search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    பட்ஜெட் விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
    X

    பட்ஜெட் விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ7 பிரைம் 2 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஜெ7 பிரைம் ஸ்மார்ட்போன் 2016-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனாக கேலக்ஸி ஜெ7 பிரைம் 2 ஸ்மார்ட்போனினை சாம்சங் தனது வலைத்தளத்தில் பட்டியலிட்டுள்ளது. 

    5.5 இன்ச் 1080 பிக்சல் ஸ்கிரீன், 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர், 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், முன்பக்கம் கைரேகை சென்சார், 13 எம்பி செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஸ்மார்ட்போனில் சாம்சங் மால் செயலி இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த செயலி மெஷின் லெர்னிங் மூலம் புகைப்படங்களை வைத்து சர்ச் செய்யும் வசதி கொண்டதாகும். இதே அம்சம் முந்தைய கேலக்ஸி ஆன்7 பிரைம் ஸ்மார்ட்போனிலும் வழங்கப்பட்டிருந்தது.



    சாம்சங் கேலக்ஸி ஜெ7 பிரைம் 2 சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் 1920x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி TFT டிஸ்ப்ளே
    - 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ்
    - 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் 7870 பிராசஸர்
    - 3 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9
    - 13 எம்பி செல்ஃபி கேமரா, f/1.9
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3300 எம்ஏஹெச் பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி ஜெ7 பிரைம் 2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கோல்டு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் கேலக்ஸி ஜெ7 பிரைம் 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,990 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் இதர வலைத்தளங்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×