லைஃப்ஸ்டைல்

சத்து நிறைந்த கொள்ளு சட்னி

Published On 2019-01-25 04:49 GMT   |   Update On 2019-01-25 04:49 GMT
அருமையான மருத்துவகுணம் கொண்ட கொள்ளு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. இன்று கொள்ளுவில் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

கொள்ளு - 1/4 கப்
கடலைப் பருப்பு - 1 டேபிள்
ஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
வரமிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு…

எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 3/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது



செய்முறை:

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளுவை போட்டு பொன்னிறமாக வாசனை வரும் வரை வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

அதே வாணலியில் கடலைப் பருப்பு, சீரகம், வரமிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து 3 நிமிடம் வறுத்து, பின் அதில் வறுத்த கொள்ளு சேர்த்து, மீண்டும் 2 நிமிடம் வறுத்து, இறக்கி குளிர வைக்க வேண்டும்.

அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு, அத்துடன் புளி சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிப்பதற்கு கொடுத்துள்ளபொருட்களை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றி கிளறினால், கொள்ளு சட்னி ரெடி!!!

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News