search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இருவித அளவுகளில் உருவாகும் சாம்சங் நோட் 10
    X

    இருவித அளவுகளில் உருவாகும் சாம்சங் நோட் 10

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் இருவித அளவுகளில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #GalaxyNote10



    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனினை இருவித அளவுகளில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

    சாம்சங் முற்றிலும் புதிய கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தெரிகிறது. கொரிய தளங்களில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இம்முறை இரண்டு கேல்கஸி நோட் 10 ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்10 சீரிசில் அறிமுகமான கேலக்ஸி எஸ்10இ மாடலுக்கு அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது.

    இதனால், கேலக்ஸி நோட் சீரிசிலும் சிறிய கேலக்ஸி நோட் 10 மாடலை உருவாக்குவது பற்றி சாம்சங் ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது. ஸ்டான்டர்டு மாடலில் 6.7 இன்ச் குவாட் ஹெச்.டி. பேனல் வழங்கப்படலாம் என தெரிகிறது. இதே போன்ற டிஸ்ப்ளே கேலக்ஸி எஸ்10 5ஜி மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.



    தற்சமயம் விற்பனை செய்யப்படும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கேலக்ஸி நோட் 10 மாடலில் டைனமிக் AMOLED ஸ்கிரீன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் இருப்பதை விட பெரியதாகும்.

    புகைப்படங்களை எடுக்க பின்புறம் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் இருப்பதை போன்ற மூன்று பிரைமரி கேமரா லென்ஸ் அல்லது கேல்கஸி எஸ்10 5ஜி வேரியண்ட் போன்று நான்கு பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முன்புறம் ஹோல் பன்ச் ஸ்கிரீன் மற்றும் டூயல் செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என தெரிகிறது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் கான்செப்ட் வடிவமைப்புகளில் கேலக்ஸி நோட் 10 மாடலின் செல்ஃபி கேமரா எஸ் பென் சாதனத்தில் வழங்கப்படலாம் என தெரிகிறது. எனினும், இதுபோன்ற வடிவமைப்பு இந்த ஆண்டு நோட் ஃபிளாக்‌ஷிப் மாடலில் சாத்தியமாகுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    புகைப்படம் நன்றி: DBS Designing

    சாம்சங் கேலக்ஸி நோட் 10 கான்செப்ட் வீடியோவை கீழே காணலாம்..,


    Next Story
    ×