search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இமயமலை"

    • இமயமலை நீல சோலைபாடி, பழுப்பு மார்பு ஈபிடிப்பான் ஆகியவை புதிய வரவாக உள்ளன.
    • வலசை சீசன் முடியும் நிலையில் பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் நிலபரப்பு பறவைகள் வருகை அதிகரித்து உள்ளன.

    வேளச்சேரி:

    பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலம் பகுதி சிறப்பு பெற்றது. வழக்கமாக வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பறவைகள் வந்து செல்லும். சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பகுதி தண்ணீர் நிறைந்து ரம்மியமாக காட்சிஅளிக்கிறது. இதனால் வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    இமயமலை நீல சோலைபாடி, பழுப்பு மார்பு ஈபிடிப்பான் ஆகியவை புதிய வரவாக உள்ளன. இதுகணக்கெடுப்பில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 198 வகை பற வைகளின் வருகை ஆதாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது.

    தமிழகத்தின் பல் வேறு பகுதிகளுக்கும், தமிழகம் வழியாக இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் வலசை பறவைகள் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு வந்து செல்வதாக பறவைகள் ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து பறவைகள் நல ஆர்வலர் ஒருவர் கூறும்போது, வலசை சீசன் முடியும் நிலையில் பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் நிலபரப்பு பறவைகள் வருகை அதிகரித்து உள்ளன. இது தொடர்பான கணக்கெடுப்பு தற்போது முடிந்து உள்ளது.

    இமயமலையை ஒட்டிய பகுதிகளில் இனப்பெருக்கம் மேற்கொள்ளும் வலசை பறவையான நீல சோலைபாடி பறவை இலங்கை செல்லும் வழியில் பள்ளிக்கரணைக்கு வந்துள்ளன.புது வரவாக, நீல சோலைபாடி, பழுப்பு மார்பு ஈபிடிப் பான் ஆகிய இரண்டு பறவைகள் இணைந்துள்ளன. இத்துடன் சேர்த்து இங்கு, 198 வகை பற வைகளின் வருகை ஆதாரப்பூர்வமாக உறுதியாகி உள்ளது. பழுப்பு மார்பு ஈ பிடிப்பான், தென் சீனா மற்றும் மியான்மர், தாய் லாந்து உள்ளிட்ட நாடுகளில் காணப்படும். சிறு பூச்சிகளையே இது உணவாக எடுத்துக் கொள்ளும் என்பதால், நீர் நிலை மட்டுமல்லாது புதர் காடுகளில் தான் இது காணப்படும். நீல தொண்டை பிடிப்பான், செந்தலை பூங்குருவி, அரசவால் ஈ பிடிப்பான், கொண்டை குயில், பழுப்பு ஈ பிடிப்பான் போன்ற பறவைகளும் பள்ளிக்கரணையில் தற்போது முகாமிட்டுள்ளன என்றார்.

    • நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
    • அண்ணாத்த படம் தொடங்குவதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரஜினிகாந்த் திடீரென இமயமலைக்கு சென்றார்.

    சென்னை விமான நிலையத்தில் இன்று காலை ரஜினிகாந்த் வி.ஐ.பி.க்கள் செல்லும் வழியில் போலீஸ் பாதுகாப்புடன் சென்றார்.

    அப்போது அவருக்கு முன்னால் வரிசையில் பலர் நின்று கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் போலீசார் ரஜினியிடம் முன்னால் சென்று விடலாம் என கூறி அழைத்துச் சென்றனர். அப்போது ரஜினி, வரிசையில் நிற்பவர்களை பார்த்து "ரொம்ப நேரமா நிற்பீங்க... சாரி" என கூறி விட்டு சென்றார்.

    இதையடுத்து அங்கு நின்றவர்கள் பரவாயில்லை என்று கூறி புன்னகைத்து ரஜினியை அனுப்பி வைத்தனர்.

    • பாபாஜி குகையில் தியானம் செய்வது தனக்கு மிகுந்த மன நிறைவையும் நிம்மதியையும் தருவதாக ரஜினிகாந்த் பலமுறை தெரிவித்துள்ளார்.
    • பயணத்தின் போது தனக்கு உறுதுணையாக இருப்பதற்காக உதவியாளர் ஒருவரை ரஜினிகாந்த் அழைத்துச் சென்றுள்ளார்.

    சென்னை:

    சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

    ஆன்மீகவாதிகளுடன் அவருக்கு நட்பு அதிகரித்த பிறகு அவரிடம் இந்த பழக்கம் உருவானது. கொரோனா பரவல் மற்றும் தனது உடல்நிலை காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக வெளியிடங்களுக்கு செல்வதை ரஜினி தவிர்த்து வந்தார். இமயமலை பயணத்தையும் அவர் ஒத்தி வைத்திருந்தார்.

    "அண்ணாத்த" படம் தொடங்குவதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரஜினிகாந்த் திடீரென இமயமலைக்கு சென்றார். அந்த பயணம் குறுகிய கால ஆன்மீக யாத்திரையாக இருந்தது.

