செய்திகள்

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு

Published On 2019-06-09 13:56 GMT   |   Update On 2019-06-09 13:56 GMT
கரூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.

கரூர்:

கரூர் சட்டமன்ற தொகு திக்குக்கு உட்பட்ட மண்மங் கலம், ஆத்தூர், காதப்பாறை பகுதிகளில் காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலமாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் இந்த பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு போக்கு வரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை காவிரி ஆற்றில் நீருந்து நிலையம் அமைந்துள்ள கடம்பங்குறிச்சி மேட்டுப்பாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது கரூர் ஒன்றிய செயலாளர்கள் கமலக்கண்ணன், வேலுச்சாமி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News