search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மடிக்கக்கூடிய வகையில் 5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கும் சீன நிறுவனம்
    X

    மடிக்கக்கூடிய வகையில் 5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கும் சீன நிறுவனம்

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹுவாய் மடிக்கக்கூடிய வசதி கொண்ட 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் யு உறுதி செய்திருக்கிறார். #Huawei



    ஹூவாய் நிறுவனம் மடிக்கக்கூடிய வசதி கொண்ட 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் யு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

    முன்னதாக மடிக்கக்கூடிய வசதி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை ஹூவாய் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. முன்னதாக ஜூலை மாதத்தில் ஆய்வு மற்றும் உற்பத்திக்கான செலவை 15 பில்லியன் டாலர்களில் இருந்து 20 பில்லியன் டாலர்களாக உயர்த்தியதாக அறிவித்தது.

    அடுத்த ஆண்டு வாக்கில் ஹூவாய் உலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் என அவர் தெரிவித்தார். மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும் புதிய ஸ்மார்ட்போனில் மேட் 20X போன்றே பெரிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

    ஹூவாய் மடிக்கக்கூடிய போன் குறித்த விவரங்கள் முதற்கட்டமாக ஜூலை மாதத்தில் வெளியானது. எனினும் சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக சில ஆண்டுகளாக தகவல் வெளியாகி வருகிறது. சாம்சங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி X என அழைக்கப்படலாம் என தகவல் வெளியாகி வந்தது. 

    இத்துடன் சாம்சங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் ப்ரோடோடைப் நுகர்வோர் மின்சாதன விழாவில் நடைபெற்ற தனியார் அரங்கில் பிரீவியூ செய்யப்பட்டது. இதில் ஸ்மார்ட்போனின் விலை KRW 20,00,000 (இந்திய மதிப்பில் ரூ.1,30,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல் வெளியானது.

    5ஜி நெட்வொர்க் சேவையை வழங்குவதில் ஹூவாய் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் ஹூவாய் தனது 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×