    அவர் நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் நாளை (வியாழக்கிழமை) உலகம் முழுக்க வெளியாக உள்ளது. இந்த படம் ரஜனி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இதையடுத்து மீண்டும் இமயமலை பயணத்தை தொடங்க ரஜினி முடிவு செய்தார்.

    அதன்படி இன்று (புதன்கிழமை) நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணத்தை தொடங்கினார். இன்று காலை 8 மணிக்கு அவர் தனது வீட்டில் இருந்து விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார்.

    விமான நிலையத்தில் அவரை நிருபர்கள் பேட்டி கண்டனர். ஆனால் அவர் விரிவாக பதில் அளிக்க மறுத்து விட்டார். ரஜினிகாந்த் சென்னையில் இருந்து விமானத்தில் பெங்களூரு சென்றார். பெங்களூரில் இருந்து அவர் இமயமலைக்கு பயணமாகிறார்.

    இமயமலையில் ஒரு மாதம் வரையில் தங்கி இருக்க ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்று ஓய்வு எடுப்பதையும் அங்கு சாதாரண மனிதர்களை போல் காவி வேட்டியுடன் சுற்றி திரிவதையும் அதிகம் விரும்புவார்.

    அந்த வகையில் தற்போது இமயமலை பயணத்தை மேற்கொண்டிருக்கும் ரஜினிகாந்த் அங்கு எப்போதும்தான் தங்கும் விடுதிக்கு சென்று ஓய்வெடுக்கிறார். இந்த விடுதி ரஜினியால் கட்டப்பட்டதாகும்.

    ரஜினிகாந்த் தனது இமயமலை சுற்றுப்பயணத்தின் போது சித்தர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். தனது ஆன்மீக குருவான பாபாஜி குகைக்கு சென்று வழிபடவும் முடிவு செய்துள்ளார். மேலும் அவர் ரிஷிகேஷ், கேதர்நாத் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று வழிபாடுகள் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    இமயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டிருந்த நேரங்களில் எல்லாம் ரஜினிகாந்த் நினைத்த இடங்களுக்கு எப்போதும் சென்று சராசரி மனிதர்களை போல வாழ்வதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில் தற்போதைய சுற்றுப்பயணத்தையும் மன அமைதியுடன் ரஜினி மேற்கொள்ள உள்ளார்.

    இதற்கு முன்பு ரஜினிகாந்த் இமயமலை சென்றிருந்த போது குதிரை சவாரியில் ஈடுபட்டிருந்தார். டீ கடையில் நின்று அங்கிருந்தவர்களுடன் பேசிக்கொண்டே டீ குடித்தார். இந்த புகைப்படங்கள் எல்லாம் அப்போது வெளியாகி வைரலாக பரவியது. அவரது எளிமையை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தன. தற்போதைய இமயமலை சுற்றுப் பயணத்தின் போதும் ரஜினிகாந்த் அது போன்ற ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு முடிவு செய்துள்ளார்.

    ரஜினிகாந்தை பொறுத்த வரையில் கடவுள் மீது அதிகம் பக்தி கொண்டவர். தொடக்கத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்வதை அதிகம் விரும்பினார். பின்னர் ராகவேந்திரா சுவாமிகள் மீது அவருக்கு பக்தி ஏற்பட்டது. ராகவேந்திரர் வேடத்தில் நடித்த அவர் ராகவேந்திரருக்கு ஆலயங்கள் கட்டுவதற்கும் பலருக்கு உதவி உள்ளார்.

    இந்த நிலையில் இமயமலையில் இன்றும் உயிரோடு இருப்பதாக கருதப்படும் பாபாஜி பற்றி ரஜினிகாந்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பாபாஜி பற்றி மேலும் அறிந்து கொள்ள அவர் இமயமலைக்கு அழைத்து செல்லப்பட்டார். அதன் பிறகு பாபாஜியை தனது ஆன்மீக வழிகாட்டியாக ரஜினி ஏற்றுக் கொண்டார்.

    இமயமலை பயணத்தின் போது அங்குள்ள பாபாஜி குகைக்கு சென்று தினமும் தியானம் செய்ய ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். இமயமலையில் உள்ள சாமியார்களையும் ரஜினி சந்திக்கிறார்.

    பாபாஜி குகையில் தியானம் செய்வது தனக்கு மிகுந்த மன நிறைவையும் நிம்மதியையும் தருவதாக ரஜினிகாந்த் பலமுறை தெரிவித்துள்ளார். தனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் இந்த தியானமும் ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

    ஒரு தடவை அவர் மனைவி லதாவுடன் சென்று பாபாஜி குகையில் தியானம் செய்து இருக்கிறார். மீண்டும் அதுபோல அனுபவத்தை பெறவே தனது தற்போதைய இமயமலை பயணத்தையும் அமைத்துக் கொள்ள ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார்.

    இமயமலையில் தியானம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றை தினமும் மேற்கொள்ள ரஜினி முடிவு செய்திருக்கிறார்.

