search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் சிறப்பம்சங்கள்
    X

    இணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் சிறப்பம்சங்கள்

    ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கும் ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #OnePlus6T #smartphone



    ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் மெக்லாரென் எடிஷனை டிசம்பர் 12ம் தேதி மும்பையில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    இந்நிலையில், ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள், வடிவமைப்பு விவரங்கள் உள்ளிட்டவை இணையத்தில் லீக் ஆகியுள்ளன. அதன்படி புது ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 10 ஜி.பி. ரேம், ராப் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம், மெக்லாரென் சார்ந்த பிரீமியம் வடிவமைப்பு, மெக்லாரென் லோகோ ஸ்மார்ட்போனின் பின்புறம் இடம்பெற்றிக்கும் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து டிப்ஸ்டரான இஷான் அகர்வால் தனது ட்விட்டரில் பதிவு செய்திருக்கும் புகைப்படங்களை பார்க்க ஒன்பிளஸ் 6டி மெக்லாரென் எடிஷன் மாடலின் அதிகாரப்பூர்வ ரென்டர்கள் போன்று காட்சியளிக்கிறது. புகைப்படங்களில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் பின்புறம் கெவ்லர்-ஸ்டைல் டெக்ஸ்ச்சர், ஆரஞ்சு நிற அக்சென்ட் பேன்ட் ஸ்மார்ட்போனின் ஃபிரேம் வழியே செல்கிறது.


    புகைப்படம் நன்றி: Ishan Agarwal

    இதனால் மெக்லாரென் பிரபல ஆரஞ்சு நிற டிரேட்மார்க் ஸ்மார்ட்போனில் பிரதிபலிக்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் கீழ் பகுதியில் மெக்லாரென் லோகோ காணப்படுகிறது. இதுதவிர ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. அந்த வகையில் புது ஸ்மார்ட்போனில் வாட்டர்-டிராப் வடிவம் கொண்ட நாட்ச், டூயல் பிரைமரி கேமரா உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.

    முன்னதாக இணையத்தில் வெளியாகி இருந்த தகவல்களின் படி புது மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போன் 10 ஜி.பி. ரேம் கொண்ட ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 256 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இதுதவிர புது மெக்லாரென் எடிஷன் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் ராப் சார்ஜ் 30 எனும் புது தொழில்நுட்பம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போன் ஒருநாள் முழுக்க இயங்க தேவையான சார்ஜ் செய்ய வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளும். #OnePlus6T #smartphone
    Next Story
    ×