செய்திகள்

அரக்கோணம் அருகே ரூ.20 லட்சம் குட்கா பறிமுதல் - தூத்துக்குடி வியாபாரி கைது

Published On 2019-01-12 05:11 GMT   |   Update On 2019-01-12 05:11 GMT
அரக்கோணம் அருகே வாடகை வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
அரக்கோணம்:

தூத்துக்குடியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் லட்சுமிகாந்தன் (வயது 27). அரக்கோணத்தில் மளிகை கடை வைத்துள்ளார். தக்கோலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தார்.

இதுபற்றி அரக்கோணம் டி.எஸ்.பி. துரைபாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது தலைமையில் போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.

அப்போது குட்காவை காரில் ஏற்றிக் கொண்டிருந்த ராமச்சந்திரன் (45) என்பவரை மடக்கி பிடித்தனர். அந்த காரில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர்.

அங்கு ஏராளமான அட்டை பெட்டிகள், மூட்டைகளில் குட்கா, புகையிலை பொருட்கள் இருந்தன. அங்கிருந்த 2½ டன் குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

தடை செய்யப்பட்ட குட்கா, மற்றும் புகையிலை பொருட்களை லாரி மூலம் பெங்களூருவில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. இந்த வீட்டை தக்கோலத்தில் மளிகை கடை நடத்தி வரும் காமராஜ் என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார். இதன் மூலம் அவர் குட்கா பதுக்கி வைக்க உதவியாக இருந்தது தெரியவந்தது.

போலீசார் 3 பேரையும் தக்கோலம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Gutka
Tags:    

Similar News