search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரெட்மி 7 இந்திய வெளியீட்டு விவரம்
    X

    ரெட்மி 7 இந்திய வெளியீட்டு விவரம்

    சியோமியின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், ரெட்மி 7 வெளியீடு பற்றிய விவரம் வெளியாகியிருக்கிறது. #Xiaomi



    சியோமி நிறுவனம் தனது ரெட்மி வை3 ஸ்மார்ட்போனினை ஏப்ரல் 24 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், இதே நிகழ்வில் சியோமி மற்றொரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

    சியோமியின் மனு குமார் ஜெயின் தனது ட்விட்டரில் பதிவிட்ட தகவல்களில் 7 ஆம் எண்ணை குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் புதிய ரெட்மி வை சீரிஸ் மாடலுடன் ரெட்மி 7 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் ரெட்மி 7 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியா வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.



    இந்தியாவில் ரெட்மி வை சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 70 லட்சம் யூனிட்கள் விற்பனையானதை சியோமி இந்தியா தலைவர் மனு குமார் ஜெயின் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பில் 7 என்ற எண் பெரிதாக குறிப்பிட்டு வை-க்கு பின் என்ன என்ற கேள்வியை கேட்டிருந்தார்.

    ஏற்கனவே ரெட்மி 7 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியா வரும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்சமயம் மனு குமார் ஜெயின் ட்விட்டர் பதிவின் மூலம் ரெட்மி 7 வெளியீடு அதிகம் எதிர்பார்ர்க்கப்படுகிறது.



    சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி 7 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1520 பிக்சல் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, ஸ்னாப்டிராகன் 632 சிப்செட், 4 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. 

    புகைப்படம் எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார், 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதுதவிர P2i சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
    Next Story
    ×