search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரியல்மி புதிய யு சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்
    X

    ரியல்மி புதிய யு சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

    ஒப்போவின் ரியல்மி பிரான்டு புதிய யு சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலின் வெளியீடு, விற்பனை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #RealmeU1 #smartphone



    ரியல்மி பிரான்டு மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை யு சீரிஸ் மூலம் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்தது. இதைத் தொடர்ந்து புதிய ஸமார்ட்போன் ரியல்மி யு1 என அழைக்கப்படும் என்றும், இது நவம்பர் 28ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு அமேசான் தளத்தில் பிரத்யேகமாக கிடைக்கும் என ரியல்மி தெரிவித்துள்ளது.

    புதிய ஸ்மார்ட்போனில் தலைசிறந்த செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் என ரியல்மி தெரிவித்துள்ளது. இதில் ரியல்மி 2 ப்ரோ மாடலில் அறிமுகம் செய்யப்பட்ட வாட்டர் டிராப் நாட்ச் கொண்டிருக்கும் என்றும், அதிகபட்சமான ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ மற்றும் மெல்லிய பெசல்களை கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.



    மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸரில் 12 நானோமீட்டர் ஃபின்ஃபெட் தொழில்நுட்பத்தைச் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த பிராசஸரில் வேகமான ஏ.ஐ. பிராசஸிங் செய்ய ஏதுவாக 525 மெகாஹெர்ட்ஸ் மல்டி-கோர் ஏ.பி.யு. ஆப்பரேட்டிங் கொண்டிருக்கிறது. 

    இந்த ஏ.ஐ. என்ஜின் ஹீலியோ P60 பிராசஸரை விட ஏ.ஐ. பிராசஸிங்கை 10 முதல் 30 சதவிகிதம் வரை மேம்படுத்துகிறது. இதனுடன் ARM மாலி-G72 MP3 GPU அதிகபட்சம் 900 மெகாஹெர்ட்ஸ் ஆப்பரேட்டிங் கொண்டுள்ளது. இது முந்தைய ஹீலியோ P60 பிராசஸரில் வழங்கப்பட்டு இருந்ததை விட 13 சதவிகிதம் வேகமான செயல்திறன் கொண்டிருக்கிறது.



    அதிக செயல்திறன் எடுத்துக்கொள்ளும் அதிநவீன கேம்களை விளையாடும் போதும் P70 பிராசஸர் முந்தைய ஹீலியோ பிராசஸரை விட 7 சதவிகிதம் சிறப்பாக செயல்படுவதோடு 35 சதவிகிதம் குறைவான மின்சக்தியை பயன்படுத்துகிறது. இந்த பிராசஸர் 20:9 ரக டிஸ்ப்ளேக்களை முழுமையான ஹெச்.டி. பிளஸ் ரெசல்யூஷனில் சப்போர்ட் செய்யும்.
    Next Story
    ×