search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    அமேசானில் கேஷ்பேக் சலுகையில் ஜியோபோன் விற்பனை
    X

    அமேசானில் கேஷ்பேக் சலுகையில் ஜியோபோன் விற்பனை

    ரிலையன்ஸ் ஜியோ கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஜியோபோன் அமேசான் வலைத்தளத்தில் கேஷ்பேக் சலுகையில் விற்பனை செய்யப்படுகிறது.
    மும்பை:

    ரிலையன்ஸ் ஜியோ அந்நிறுவனத்தின் முதல் வோல்ட்இ ஃபீச்சர்போனினை கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்தது. ஆகஸ்டு 2017-இல் முன்பதிவு துவங்கி விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதிகப்படியான வரவேற்பு காரணமாக முன்பதிவு நிறுத்தப்பட்ட நிலையில் ஜியோபோன் விற்பனை அமேசான் வலைத்தளம் மூலம் மீண்டும் துவங்கியுள்ளது. 

    அமேசானில் புத்தம் புதிய ஜியோபோன் வாங்க வாடிக்கையாளர்கள் ரூ.1,500 முன்பணமாக செலுத்த வேண்டும். இந்த தொகை 36 மாதங்களுக்கு பின் திரும்ப வழங்கப்படும் என ஜியோ அறிவித்துள்ளது. முன்பணத்தை திரும்ப பெற வாடிக்கையாளர்களுக்கு விதிமுறைகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன. 

    ஜியோபோன் விநியோகம் செய்யப்பட்டதும் அருகாமையில் உள்ள ஜியோ ஸ்டோர் அல்லது ரிலையன்ஸ் டிஜிட்டல் விற்பனை மையங்களுக்கு சென்று ஆதார் நம்பர் மூலம் ஜியோ இணைப்பை ஆக்டிவேட் செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அமேசான் பே மூலம் பணம் செலுத்துவோருக்கு அமேசான் சார்பில் ரூ.50 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதேபோன்று அமேசான் பே மூலம் ரீசார்ஜ் செய்வோருக்கு 50% கேஷ்பேக் வழங்ககப்படுகின்றன. இந்த சலுகைகள் பிப்ரவரி 28-ம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    சமீபத்தில் ஜியோபோனில் ஃபேஸ்புக் செயலியை பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டது. இத்துடன் ரூ.49க்கு ஜியோ புதிய திட்டத்தை ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தது. இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அன்லிமி்ட்டெட் டேட்டா (1ஜிபி வரை அதிவேக டேட்டா) வழங்கப்படுகிறது.
    Next Story
    ×