செய்திகள்

முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு

Published On 2019-06-05 09:25 GMT   |   Update On 2019-06-05 09:25 GMT
தென்மேற்குபருவமழை தாமதமாவதால் முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:

வழக்கமாக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து ஜூன் மாதம் முதல் வாரம் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு கோடை மழை ஏமாற்றியது.

பருவமழையும் தாமதமாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது சாரல் மழையே பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 112 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 71 கன அடி நீர் வருகிறது. நேற்றுவரை இரைச்சல் பாலம் வழியாக தமிழக பகுதி குடிநீருக்காக 100 கன அடி நீர் திறக்கப்பட்டது. தற்போது மழை இல்லாததால் நீர்மட்டம் வேகமாக குறைகிறது. எனவே இன்று காலை முதல் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 70 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் 34.65 அடியாக உள்ளது.வரத்து இல்லை. மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 36 அடி. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 86.42 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

கூடலூர் 1.2, சண்முகாநதி அணை 5, உத்தமபாளையம் 7.6, வீரபாண்டி 2, வைகை அணை 3, சோத்துப்பாறை அணை 2, கொடைக்கானல் 3.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
Tags:    

Similar News