search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரோக்கிய சமையல்"

    • கேழ்வரகில் அரிசியைவிட குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிகளவு நார்ச்சத்து உள்ளது.
    • கேழ்வரகில் அதிக அளவில் புரதம் உள்ளது.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு – 50 கிராம்

    பாதாம், முந்திரி, திராட்சை (ஊற வைத்தது) – தலா 4

    பேரீச்சை – 5

    காய்ச்சியப் பால் – 200 மி.கி

    ஏலப்பொடி – 1 தேக்கரண்டி

    நாட்டு சர்க்கரை – சுவைக்கேற்ப

    செய்முறை:

    ஊற வைத்து தோல் நீக்கிய பாதாம், முந்திரி, திராட்சை, பேரீச்சையை சிறிது பால் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    முதல்நாள் இரவில் ஊற வைத்த கேழ்வரகை நீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். சக்கையை மீண்டும் சிறிது நீர் விட்டு அரைத்து வடிக்கட்டவும். இப்போது இரண்டு கேழ்வரகு பாலையும் ஒன்றாக சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் காய்ச்சவும்.

    அதனுடன் அரைத்த பாதாம் விழுது, மீதம் உள்ள பால், ஏலப்பொடி சேர்த்து மேலும் சிறிது நேரம் காய்ச்சி இறக்கவும்.

    இப்போது நீங்கள் எதிர்பார்த்த சத்தான மற்றும் ஆரோக்கியமான கேழ்வரகு டிரை ஃப்ரூட்ஸ் மில்க் ஷேக் தயார்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பார்லி ரத்த சர்க்கரை, கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவும்.
    • இதய நோயாளிகளுக்கு பார்லி அற்புதமான உணவு.

    தேவையான பொருட்கள்

    பார்லி தூள் - 2 டீஸ்பூன் (பார்லி அரிசியை நன்றாகக் கழுவி உலர வைத்த பிறகு கடாயில் வறுத்து அரைத்துக்கொண்டால் பார்லி தூள் ரெடி)

    பார்லி அரிசி - 4 டீஸ்பூன்

    பீன்ஸ், கேரட் - தலா 50 கிராம்

    மிளகு தூள் - 3 டீஸ்பூன்

    வெங்காயத்தாள் - சிறிதளவு

    துளசி இலை - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    கேரட், பீன்ஸ், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பார்லி அரிசியை நான்கு மணி நேரம் ஊறவைத்து பிறகு நன்றாக வேகவைத்துக் கொள்ளவும்.

    பீன்ஸ், கேரட்டை தனியாக வேகவைத்துக்கொள்ளவும்.

    ஒரு கடாயில் வேகவைத்த பார்லி அரிசி, வேகவைத்த பீன்ஸ், கேரட்டைப் போட்டு தேவையான அளவு உப்பு, பார்லி தூள், தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவந்தவுடன் மிளகுத்தூள், உப்பு, நறுக்கிய வெங்காயத்தாள் சிறிதளவு, துளசி இலைகளைக் கிள்ளிப்போட்டு, ஒரு கொதிவந்தவுடன் இறக்கினால் சுவையான பார்லி வெஜிடபிள் சூப் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சேலம் மாவட்ட மக்களின் கால நேர சிற்றுண்டி இது.
    • டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள்

    பச்சை வேர்க்கடலை - 50 கிராம்

    வெள்ளை அவல் - 100 கிராம்

    வெங்காயம் - 1

    ப.மிளகாய் - 3

    பூண்டு - 3 பல்

    இஞ்சி - சிறிய துண்டு

    சிவப்பு மிளகாய் - 4

    கறிவேப்பிலை - சிறிதளவு

    கொத்தமல்லி இலை - தேவையான அளவு

    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

    கடுகு - 1/4 டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

    உப்பு - சுவைக்க

    எண்ணெய் - சமையலுக்கு

    செய்முறை

    பூண்டு, இஞ்சி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அவலை நன்றாக கழுவி சிறிது தண்ணீர் தெளித்து ஊற வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெண் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பச்சை வேர்க்கடலையை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, ப.மிளகாய் போட்டு வதக்கவும்.

