search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ரூ.4,000 பட்ஜெட்டில் கார்பன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது
    X

    ரூ.4,000 பட்ஜெட்டில் கார்பன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது

    கார்பன் நிறுவனத்தின் டைட்டானியம் ஜம்போ 2 எனும் மலிவு விலை ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    மும்பை:

    கார்பன் மொபைல்ஸ் இந்தியாவில் டைட்டானியம் ஜம்போ 2 எனும் ஸ்மார்ட்போனினை ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டிருக்கிறது. 

    பெயருக்கு ஏற்றார்போல் டைட்டானியம் ஜம்போ 2 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சக்திவாய்ந்ததாக வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் வழங்கப்பட்டு இருக்கும் 4000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 400 மணி நேர ஸ்டான்ட் பை டைம் மற்றும் 16 மணி நேர டாக்டைம் வழங்குகிறது.

    இத்துடன் புகைப்படங்களை எடுக்க பிரைமரி மற்றும் செல்ஃபி கேமராக்களும் ஃபிளாஷ் சப்போர்ட் கொண்டிருப்பதால் அழகிய புகைப்படங்களை குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளிலும் எடுக்க முடியும்.



    கார்பன் டைட்டானியம் ஜம்போ 2 சிறப்பம்சங்கள்:

    - 5.5 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்.டி. 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
    - 2 ஜிபி ரேம்
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம்
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    கார்பன் டைட்டானியம் ஜம்போ 2 ஸ்மார்ட்போன் பிளாக், ஷேம்பெயின் மற்றும் காஃபி நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் டைட்டானியம் ஜம்போ 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.5999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் ஏர்டெல் கேஷ்பேக் சலுகையுடன் ரூ.3,999க்கு வாங்கிட முடியும். அமேசான் தளத்தில் வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,299 என பட்டியலிடப்பட்டுள்ளது. 

    கார்பன் டைட்டானியம் ஜம்போ 2 ஸ்மார்ட்போன் வாங்குவோர் முதற்கட்டமாக ரூ.5,999 தொகையை செலுத்த வேண்டும். கேஷ்பேக் தொகையை பெற முதல் 18 மாதங்களில் ரூ.3500 மதிப்புள்ள ரீசார்ஜ் செய்ய வேண்டும். முதல் 18 மாதங்களில் ரூ.500 முன்பணத்தை திரும்ப பெற முடியும். இதைத் தொடர்ந்து ரூ.3,500 மதிப்புள்ள ரீசார்ஜ்களை அடுத்த 18 மாதங்களில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் போது ரூ.1,500 கேஷ்பேக் பெற முடியும்.
    Next Story
    ×