செய்திகள்

சசிகலாவின் வரவுக்காக அமமுக தலைவர் பதவி - தினகரன் பேட்டி

Published On 2019-04-19 16:31 GMT   |   Update On 2019-04-19 16:31 GMT
சசிகலாவின் வரவுக்காக அமமுக தலைவர் பதவியை காலியாக வைத்திருக்கிறோம் என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார். #dinakaran #sasikala #electioncommission
சென்னை:

சென்னை அசோக்நகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் டிடிவி தினகரன் கூறியதாவது:-

இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 தொகுதிகளுக்கும் பரிசுப்பெட்டகம் சின்னம் வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன்.  சசிகலாவிடம் ஆலோசனை செய்துதான் நான் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.  

சசிகலாவின் வரவுக்காக அமமுக தலைவர் பதவியை காலியாக வைத்திருக்கிறோம். 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர்கள் வரும் 22-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள். அமமுகவை கட்சியாக பதிவு செய்வது தொடர்பாக ஏப்.22-ல் மனு அளிக்கவுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். #dinakaran #sasikala #electioncommission
Tags:    

Similar News