    அடுத்து மஞ்சள் தூள் சேர்க்கவும்.

    வேர்க்கடலை நன்றாக வெந்த பின்னர் ஊறவைத்த அவல், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

    அவல் வெந்து உதிரி உதிரியாக வந்தவுடன்கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாறு பிழிந்து இறக்கி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சேலம் ஸ்பெஷல் அவல் சுண்டல் ரெடி.

    வேர்க்கடலைக்கு பதில், ராஜ்மா, கொண்டைக்கடலை, பச்சை பட்டாணி சேர்த்தும் செய்யலாம். சிவப்பு அவல் வைத்தும் இந்த ரெசிபியை செய்யலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த ஜூஸ் சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லது.
    • குழந்தைகளுக்கு இது சத்தான ஜூஸ்.

    தேவையான பொருட்கள்

    நெல்லிக்காய் - 6

    கறிவேப்பிலை- சிறிதளவு

    கொத்தமல்லி - சிறிதளவு

    இஞ்சி - சிறிய துண்டு

    புதினா - சிறிதளவு

    உப்பு -தேவையான அளவு

    தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை

    புதினா, கொத்தமல்லியை நன்றாக கழுவி வைக்கவும்.

    இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    நெல்லிக்காயை கொட்டை நீக்கி துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்சி ஜாரில் நறுக்கிய நெல்லிக்காயை போட்டு அதனுடன் கறிவேப்பிலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு நைசாக அரைத்து வடிகட்டவும்.

    வடிகட்டிய ஜூஸை பிரிட்ஜில் வைத்து பரிமாறவும்.

    இப்போது சத்தான நெல்லிக்காய் ஜூஸ் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கேழ்வரகில் பல்வேறு சத்தான ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று தட்டு இட்லி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    கேழ்வரகு - 1 கப்

    இட்லி அரிசி - 1 கப்

    உளுந்து - அரை கப்

    வெந்தயம் - 1 டீஸ்பூன்

    ஜவ்வரிசி - 5 டீஸ்பூன்

    உப்புபு - தேவையான அளவு

    செய்முறை

    கேழ்வரகு, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயத்தை நன்றாக கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவும்.

    ஜவ்வரிசியை தனியாக ஊற வைக்கவும்.

    இரண்டையும் தனித்தனியாக அரைத்து ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கரைத்து 7 மணிநேரம் புளிக்க விடவும்.

    தட்டு இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி 15 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சத்தான தட்டு இட்லி ரெடி.

    இதற்கு தொட்டுக்கொள்ள காரசட்னி, தேங்காய் சட்னி சூப்பராக இருக்கும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு பள்ளிக்கு இந்த ரெசிபியை கொடுத்தனுப்பலாம்.
    • இந்த சாட் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    முறுக்கு - தேவையான அளவு

    கேரட் - 1

    பீட்ரூட் - 1

    வெங்காயம் - 1

    எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லித்தழை - 1 கட்டு

    தேங்காய் - 1 துண்டு

    பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி

    பச்சை மிளகாய் - 5

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், கேரட், பீட்ரூட் ஆகியவற்றை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்.

    அவற்றுடன் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.

    இந்த கலவையை அரை மணி நேரத்துக்கு அப்படியே மூடி வைக்கவும்.

    ஒரு மிக்சி ஜாரில் கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், தேங்காய், பொட்டுக்கடலை, உப்பு ஆகியவற்றை போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக சட்னி பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் முறுக்கை பொடியாக நொறுக்கிப் போடவும்.

    அதனுடன் 2 தேக்கரண்டி சாலட் கலவை (கலந்து வைத்த காய்கறி), 1 தேக்கரண்டி சட்னி சேர்த்து நன்றாகக் கிளறினால் சுவையான 'முறுக்கு காய்கறி சாட் ' ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • காய்கறிகளை சாப்பிடாத குழந்தைகளுக்கு இதை செய்து கொடுக்கலாம்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    ரவை - 1 கப்

