search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இமயமலையில் தென்பட்டது பனி மனிதனின் கால் தடமா?- நேபாள ராணுவம் மறுப்பு
    X

    இமயமலையில் தென்பட்டது பனி மனிதனின் கால் தடமா?- நேபாள ராணுவம் மறுப்பு

    இமயமலையில் இந்திய ராணுவ வீரர்கள் கண்களில் தென்பட்டது பனிமனிதனின் கால் தடம் இல்லை என நேபாள ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். #SnowMan #Yeti #Himalays
    காத்மாண்டு:

    எட்டி எனப்படும் பனிமனிதன் இமயமலை பனிபிரதேசங்களில் வாழ்வதாக பல நூற்றாண்டுகளாக நம்பப்படுகிறது. நேபாளத்தில் பனி மனிதனை கடவுளாகவே நினைக்கின்றனர். இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் சமீபத்தில் இமய மலையில் ஏறும் போது மர்மமான முறையில் காலடித் தடங்களைப் பார்த்துள்ளனர்.

    அவை அளவில் மிக பெரிதாக இருந்துள்ளன. அவற்றை ஆராய்ந்த இந்திய ராணுவத்தினர், அவை எட்டியின் காலடித் தடங்கள் என்று அறிவித்து அண்மையில் டுவிட் ஒன்றை வெளியிட்டனர். மகாலு முகாம் அருகே எட்டி காலடித்தடம் தென்பட்டதாக இந்திய ராணுவம் கூறியிருந்தது.



    இந்த நிலையில், இந்திய ராணுவத்தின் கூற்றை நேபாள ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக நேபாள ராணுவ செய்தி தொடர்பாளர் பிக்யான் தேவ் பாண்டே ஒரு நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

    அவர் கூறுகையில், “இந்திய ராணுவத்தின் ஒரு குழுவினர் கால் தடங்களை பார்த்துள்ளனர். இந்திய ராணுவத்துடன் எங்களது தொடர்பு குழுவும் உடன் சென்றது. உண்மை என்னவென்பதை நாங்கள் அறிய முயற்சித்தோம். ஆனால், உள்ளூர் வாசிகளும் போர்ட்டர்களும், காட்டுக்கரடியின் பாத தடங்கள் என அறுதியிட்டு தெரிவித்தனர். மேலும், இது போன்ற தடங்கள் இப்பகுதிகளில் அடிக்கடி தென்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்” என்றார். #SnowMan #Yeti #Himalays
    Next Story
    ×