search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ சீரிஸ் ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கையை விரிவுப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. சமீபத்தில் இது குறித்த தகவல்கள் வெளியான நிலையில் நான்கு புதிய ஸ்மார்ட்போன்களும் மிக விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

    முன்னதாக கேலக்ஸி ஜெ6 மற்றும் கேலக்ஸி ஜெ8 ஸ்மார்ட்போன்கள் பென்ச்மார்க்கிங் வலைத்தளத்தில் வெளியான நிலையில் கேலக்ஸி ஜெ4 ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படங்கள் சாம்சங் சப்போர்ட் வலைத்தளங்களில் கசிந்துள்ளது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


    புகைப்படம்: நன்றி Blog of Mobile

    கேலக்ஸி ஜெ4 (SM-J400)  ஸ்மார்ட்போன் சாம்சங் இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் சவுதி அரேபியாவின் சப்போர்ட் பக்கங்களில் காணப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் ஸ்மார்ட்போன் நிச்சயம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை வழங்கியுள்ளதோடு முதற்கட்டமாக இந்த ஸ்மார்ட்போன் மூன்று நாடுகளில் விற்பனை செய்யப்பட இருப்பது தெரியவந்துள்ளது.

    சாம்சங் சப்போர்ட் பக்கங்களில் பட்டியலிடப்பட்டிருப்பதோடு, கேலக்ஸி ஜெ4 ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படங்களும் இணையத்தில் கசிந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தாய்வானின் NCC வலைத்தளத்தில் அனுமதிக்காக சமர்பிக்கப்பட்டுள்ளது, புகைப்படங்களின் படி புதிய ஸ்மார்ட்போன் மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டிருக்காது என தெரிகிறது. 

    இத்துடன் பின்புறம் கழற்றக்கூடிய வகையிலும், பேட்டரியை பயனர் மாற்றிக்கொள்ளும் வசதியை கொண்டிருக்கும் என தெரிகிறது. இதேபோன்று இந்த ஸ்மார்ட்போனிற்கான ப்ளூடூத் மற்றும் வைபை சான்றிதழ்களும் பெறப்பட்டிருக்கின்றன. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வழங்கப்படாது என்றே தெரிகிறது.
    Next Story
    ×