    பெரிய வெங்காயம்- 1

    தக்காளி - 1

    கேரட்- 1

    பச்சைப்பட்டாணி- கால் கப்

    உருளைக்கிழங்கு - 1

    முட்டைக்கோஸ்- துருவியது கால் கப்

    இஞ்சி- சிறிய துண்டு

    பச்சை மிளகாய்- 2

    மிளகாய் வற்றல்- 2

    உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் - தேவையான அளவு

    கொத்தமல்லி- அலங்கரிக்க

    தாளிக்க:

    நெய் அல்லது எண்ணெய் - 1 தேக்கரண்டி

    கடுகு- 1 டீஸ்பூன்

    கடலைப்பருப்பு- 1 டீஸ்பூன்

    வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை- 1 இணுக்கு

    செய்முறை:

    * தக்காளி, வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, காய்கறிகள், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * வெறும் கடாயில் ரவையை போட்டு சிவக்க வறுக்கவும்.

    * பச்சை பட்டாணியை வேக வைத் கொள்ளவும்.

    * 1 கப் ரவைக்கு 1 1/2 கப் தண்ணீரை வேக வைக்க வேண்டும், அதற்கு 1 1/2 கப் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும்.

    * வாணலியில் எண்ணெயிட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் இஞ்சி, ப.மிளகாய், காய்ந்த மிளகாய், வெங்காயத்தை வதக்க வேண்டும்.

    * பிறகு காய்கறிகளைச் சேர்த்து வதக்கின பிறகு கடைசியாகத் தக்காளியைச் சேர்க்க வேண்டும். தக்காளி சீக்கிரம் வதங்கி விடும் என்பதால் இறுதியில் சேர்த்தால் போதும்.

    * அடுத்து அதில் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி வேக விடவும்.

    * அடுத்து அதில் உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்து வேக விடவும்.

    * காய் வெந்தவுடன் வறுத்த ரவையைக் கொதிக்கும் கலவையுடன் கொட்டிக் கொண்டே கிளற வேண்டும்(இல்லையென்றால் அடி பிடித்து விடும்).

    * ரவை வெந்து எண்ணெயிடும் போது ஒட்டாமல் வரும், அப்போது கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.

    * இப்போது சூப்பரான காய்கறி ரவா உப்புமா ரெடி.

    * பத்து நிமிடங்களில் தயார் செய்து விடக் கூடிய எளிய சுவை மிகுந்த சிற்றுண்டி வகை இது.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • மூளையின் செல்கள் வளர்ச்சிக்கு வல்லாரைக்கீரை பெரிதும் உதவும்.
    • இந்த இந்த துவையல் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    வல்லாரைக்கீரை - ஒரு கப்,

    பூண்டு - 2 பல்,

    தேங்காய் துருவல் - கால் கப்,

    காய்ந்த மிளகாய் - 5,

    எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்,

    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    வல்லாரைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வல்லாரைக்கீரை, பூண்டு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி ஆறவைத்து ஆறியதும் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.

    அரைத்த விழுதில் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

    இப்போது சத்தான சுவையான வல்லாரை துவையல் ரெடி.

    குறிப்பு: ஞாபக சக்தி, உடல் வலிமை, மூளையின் செல்கள் வளர்ச்சிக்கு வல்லாரைக்கீரை பெரிதும் உதவும். புளி சேர்க்காமல் இதை சமைக்க வேண்டும். அப்போதுதான் இதன் முழு பலனும் கிட்டும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வரகரிசி உணவுகளை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
    • கொள்ளு அதிக புரதச்சத்து நிறைந்தது.

    தேவையான பொருட்கள்:

    வரகு அரிசி - 200 கிராம்

    கொள்ளு - 50 கிராம்

    சீரகம் - 2 டீஸ்பூன்

    மிளகு - 15

    நெய் - 3 டீஸ்பூன்

    தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்

    தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு

    பச்சை மிளகாய் - ஒன்று

    கொத்தமல்லித்தழை - சிறிதளவு

    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கொள்ளுப் பயறை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

    வரகரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும்.

    குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும்.

    அதனுடன் இஞ்சி - பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

    பிறகு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    அதனுடன் கொள்ளு, வரகு சேர்த்து குக்கரை மூடி ஆறு விசில்விட்டு இறக்கவும்.

    குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

    சத்தான சுவையான வரகு அரிசி கொள்ளு பொங்கல் ரெடி.

