search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஸ்லைடிங் ஸ்மார்ட்போன் உருவாக்கும் ஹூவாய்
    X

    ஸ்லைடிங் ஸ்மார்ட்போன் உருவாக்கும் ஹூவாய்

    இரட்டை செல்ஃபி கேமராக்களை கொண்ட ஸ்லைடிங் ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஹூவாய் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Huawei



    ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் செவ்வக வடிவம் கொண்ட ஸ்மார்ட்போன்களையே சமீப காலங்களில் உருவாக்கி வந்திருக்கின்றன. இதனை சற்று மாற்றிக் கொள்ளும் முயற்சியில் சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பில் கூடுதல் கவனம் செலுத்த துவங்கியிருக்கின்றன.

    ஸ்மார்ட்போன் வடிவமைப்பில் மாற்றத்தை விரும்பிய நிறுவனங்கள் மோட்டாரைஸ் செய்யப்பட்ட ஸ்லைடர் வடிவமைப்பு, இரட்டை டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன் மற்றும் பன்ச் ஹோல் கேமராக்களுடன் சமீபத்திய ஸ்மார்ட்போன்களில் வித்தியாச அம்சங்கள் இடம்பெறுகின்றன.

    மற்ற நிறுவனங்களை தொடர்ந்து ஹூவாய் நிறுவனமும் புதிய வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் ஹூவயின் புதிய ஸ்மார்ட்போன் ஸ்லைடிங் வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக லெட்ஸ்கோடிஜிட்டல் வெளியிட்ட தகவல்களில் ஸ்லைடர் ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகி இருந்தது.



    காப்புரிமையின் படி ஹூவாயின் ஸ்லைடிங் ஸ்மார்ட்போனில் இரட்டை செல்ஃபி கேமராக்கள் வழங்கப்பட இருப்பதும், இவை ஸ்லைடரில் மறைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதுபோன்ற வடிவமைப்பில் ஸ்மார்ட்போனில் பெசல் இன்றி ஃபுல் ஸ்கிரீன் வடிவமைப்பை வழங்க முடியும். 

    முன்னதாக இதேபோன்ற வடிவமைப்பில் ஹூவாய் துணை பிராண்டு ஹானர் ஒரு ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்திருக்கிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஹூவாய் புதிய வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட்போனிற்கு சர்வதேச வடிவமைப்பு முணையத்தில் பதிவு செய்திருக்கிறது.

    ஹூவாய் வடிவமைப்பின் படி புதிய ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா செட்டப், எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. காப்புரிமையிலி வெளியாகியிருக்கும் தகவல்களில் ஹூவாய் தனது ஸ்மார்ட்போனில் எல்.இ.டி ஃபிளாஷ் வழங்கியிருக்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் காணப்படவில்லை என்பதால், இதின் டிஸ்ப்ளேவின் கீழ் கைரேகை சென்சார் பொருத்தப்படலாம்.
    Next Story
    ×