓமத்தீ வளர்த்து, அதன் நடுவே ஊசி முனையில் தவமியற்றும் காமாட்சி உருவமுள்ளது.

    ஸ்ரீ ஆதிசங்கரர் நவ மாதா பீடம் பிரதிட்டை செய்தார். இப்போது பீடம் மட்டும்தான் இருக்கிறது.

    காஞ்சி காமகோடி பீடாதிபதி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கரச்சாரிய சாமிகள் அருள் ஆசியுடன் ஸ்ரீவித்யா வெங்கட்ராம் சாஸ்திரிகள் மற்றும் அடியார்கள் சவுபாக்ய பஞ்ச சக்தி மகாயந்திரம் பிரதிட்சை செய்தார்கள்.

    வெள்ளிக்கிழமை பவுர்ணமி தினத்தில் ஞாயிறு அன்று சொர்ணாம்பிகை தரிசனம் செய்ய வேண்டும்.

    தரிசனம் செய்தால் இந்த பஞ்ச மகா சக்திகளை வாங்கிய பலன் கிடைக்கும்.

    பஞ்ச மகா சக்திகளின் தலங்கள்

    ஞாயிறு - சொர்ணவடிவு

    மயிலை - கற்பக வடிவு

    மேலூர் - திருவுடைய வடிவு

    திருவொற்றியூர் - வடிவுடைய வடிவு

    திருமுல்லைவாயில் - கொடியிடைய வடிவு பஞ்சவடிவு அம்சங்கள்

    • இப்பகுதியானது சங்கிலிநாச்சியார் அவதரித்து வளர்ந்த பெருமையுடையது.
    • இப்பகுதியானது சங்கிலிநாச்சியார் அவதரித்து வளர்ந்த பெருமையுடையது.

    இப்பகுதியானது சங்கிலிநாச்சியார் அவதரித்து வளர்ந்த பெருமையுடையது.

    பழைய சிவாலயம் உண்டு.

    சோழர் காலத்து திருப்பணியுடையது.

    சுவாமி பூதேரிஸ்வரர் (புஷ்பரதேஸ்வர்) அம்மை சொர்ணாம்பிகை கோவில்களுடைய காரணீசுவரர் சந்நிதி உண்டு.

    மற்றும் கபாலீசுவரர், ஜம்புகேஸ்வரர், ரணேயேஸ்வரர் என்ற மூன்று சந்திதிகளும் உண்டு.

    காசியாத்திரையாக இவ்வழி வந்த சோழ அரசர், இங்கு தடாகத்து நடுவில் தனியாய் மலர்ந்திருந்த அழகியதோர் தாமரை மலரைப் பறிக்க முயன்றபோது

    கண் மறைந்ததாகவும், யாத்திரை செய்து திரும்புகையில் திருப்பணி செய்வதற்காக பிரார்த்தித்தவுடன் அரைக் கண் பார்வை பெற்றதாகவும்,

    அவ்வாறே திரும்பி வந்தபோது அந்த தாமரையின் மேல் இறைவன் பேரொளியுடன் ஞாயிறாகத் தோன்றியதாகவும்,

    அந்த இடத்தில் கர்பக் கிரகம் அமைத்து திருப்பணி செய்தபின் கண் ஒளி முழுவதும் பெற்றதாகவும்,

    அது முதல் இத்தலத்திற்கு ஞாயிறு என்று பெயர் வழங்குவதாகவும் வருவது கர்ணபரம்பரை வரலாறு.

    (சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணி முதலியார் பெரியபுராணம் என்ற தம் ஆராய்ச்சி நூலில் எழுதியுள்ளார்)

    • ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின.
    • எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள்.

    இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன.

    ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின.

    உலகங்களே தோன்றவில்லை.

    இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள்.

    அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார்.

    அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று

    பெயர் பெற வேண்டும் என்றும் அதனை சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும்

    அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடைய வேண்டும் என்று பிராத்தித்தார்.

    இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார்.

    அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப் பெற்றார்.

    • முதல் யாமம் வழிபட வேண்டிய மூர்த்தம் - சோமாஸ்கந்தர்.
    • இரண்டாம் யாமம் வழிபட வேண்டிய மூர்த்தம் - தென்முகக் கடவுள்.

