search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சோனி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு
    X

    சோனி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு

    சோனி மொபைல் இந்தியாவில் விற்பனை செய்து வரும் ஃபிளாக்ஷிப் மாடல் உள்ளிட்ட சில ஸ்மார்ட்போன்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.



    சோனி மொபைல் நிறுவனத்தின் எக்ஸ்பீரியா XZs, எக்ஸ்பீரியா L2 மற்றும் எக்ஸ்பீரியா R1 ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.

    இந்தியாவில் சோனி எக்ஸ்பீரியா XZs ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதவாக்கில் ரூ.49,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.10,000 குறைக்கப்பட்டதை தொடர்ந்து இரண்டாவது முறையாக ரூ.10,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.29,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    சோனி எக்ஸ்பீரியா L2 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் ரூ.19,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் ரூ.5,000 குறைக்கப்பட்டு ரூ.14,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்பீரியா R1 தற்சமயம் ரூ.9,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது முந்தைய விலையை விட ரூ.3,000 வரை குறைவு ஆகும்.

    ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பை தொடர்ந்து சோனி விற்பனை மையங்கள், அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வலைத்தளங்கள் மற்றும் இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனையாளர்களிடம் புதிய விலையில் இந்தியா முழுக்க விற்பனை செய்யப்படுகிறது.

    முன்னதாக சோனி நிறுவனத்தின் எக்ஸ்பீரியா XZ பிரீமியம், XA1 அல்ட்ரா மற்றும் XA1 பிளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டது. இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் சோனி அறிமுகம் செய்த எக்ஸ்பீரியா XZ2 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது. இந்நிலையில் பழைய ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டிருப்பது அவற்றின் விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×