search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒன்பிளஸ் 6 டீசரில் வெளியான புது அம்சம்
    X

    ஒன்பிளஸ் 6 டீசரில் வெளியான புது அம்சம்

    ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் சமீபத்திய டீசரில் மற்றொரு புதிய அம்சம் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் தனது அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை விரைவில் வெளியிட இருக்கிறது. ஒன்பிளஸ் 6 என அழைக்கப்பட இருக்கும் புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்கள் சிறிய டீசர் வடிவில் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

    அந்த வகையில் அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் சமீபத்திய டீசரில் ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது.

    இத்துடன் இடம்பெற்றிருக்கும் மூன்று நொடிகள் ஓடக்கூடிய வீடியோவில் மழைத்துளிகள் மட்டும் காணப்படுகிறது. இதன் ட்வீட் தலைப்பில் மழையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்த முடியாமல் போவது உங்களுக்கு கவலையளிக்குமா? எங்களுக்கும் அப்படித்தான் என குறிப்பிடப்பட்டுள்ளது.



    இந்த ட்வீட் மற்றும் சிறிய வீடியோ ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட இருப்பதை உறுதி செய்வதாக அமைந்துல்ளது. இந்த அம்சம் வழங்கப்படும் பட்சத்தில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி பெறும் முதல் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 6 இருக்கும். 

    வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி போன்றே புதிய ஸ்மார்ட்போனில் நாட்ச் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டிருப்பதோடு 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 256 ஜிபி இன்டெர்னல் மெமரி, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது. மேலும் டூயல் கேமரா வடிவமைப்பு, பின்புற கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் ஐபோன் X போன்ற ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல் வசதி, முந்தைய ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனினை விட விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×