    முதல் யாமம்

    வழிபட வேண்டிய

    மூர்த்தம்- சோமாஸ்கந்தர்

    அபிஷேகம்- பஞ்சகவ்யம்

    அலங்காரம்- வில்வம்

    அர்ச்சனை- தாமரை, அலரி

    நிவேதனம்- பால் அன்னம்,சக்கரைபொங்கல்

    பழம்- வில்வம்

    பட்டு- செம்பட்டு

    தோத்திரம்- இருக்கு வேதம் , சிவபுராணம்

    மணம்- பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம்

    புகை- சாம்பிராணி, சந்தணக்கட்டை

    ஒளி- புட்பதீபம்

    இரண்டாம் யாமம்

    வழிபட வேண்டிய

    மூர்த்தம்- தென்முகக் கடவுள்

    அபிஷேகம்- பஞ்சாமிர்தம்

    அலங்காரம்- குருந்தை

    அர்ச்சனை- துளசி

    நிவேதனம்- பாயசம், சர்க்கரைப் பொங்கல்

    பழம்- பலா

    பட்டு- மஞ்சள் பட்டு

    தோத்திரம்- யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல்

    மணம்- அகில், சந்தனம்

    புகை- சாம்பிராணி, குங்குமம்

    ஒளி- நட்சத்திரதீபம்

    மூன்றாம் யாமம்

    வழிபட வேண்டிய

    மூர்த்தம்- லிங்கோற்பவர்

    அபிஷேகம்- தேன், பாலோதகம்

    அலங்காரம்- கிளுவை, விளா

    அர்ச்சனை- மூன்று இதழ் வில்வம், சாதி மலர்

    நிவேதனம்- எள்அன்னம்

    பழம்- மாதுளம்

    பட்டு- வெண் பட்டு

    தோத்திரம்- சாம வேதம், திருவண்டப்பகுதி

    மணம்- கஸ்தூரி சேர்ந்த சந்தணம்

    புகை- மேகம், கருங் குங்கிலியம்

    ஒளி- ஐதுமுக தீபம்

    நான்காம் யாமம்

    வழிபட வேண்டிய

    மூர்த்தம்- சந்திரசேகரர்(இடபரூபர்)

    அபிஷேகம்- கருப்பஞ்சாறு, வாசனை நீர்

    அலங்காரம்- கரு நொச்சி

    அர்ச்சனை- நந்தியாவட்டை

    நிவேதனம்- வெண்சாதம்

    பழம்- நானாவித பழங்கள்

    பட்டு- நீலப் பட்டு

    தோத்திரம்- அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்

    மணம்- புணுகு சேர்ந்த சந்தணம்

    புகை- கர்ப்பூரம், இலவங்கம்

    ஒளி- மூன்று முக தீபம்

    • மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும்.
    • சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.

    மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும்.

    இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.

    இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறிய நூல்.

    சிவராத்திரி விரத வகைகள்

    சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.

    நித்திய சிவராத்திரி

    மாத சிவராத்திரி

    பட்ச சிவராத்திரி

    யோக சிவராத்திரி

    மகா சிவராத்திரி

    ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும்.

    சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.

    விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய்

    காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்ய வேண்டும்.

    அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி

    (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

    சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.

    • சிவராத்திரிக்கு ஞாயிறு தலத்தில் இரவில் 4 ஜாம பூஜை நடைபெற உள்ளது.
    • 4-வது ஜாம பூஜை அதிகாலை 3 மணிக்கு நடைபெறும்.

    சிவராத்திரிக்கு ஞாயிறு தலத்தில் இரவில் 4 ஜாம பூஜை நடைபெற உள்ளது.

    முதல் ஜாம பூஜை இரவு 7 மணிக்கு நடைபெறும். 2-வது ஜாம பூஜை இரவு 9 மணிக்கும்,

    3-ம் ஜாம பூஜை நள்ளிரவு 11.30 மணிக்கும் நடைபெறும்.

    4-வது ஜாம பூஜை அதிகாலை 3 மணிக்கு நடைபெறும். அன்று இரவு முழுக்க கோவில் நடை திறந்திருக்கும்.

    ஒவ்வொரு ஜாம பூஜைக்கும் அபிஷேகங்கள், ஆராதனைகள் அனைத்தும் மாறுபடும்.

    பக்தர்கள் சிவராத்திரி அபிஷேக பூஜைகளுக்கு தேன், பால், விபூதி, பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வகைகளை

    வாங்கி கொடுத்து சிவபெருமான் அருளை பெறலாம் என்று ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

    • பின்னர் புத்தாடை அணிய வேண்டும். புத்தாடை என்றால் புதிய ஆடை என்று அர்த்தம் அல்ல.
    • வீட்டில் இருந்து கொண்டு வரும் ஏதாவது ஒரு தூய்மையான ஆடையை அணிய வேண்டும்.

    ஞாயிறு திருத்தலம் கண்நோய் தீர்ப்பதோடு பித்ருக்கள் வழிபாட்டுக்கும் மிக மிக உகந்த தலமாக திகழ்கிறது.

    சிலருக்கு பித்ருக்கள் தோஷம் இருந்து கொண்டேஇருக்கும். சிலர் தங்கள் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பதை அறியாமல் இருப்பார்கள்.

    மேலும் சிலர் பித்ருக்கள் தோஷம் இருப்பதை அறிந்தும் அதற்கு உரிய பரிகாரத்தை செய்யாமல் இருப்பார்கள்.

    அத்தகைய நிலையில் இருப்பவர்கள் இந்த தலத்துக்கு ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை வந்து முறையான வழிபாடு செய்ய வேண்டும்.

    முதலில் அவர்கள் அங்குள்ள சூரிய தீர்த்தத்தில் இறங்கி குளிக்க வேண்டும்.

    பிறகு நனைந்த உடைகளை அங்கேயே குளத்துக்குள் விட்டு விடவேண்டும்.

    பின்னர் புத்தாடை அணிய வேண்டும். புத்தாடை என்றால் புதிய ஆடை என்று அர்த்தம் அல்ல.

    வீட்டில் இருந்து கொண்டு வரும் ஏதாவது ஒரு தூய்மையான ஆடையை அணிய வேண்டும்.

    பிறகு ஆலயத்துக்குள் வந்து சூரிய பகவானுக்கும், சிவபெருமானுக்கும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

    பித்ரு தோஷம் காரணமாக என்ன பிரச்சினை ஏற்பட்டு உள்ளது என்று அர்ச்சகரிடம் கூறினால் அவர் அதற்கேற்ப வழிபாடுகளை செய்ய உதவுவார்.

    இதன் மூலம் பித்ரு தோஷங்களை மிக எளிதாக தீர்க்கலாம்

    ×