search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஹானர் ஸ்லைடர் போனின் புதிய டீசர்
    X

    ஹானர் ஸ்லைடர் போனின் புதிய டீசர்

    ஹூவாய் நிறுவனத்தின் துணை பிரான்டான ஹானர் உருவாக்கி வரும் ஸ்லைட் போன் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Honormagic2



    ஹூனர் பிரான்டு மேஜிக் 2 ஸ்மார்ட்போன் அக்டோபர் 13-ம் தேதி அறிமுகமாக இருக்கிறது. இந்நிலையில், ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட்போனின் புதிய டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.

    2018 ஐ.எஃப்.ஏ. விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட மேஜிக் 2 ஸ்மார்ட்போன் அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது. புதிய மேஜிக் 2 ஸ்மார்ட்போன் மூலம் ஸ்லைடர் கேமராவை ஹானர் வழங்குகிறது. அந்த வகையில் ஸ்லைடிங் வடிவமைப்பு கொண்ட ஹானர் ஸ்மார்ட்போனின் டீசர் இணையத்தில் வலம் வருகிறது.

    அதன்படி ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட்போனில் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே, ஸ்லைடிங் கேமரா அம்சம் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. இதன் கேமரா ஸ்லைடர் மேஜிக் ஸ்லைட் என அழைக்கப்பட இருப்பது புதிய டீசரில் அம்பலமாகியுள்ளது.



    சீனாவின் பிரபல வீடியோ வலைதள் ஒன்றில் ஹானர் மேஜிக் 2 டீசர் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது புதிய ஸ்மார்ட்போனின் விளம்பர வீடியோ போன்று காட்சியளிக்கிறது. முன்னதாக ஸ்மார்ட்போனின் ஸ்லைடிங் அம்சம் டீஸ் செய்யப்பட்டு இருந்த நிலையில், இம்முறை சில விவரங்கள் கிடைத்திருக்கிறது.

    அந்த வகையில் ஸ்மார்ட்போனில் செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் கேமரா அமைப்பு ஸ்மார்ட்போனின் இடதுபுறம் வழங்கப்பட்டுள்ளது, இதனுடன் ஃபிளாஷ் லைட் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை. 

    முன்னதாக வெளியான விவரங்களில் ஹானர் மேஜிக் 2 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்பட்டது. புதிய ஹானர் ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்படுவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 

    ஹானர் நிறுவனம் 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்த ஹானர் மேஜிக் ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக புதிய மேஜிக் 2 ஸ்மார்ட்போன் உருவாகியுள்ளது.
    Next Story
    ×