search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற அமெரிக்கருக்கு 45 ஆண்டு சிறை
    X

    பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற அமெரிக்கருக்கு 45 ஆண்டு சிறை

    பாகிஸ்தானில் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தினரிடம் பயிற்சி பெற்ற அமெரிக்கருக்கு 45 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவை சேர்ந்தவர், முகனாத் மகமது அல் பரேக் (வயது 32). இவர் பாகிஸ்தானில் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தினரிடம் பயிற்சி பெற்றவர் ஆவார். பின்னர் வெளிநாட்டுக்கு சென்று அல்கொய்தா இயக்கத்திலும் சேர்ந்து விட்டார்.

    அமெரிக்கர்களை கொல்வதற்கு அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தினர் சதித்திட்டம் தீட்டி செயல்படுத்துவதற்கு இவர் ஆதரவு காட்டி வந்து உள்ளார்.

    குறிப்பாக 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ந்தேதி, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் அமெரிக்க படைவீரர்களை கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டி உள்ளார்.

    இது தொடர்பான வழக்கில் பரேக் கைது செய்யப்பட்டார். அவர் மீது அமெரிக்க கோர்ட்டில் பயங்கரவாத வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 45 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. 
    Next Story
    ×