செய்திகள்

கட்சியைவிட நாட்டு நலனே முக்கியம் - எல்.கே.அத்வானி

Published On 2019-04-04 14:01 GMT   |   Update On 2019-04-04 14:01 GMT
சொந்த நலனை விடவும், கட்சியை விடவும் நாட்டு நலன்தான் எனக்கு முக்கியம் என பாஜக மூத்த தலைவர் எல் கே அத்வானி இன்று தெரிவித்துள்ளார். #BJP #LKAdvani
புதுடெல்லி:

மத்தியில் ஆட்சியை பிடித்துள்ள பாரதிய ஜனதா கட்சி உதயமான நாள் ஏப்ரல் மாதம் 6ம் தேதி. இதையொட்டி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தனது வலைத்த்ள பக்கத்தில் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

எனக்கு நாட்டு நலனே முதன்மையானது. நாட்டுக்கு பிறகு கட்சியின் நலன். அதற்கு பிறகே சொந்த நலன் முக்கியம் என எண்ணுகிறேன். அரசியல் ரீதியாக மாறுபட்ட கருத்துடையவர்களை தேச விரோதிகள் என்பது பாஜகவின் கொள்கையல்ல.



குஜராத் மாநிலம் காந்திநகர் பாராளுமன்ற தொகுதியில் என்னை 6 முறை வெற்றிபெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். 

வரும் பாராளுமன்ற தேர்தலில் அத்வானி போட்டியிட்ட காந்திநகர் தொகுதியில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #BJP #LKAdvani
Tags:    

Similar News