search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்: ஏர்செல்
    X
    கோப்பு படம்: ஏர்செல்

    ஏர்செல் பாதிப்பு - 2.5 லட்சம் பேர் பி.எஸ்.என்.எல்.க்கு மாற்றம்

    ஏர்செல் நிறுவனம் மூடப்பட்டதால் 2.5 லட்சம் வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல்.க்கு மாறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இன்றும், நாளையும் பி.எஸ்.என்.எல். சேவை மையம் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் ஏர்செல் நிறுவனத்தின் சேவை தமிழகம் உள்பட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கடந்த மாதம் பாதிப்படைந்தது. 

    ஏர்செல்லுக்கு செந்தமான பெரும்பான்மையான டவர்கள் முடங்கியதை தொடப்ந்து அந்நிறுவனம் திவாலாக அறிவிக்க தேசிய கம்பெணிகள் சட்ட தீர்ப்பாயத்தில் மனு அளித்திருந்தது. சமீபத்தில் ஏர்செல் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக தேசிய கம்பெணிகள் சட்ட தீர்ப்பாயம் ஒப்புக் கொண்டது.

    ஏர்செல் சேவை பாதிப்படைந்தால் பல லட்சம் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். ஏர்செல் சேவை திடீரென முடக்கப்பட்டதால் அந்த நெட்வொர்க்கில் இருந்து பிற சேவைக்கு அதே எண்ணில் தொடர முடியாமல் போனது. இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்கள் தொழில் ரீதியான தொடர்பு கிடைக்காமல் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    சேவை முடங்கியதைத் தொடர்ந்து ஏர்செல் வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க்களுக்கு மாற துவங்கினர். ஏர்செல் நெட்வொர்க்கில் இருந்து அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு மாற நடவடிக்கை எடுக்கப்பட்டது. போர்ட் எண் மூலம் மாறுவதற்கும், புதிதாக இணைப்பு பெறுவதற்கும் பி.எஸ்.என்.எல். அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

    தமிழகம் முழுவதும் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாற வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டினார்கள். இதைத்தொடர்ந்து பி.எஸ்.என்.எல். சேவை மையங்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட தற்போது செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


    கோப்பு படம்

    ஏர்செல் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுத்து கொள்ள தேவையான முயற்சிகளை பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மேற்கொண்டதால் இதுவரையில் 2.5 லட்சம் ஏர்செல் வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாற பதிவு செய்திருக்கின்றனர். சென்னையில் மட்டும் சுமார் 30 ஆயிரம் பேர் மாறி இருக்கிறார்கள்.

    இது குறித்து பி.எஸ்.என்.எல். மக்கள் தொடர்பு அதிகாரி வித்யா கூறுகையில், “ஏர்செல் வாடிக்கையாளர்கள் போர்ட்டிங் கோடு பெற்ற பிறகுதான் பி.எஸ்.என்.எல்.க்கு மாற முடியும். முதலில் அவர்கள் போர்டிங் கோடு பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். ‘போர்ட் அவுட்’ பெற்ற பிறகு நாங்கள் போர்ட்-இன் வழங்குவோம்.

    இந்த சேவையை முடிக்க ஒரு வார காலம் ஆகிறது. பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாற அதிகமான வாடிக்கையாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உடனே சிம்கார்டு வழங்கி வருகிறோம். ஆனால் ‘போர்டிங் கோடு’ வந்த பிறகுதான் சிம் ஆக்டிவேட் ஆகும்.

    பொதுமக்கள் வசதிக்காக சென்னையில் 42 வாடிக்கையாளர் சேவை மையங்கள், இன்றும், நாளையும் (ஞாயிற்றுக் கிழமை) செயல்படுகின்றன. புதிதாக சிம் கார்டு பெறுவது, பில் தொகை செலுத்துவது, ஆதார் எண் சரி பார்த்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்” என்றார்.
    Next Story
    ×