search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இந்தியாவில் விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
    X

    இந்தியாவில் விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

    விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நெக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு விவரங்களை பார்ப்போம். #vivoNEX
     


    விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமானது. புதிய நெக்ஸ் ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் வெளியிடப்பட்ட நிலையில், இன்று நடைபெற்ற விழாவில் இந்தியா வந்திருக்கிறது.

    விவோ ஃபிளாக்ஷிப் நெக்ஸ் ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஐ.பி.எஸ். அல்ட்ரா ஃபுல் வியூ டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டிருக்கும் விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டிருக்கிறது.



    இதன் மைக்ரோ-ஸ்லிட் இன்ஃப்ராரெட் சென்சார் திரையின் மேல் மறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் முக்கிய அம்சமாக மோட்டோராய்டு செல்ஃபி கேமரா இருக்கிறது. 8 எம்பி பாப்-அப் செல்ஃபி கேமரா ஒவ்வொரு முறை கேமரா ஆப் திறக்கும் போது தோன்றி, பின் தானாக மறைந்து கொள்கிறது.

    இவ்வகை கேமரா மிகவும் சிறிய-ரக மோட்டார்களை பயன்படுத்துகிறது. இந்த மோட்டார்களுக்கு பிரத்யேக ஐசி மற்றும் பிரெசிஷன் கன்ட்ரோல் அல்காரிதம்கள் வழங்கப்பட்டுள்ளதாக விவோ தெரிவித்துள்ளது. இதில் 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX363 சென்சார், 4-ஆக்சிஸ் OIS, 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.



    விவோ நெக்ஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.59 இன்ச் 2316x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED 19:3:9 டிஸ்ப்ளே
    - 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
    - அட்ரினோ 630 GPU
    - 8 ஜிபி ரேம்
    - 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஃபன்டச் ஓஎஸ் 4.0 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 12 எம்பி டூயல் PD பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், சோனி IMX363 சென்சார், f/1.8 
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் ரூ.44,990 என நிர்ணயம் செய்யப்படட்டுள்ளது. ஜூலை 21-ம் தேதி முதல் விவோ அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #vivoNEX #smartphone

    அறிமுக சலுகைகள்:

    - தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு ரூ.4000 கேஷ்பேக்
    - எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக ரூ.5000 வரை தள்ளுபடி
    - 12 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி
    - ஜியோ பயனர்களுக்கு ரூ.1950 மதிப்புள்ள கேஷ்பேக் வவுச்சர்கள்
    - ஒருமுறை திரையை மாற்றி கொள்ளும் வசதி
    - பைபேக் உத்தரவாதம்
    Next Story
    ×