search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தை தாக்கிய மைக்கேல் புயலுக்கு 11 பேர் பலி
    X

    அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தை தாக்கிய மைக்கேல் புயலுக்கு 11 பேர் பலி

    அமெரிக்காவில் புளோரிடாவுக்கு பின்னர் விர்ஜினியா மாநிலத்தை தாக்கிய மைக்கேல் புயலின் சீற்றத்துக்கு 11 பேர் உயிரிழந்தனர். #StormMichael #deathtoll
    நியூயார்க்:

    அமெரிக்காவின் பல பகுதிகளில் சமீப நாட்களாக புதுப்புது புயல்கள் மற்றும் சூறாளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

    அவ்வகையில், புதிதாக உருவான ‘மைக்கேல்’ புயல் நேற்று புளோரிடா மாகாணத்தை கடந்தபோது கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்து மெல்ல நகர்ந்து விர்ஜினியா மாநிலத்துக்குள் இன்று நுழைந்த  ‘மைக்கேல்’ புயல் இங்கும் பெரும்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இம்மாநிலத்தில் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் இங்குள்ள சுமார் 1200 முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் 5 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கி கிடக்கின்றன.

    (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 7 மணி நிலவரப்படி புயல் மற்றும் மழைசார்ந்த விபத்துகளில் 11 பேர் உயிரிழந்ததாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #StormMichael #deathtoll
    Next Story
    ×