search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் தேர்தலில் நின்றால் சித்து வெற்றி பெறுவார்- இம்ரான் கான் நெகிழ்ச்சி
    X

    பாகிஸ்தான் தேர்தலில் நின்றால் சித்து வெற்றி பெறுவார்- இம்ரான் கான் நெகிழ்ச்சி

    அமைதிக்காக பாடுபடும் நவ்ஜோத் சிங் சித்துவை இந்தியாவில் சிலர் விமர்சிப்பது ஏன்? என்று தெரியவில்லை. பாகிஸ்தான் தேர்தலில் நின்றாலும் சித்து வெற்றி பெறுவார் என இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார். #Sidhu #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பாகிஸ்தானில் உள்ள சீக்கிய கோவிலுக்கு செல்லும் கர்த்தார்பூர் தனிப்பாதைக்கு பாகிஸ்தானில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் இன்று அடிக்கல் நாட்டினார்.

    இந்தியாவில் இருந்து வந்துள்ள மத்திய மந்திரிகள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் சிங் பூரி, பிரபல கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய இம்ரான் கான் அமைதிக்காக பாடுபடும் நவ்ஜோத் சிங் சித்துவை இந்தியாவில் சிலர் விமர்சிப்பது ஏன்? என்று தெரியவில்லை. பாகிஸ்தான் தேர்தலில் நின்றாலும் சித்து வெற்றி பெறுவார் என குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் பேசியதாவது:-

    இந்த விழாவின்போது நான் கண்ட மகிழ்ச்சியானது மதினா நகரை பார்க்க முடியாமல் எல்லைப்பகுதியில் 4 கிலோமீட்டர் தூரத்தில் காத்திருந்து, பின்னர் மதினாவை காணும் வாய்ப்பு கிடைத்த முஸ்லிம்களின் மகிழ்ச்சிக்கு ஒப்பானதாகும். இந்த மகிழ்ச்சியை இந்தியாவில் உள்ள சீக்கிய மக்கள் இன்று அடைந்துள்ளனர்.


    நமக்குள் இருக்கும் ஒரே பிரச்சனை காஷ்மீர் பிரச்சனைதான். இதை தீர்ப்பதற்கு இருநாட்டிலும் சரியான தகுதி படைத்த தலைவர்கள் இருந்தால் போதும். அப்படி பிரச்சனை தீர்ந்து நமது உறவுகள் பலப்படும்போது நமது சக்தியும், வீரியமும் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

    எனது பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டதற்காக இந்தியாவில் சித்துவை ஏன் விமர்சிக்கிறார்கள்? என்பது எனக்கு தெரியவில்லை. அவர் அமைதியைப் பற்றிதான் பேசினார். அவர் இங்கு வந்து தேர்தலில் போட்டியிடலாம், அவர் வெற்றி பெறுவார். நமது இருநாடுகளுக்கு இடையில் நீடித்த நட்புறவு உருவாகும் வகையில் சித்து இந்தியாவின் பிரதமர் ஆகும் நாளுக்காக நாம் நீண்டகாலம் காத்திருக்க வேண்டியதில்லை என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #Sidhu #ImranKhan
    Next Story
    ×