    குறிப்பு: விரும்பினால் முந்திரி சேர்க்கலாம். சாதாரண அரிசியைவிட சிறுதானியங்கள் இறுகும் தன்மையுடையதால் தண்ணீர் அதிகமாகச் சேர்க்கவும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • டயட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் இது.
    • குழந்தைகளுக்கு சத்தானது இந்த ஸ்நாக்ஸ்.

    தேவையான பொருட்கள்

    பீட்ரூட் - 2,

    பெரிய உருளைக்கிழங்கு - 1,

    கொண்டைக் கடலை - 1 கப்,

    வெங்காயம் - 1,

    பச்சை மிளகாய் - 2,

    இஞ்சி - சிறிய துண்டு,

    கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சோம்பு - தலா 1/2 டீஸ்பூன்,

    கொத்தமல்லித்தழை - சிறிது.

    உப்பு, எண்ணெய் - தேவைக்கு,

    செய்முறை

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

    கொண்டைக் கடலையை 8 மணிநேரம் ஊற வைத்து குழையாமல் பதமாக வேகவைக்கவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லித்தழை, இஞ்சி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பீட்ரூட்டை தோல் நீக்கி துருவி கடாயில் போட்டு லேசாக வதக்கவும்.

    மிக்சியில் கொண்டைக்கடலையை கரகரப்பாக அரைத்து அதனுடன் வதக்கிய பீட்ரூட்டை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த பீட்ரூட் கலவை, மசித்த உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய ப.மிளகாய், கொத்தமல்லித்தழை, இஞ்சி, வெங்காயம், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சோம்பு , உப்பு சேர்த்து நன்றாக கெட்டியாகப் பிசைந்து விருப்பமான வடிவத்தில் செய்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த டிக்கிகளை வைத்து மேலே சிறிது எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து, விரும்பினால் மேலே முந்திரி பதித்து, சாட் மசாலா தூவி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான பீட்ரூட் சென்னா டிக்கி ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • புளிச்சக்கீரயில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து நிறைந்தது.
    • இந்த கீரை சாப்பிட்டால் மலச்சிக்கல் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

    தேவையான பொருட்கள்

    புளிச்சக்கீரை - 2 கப்,

    தனியா தூள் - 1/2 டீஸ்பூன்,

    மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,

    எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு,

    வேர்க்கடலைத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்,

    சர்க்கரை மற்றும் பெருங்காயம் - 1 சிட்டிகை,

    கடுகு உளுந்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்.

    செய்முறை

    புளிச்சக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பை போட்டுத் தாளிக்க வேண்டும்.

    அதில் தனியா மற்றும் மிளகாய் தூளைச் சேர்க்கவும்.

    அதன்பின் அதோடு புளிச்சக்கீரையைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் சிறிதளவு பெருங்காயம், சீனி, உப்பு சுவைக்கேற்ப சேர்க்க வேண்டும்.

    புளிச்சக்கீரை நன்றாக வதக்கியதும் ஆறிய வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்தால் சுவையான கோங்குரா சட்னி ரெடியாகிவிடும்.

    இந்தச் சட்னியை இட்லி, தோசையோடு சேர்த்து சாப்பிடலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • உடல் பருமனைக் குறைக்க பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.
    • கொத்தமல்லி வயிற்றில் ஏற்படும் தொல்லைகளுக்கு தீர்வு தரும்.

    தேவையான பொருட்கள் :

    பச்சைப் பயறு - 100 கிராம்

    பச்சரிசி - ஒரு கைப்பிடி அளவு

    கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

    சீரகம் - 2 சிட்டிகை

    பச்சை மிளகாய் - ஒன்று

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    பச்சைப் பயறு, பச்சரிசியை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

    கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    ஊறவைத்த அரிசி, பயிருடன் கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், உப்பு, சீரகம் சேர்த்து மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவை தோசை மாவைக் காட்டிலும் சிறிது தண்ணீர் அதிகம் சேர்த்துக் கரைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவைத் தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுக்கவும்.

    இப்போது சத்தான சுவையான பச்சைப் பயறு கொத்தமல்லி பெசரட் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    ×