search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் மெமரி விவரங்கள் லீக்
    X

    ரெட்மி ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனின் மெமரி விவரங்கள் லீக்

    ரெட்மியின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் இன்டெர்னல் மெமரி விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. #Redmi



    ரெட்மியின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. இதைத் தொடர்ந்து ரெட்மி பொது மேளாலர் லு வெய்பிங் புதிய ஸ்மார்ட்போனில் சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

    இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் என்.எஃப்.சி. மற்றும் 3.5 எம்.எம். ஜாக் உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் ரஃபேல் என்ற குறியீட்டு பெயரில் உருவாகும் ரெட்மி ஸ்மார்ட்போனின் விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. 



    அதன்படி புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் 256 ஜி.பி. இன்டெர்னல் மெமரி, ஜி.பி.யு. ஓவர்லாக்கிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க ரெட்மி ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. சென்சார், 14 எம்.பி. சென்சார் மற்றும் 8 எம்.பி. சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இவற்றில் 13 எம்.பி. சென்சார் சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ் ஆக இருக்கலாம் என தெரிகிறது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கலில் புதிய ரெட்மி ஸ்மார்டபோனில் பாப்-அப் ரக செல்ஃபி கேமரா வழங்கப்படாது என்றும் இதில் பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே, பின்புறம் மூன்று பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் பாப்-அப் கேமரா வழங்கப்படலாம் என கூறப்பட்டது.

    இந்த ஸ்மார்ட்போனின் மற்ற சிறப்பம்சங்களை பொருத்தவரை 8 ஜி.பி. ரேம், 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் MIUI 10 இயங்குதளம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: Sudhanshu Ambhore
    Next Story
    ×