    இந்த பயணத்தின் போது தனக்கு உறுதுணையாக இருப்பதற்காக உதவியாளர் ஒருவரை ரஜினிகாந்த் அழைத்துச் சென்றுள்ளார். கடந்த முறை நண்பர் ஒருவருடன் இமயமலை பயணத்தை ரஜினி மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இமயமலைக்கு புறப்பட்டு சென்ற ரஜினிகாந்த் இன்று அளித்த பேட்டியில் "ஜெயிலர்" படம் நன்றாக வந்துள்ளது. பார்த்து விட்டு கருத்துக்களை சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார். ஒரு மாத கால இமயமலை பயணம் முடிந்த பின்னர் அடுத்த மாதம் ரஜினிகாந்த் சென்னை திரும்புவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • தீவிர காலநிலை காரணமாக இக்கோவில் ஏப்ரல் மாதம் முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும்.
    • தற்போது உள்ள கட்டிடம் காஞ்சி மடாதிபதிகளால் கி.பி. 8ம் நுற்றாண்டில் உருவாக்கப்பட்டது.

    கேதார்நாத் கோவில் இந்தியாவிலுள்ள மிகப் புனிதமானதாகக் கருதப்படும் சிவன் கோவில்களுள் ஒன்றாகும். இது உத்தராகாண்டத்தில் உள்ள, உருத்ர பிரயாக் மாவட்டத்தில், கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரையில் கார்வால் இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் தீவிர காலநிலை காரணமாக இக்கோவில் ஏப்ரல் மாதம் முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும். இக்கோவிலைச் சாலை வழியாக நேரடியாக அணுக முடியாது. கௌரிகுண்டம் என்னுமிடத்திலிருந்து 14 கிமீ தொலைவு மலை ஏறியே இக்கோவிலுக்குச் செல்ல முடியும். ஆதிசங்கராச்சாரியாரால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இக்கோவில் இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும்.

    கோயிலின் முக்கியத்துவம்

    இக்கோவில் ஒரு கவர்ச்சியான கல் கட்டடம் ஆகும். இதன் தொடக்கம் பற்றி அறியக்கூடவில்லை. இக்கோவில் முகப்பில் உள்ள முக்கோண வடிவக் கல்லில் மனிதத் தலை ஒன்று செதுக்கப்பட்டிருப்பது ஒரு வழமைக்கு மாறான அம்சம் ஆகும்.

    தொடர் கனமழை, வெள்ளப் பெருக்கு / இமயமலை சுனாமி 11.06.2013ல் இப்பகுதியில் வரலாறு காணாத அளவில் கொட்டி தீர்த்த கனமழையினால் உண்டான மழை நீர் வெள்ளப் பெருக்கினால் கேதார்நாத் கோவில் தவிர சுற்றுப்புறப்பகுதிகள் கடுஞ்சேதம் அடைந்தது. இக்கோவில் மதிற்சுவர்கள், ஆதிசங்கரர் சமாதி மற்றும் கோவில் கடைவீதிகள் மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. மழை வெள்ளப் பெருக்கினால் குறைந்தது ஐந்தாயிரம் பேர் இறந்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு இனி கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்திரி, யமுனோத்திரி எனும் நான்கு புனித தலங்களுக்கான பயணம் நிறுத்தப்பட்டுள்ளதாக உத்தராகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.

    கடுஞ்சேதத்திற்கு காரணம் கேதார்நாத் கோவில் மூன்று புறங்களிலும் மலைத்தொடர்களால் சூழப்பட்டது. அதில் ஒரு மலையில் முகட்டை மூடியிருந்த மிகப்பெரிய பனிகட்டி, கேதார்நாத் கோயிலுக்கு மேற்புறத்தில் இருந்த நீர் தேக்கப் பகுதியில் விழுந்து, அதனால் நீர்தேக்க அணை உடைந்து கடுமையான மழை வெள்ளத்த்துடன், அணைக்கட்டு நீரும் சேர்ந்து கேதார்நாத் பகுதிகளை மிகக் கடுமையாக பாதித்துள்ளது.

    கோயிலின் வரலாறு

    இந்தக் கோவில் புராண காலத்தில் பாண்டவர்களால் கட்டப்பட்டது எனக்கூறப்பட்டாலும், இக்கோவிலின் முதன்மை அமைப்பு 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது உள்ள கட்டிடம் காஞ்சி மடாதிபதிகளால் கி.பி. 8ம் நுற்றாண்டில் உருவாக்கப்பட்டது.

    இக்கோவில் ஈசனைப் பற்றி சைவக் குரவர்கள் பாடி இருக்கின்றார்கள்.

    "கேதாரம் மேவி னானை" எனவும் "கேதாரம் மாமேருவும்" எனவும் திருநாவுக்கரசர் பாடியிருக்கின்றார். பன்னிரண்டாம் திருமுறையில், "வடகயிலை வணங்கிப் பாடிச் செங்கமல மலர்வாவித் திருக்கேதாரம் தொழுது..." என்றும் பாடியுள்ளார்கள்.

    ×