search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சி.இ.எஸ். 2019 விழாவில் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்
    X

    சி.இ.எஸ். 2019 விழாவில் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்

    சாம்சங் நிறுவனத்தின் 5ஜி ப்ரோடோடைப் ஸ்மார்ட்போன் சி.இ.எஸ். 2019 விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. #Samsung #5G



    தொழில்நுட்ப சந்தையில் மிகவும் பிரபலமான மற்றும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா (சி.இ.எஸ். 2019) இருக்கிறது. 2019 ஆண்டிற்கான சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழா அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறுகிறது.

    இவ்விழாவில் பல்வேறு நிறுவனங்களும் தங்களின் புதுவித சாதனங்கள் மற்றும் கான்செப்ட்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் சாம்சங் நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனின் ப்ரோடோடைப் மாடலை காட்சிக்கு வைத்திருக்கிறது. கண்ணாடி பெட்டியினுள் வயர்லெஸ் சார்ஜர் / டாக் மீது இந்த ஸ்மார்ட்போன் வைக்கப்பட்டிருக்கிறது.


    புகைப்படம் நன்றி: Business Insider

    ப்ரோடோடைப் ஸ்மார்ட்போனின் பவர் பட்டன், வால்யூம் ராக்கர் மற்றும் பிக்ஸ்பி பட்டன் உள்ளிட்டவை தெளிவாக காட்சியளிக்கிறது. எனினும், ஸ்மார்ட்போன் பற்றிய இதர விவரங்கள் காணப்படவில்லை. அந்த வகையில் காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் 5ஜி ப்ரோடோடைப் ஸ்மார்ட்போன் 5ஜி தொழில்நுட்பத்தின் பலன்களை செயல்படுத்தக் காட்ட பயன்படுத்தப்பட்டிருக்கலாம்,

    5ஜி தொழில்நுட்பத்தின் பயன்கள் பற்றி எவ்வித தகவலும் இல்லை. சமீபத்தில் சாம்சங் நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதியை அறிவித்தது. அந்த வகையில் புதிய கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன் பிப்ரவரி 20 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் பிப்ரவரி மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஒரு மாடலில் மட்டும் 5ஜி வசதி வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
    Next Story
    ×