search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    டொனால்டு டிரம்ப் சுந்தர் பிச்சை சந்திப்பு
    X

    டொனால்டு டிரம்ப் சுந்தர் பிச்சை சந்திப்பு

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை சந்தித்தார். #SundarPichai



    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையை சந்தித்து பேசியதாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

    இச்சந்திப்பின் போது கூகுள் நிறுவனம் சீன ராணுவத்திற்கு ஆதரவாக செயல்படுவது பற்றியும், அரசியல் சார்பு மற்றும் சீன வியாபாரம் பற்றி இருவரும் பேசியதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். 

    "தான் அமெரிக்க ராணுவத்திற்கு மட்டுமே முழு ஒத்துழைப்பு வழங்குவதாக," சுந்தர் பிச்சை தெரிவித்ததாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். "சுந்தருடன் அரசியல் சார்பு பற்றியும் கூகுள் நிறுவனம் நம் நாட்டிற்கு செய்யக் கூடிய பல்வேறு திட்டங்கள் பற்றி பேசினேன். சந்திப்பு மிகச்சிறப்பாக நிறைவுற்றது!," என டிரம்ப் தெரிவித்தார். 



    "நாங்கள் சீன ராணுவத்துடன் பணியாற்றவில்லை. நாங்கள் அமெரிக்க அரசு, பாதுகாப்பு அமைச்சகத்துடன் சைபர்செக்யூரிட்டி, ஆரோக்கியம் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி வருகிறோம்," என கூகுள் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். 

    கூகுள் நிறுவனம் சீனாவில் மேற்கொள்ளும் பணிகளால் சீன ராணுவம் ஆதாயமடைந்து வருவதாக அமெரிக்க அரசாங்கத்தின் மூத்த ராணுவ அதிகாரி ஜோசப் டன்ஃபோர்டு குற்றஞ்சாட்டியிருந்தார். கூகுள் கோரிக்கையை ஏற்று டன்ஃபோர்டு சுந்தர் பிச்சையை சந்தித்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனாவில் மேற்கொள்ளும் வியாபாரத்தால், அதிகளவிலான மிகமுக்கிய விவரங்கள் மறைமுகமாக சீன ராணுவத்துடன் பகிர்ந்து கொள்ளப்படுவது அமெரிக்காவுக்கு ஆபத்தாக அமையலாம் என்று ஜெனரல் டன்ஃபோர்டு வருத்தம் தெரிவித்ததாக ராணுவ செய்தி தொடர்பாளர் பட்ரிக் ரைடர் தெரிவித்தார். 

    சீனாவில் பல ஆண்டுகளாக கூகுள் முதலீடு செய்து வருகிறது. மேலும் தொடர்ந்து முதலீடு செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக சந்தர் பிச்சை தெரிவித்தார். 
    Next Story
    ×