என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பாகிஸ்தானுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.

    நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கானுவில் நடைபெற்றது.

    இந்த போட்டியிலும் நியூசிலாந்து அணி 323 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து அணி மொத்தமாக 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி 1 டிராவுடன் 77.78 சதவீதம் பெற்றுள்ளது. 100 சதவீததுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் தொடர்கிறது.

    3 முதல் 9 இடங்கள் முறையே தென் ஆப்பிரிக்கா, இலங்கை பாகிஸ்தான், இந்தியா, இங்கிலாந்து, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் உள்ளது.

    • மதுரை திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் உள்ள பள்ளிவாசல் மற்றும் மலையில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது.
    • கடந்த 19 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் 12.30 மணி முதல் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    மதுரை திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் உள்ள பள்ளிவாசல் மற்றும் மலையில் உள்ள தர்காவில் வருகிற 6-ந் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது.

    நேற்று இரவு 8.30 மணியளவில் திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் உள்ள பள்ளிவாசலில் இருந்து மின்னொளியுடன் கூடிய அலங்கார வண்டியில் பிறை கொடி எடுத்து வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

    தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மற்றொரு பிறை கொடியும் எடுத்து செல்லப்பட்டது. பெரிய ரதவீதி, கோட்டை தெரு வழியாக அந்த கொடி மலைக்கு எடுத்து செல்லப்பட்டு தர்காவில் அமைத்த கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

    இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி தரப்பட்டது.

    ஆதார் அட்டை, செல்போன் எண்ணை கொடுத்துவிட்டு திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லலாம் என்று காவல் உதவி ஆணையர் சசிபிரியா தெரிவித்துள்ளார்.

    கடந்த 19 நாட்களாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் 12.30 மணி முதல் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

    மலையில் உள்ள தர்காவில் நடக்கும் சந்தனக்கூடு விழாவிற்கு இஸ்லாமியர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அனைவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    • வித் லவ் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
    • அபிஷன் ஜீவின்ந்துக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார்.

    சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. கடந்த மே மாதம் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கி இருந்தார். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து சொல்லப்பட்டு இருந்ததால் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

    டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை தொடர்ந்து அபிஷன் ஜீவின்ந்த் வித் லவ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில், அபிஷன் ஜீவின்ந்துக்கு ஜோடியாக கேரளாவில் வளர்ந்து வரும் நட்சத்திரமான அனஸ்வர ராஜன் நடித்துள்ளார்.

    இப்படத்தை 'டூரிஸ்ட் ஃபேமிலி', 'லவ்வர்' படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கியுள்ளார். MRP என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில், வித் லவ் படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலான 'அய்யோ காதலே' பாடலை இன்று மாலை 6 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் வெளியிடுவார் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்பாடலின் ப்ரோமோ நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.

    • வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை வேறு வேறு என்றாலும் நாம் அனைவரும் சகோதரர்கள்.
    • மற்றவர்கள் நம்பிக்கையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

    த.வெ.க. சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * இது ஒரு அன்பான தருணம். அழகான தருணம். அன்பும் கருணையும் தான் அனைத்திருக்கும் அடிப்படை.

    * தமிழ்நாடு மண்ணும் தாய் அன்பு கொண்ட மண் தான். தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒன்று தான்.

    * வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை வேறு வேறு என்றாலும் நாம் அனைவரும் சகோதரர்கள்.

    * உண்மையான நம்பிக்கை தான் நல்லிணக்கத்தை விதைக்கும்.

    * மற்றவர்கள் நம்பிக்கையை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

    * ஒரு இளைஞருக்கு எதிராக உடன் இருந்தவர்களே கிணற்றில் தள்ளிவிட்ட பின்னரும் மீண்டும் வந்து அரசனாகும் கதை பைபிளில் உள்ளது.

    * தன்னை கிணற்றில் தள்ளிவிட்ட உடன் பிறந்த சகோதரர்களை, அந்த நாட்டு மக்களை அரசன் எப்படி காப்பாற்றினான் என படியுங்கள்.

    * எப்படிப்பட்ட எதிரிகளையும் நாம் ஜெயிக்கலாம் என்பதை இதுபோன்ற கதைகள் நமக்கு கற்றுத்தருகிறது.

    * நானும் த.வெ.க.வும் சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் 100 சதவீதம் உறுதியாக உள்ளது.

    * ஒளி ஒன்று பிறக்கும் அந்த ஒளி நமக்கு வழிகாட்டும். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

    * நம்பிக்கையுடன் காத்திருங்கள், நல்லதே நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • U19 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது.

    துபாயில் நடந்த U19 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 347 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்தியா 156 ரன்களில் சுருண்டு 191 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

    இந்தியா அணி பேட்டிங் செய்த போது 5-வது ஓவரை பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் அலி ராசா வீசினார். அந்த ஓவரில் வைபவ் சூர்யவன்ஷி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர் என பறக்கவிட்டார். ஆனால், அதே ஓவரில் வைபவ் 26 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

    விக்கெட் விழுந்த உற்சாகத்தில் பந்துவீச்சாளர் அலி ராசா, வைபவ் சூர்யவன்ஷிக்கு மிக அருகில் சென்று, அவர் முகத்திற்கு நேராக ஆக்ரோஷமாக கத்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இது வைபவ்விற்கு கோபத்தை ஏற்படுத்தியது.

    பெவிலியன் திரும்பும் போது கடுப்பான வைபவ் சூர்யவன்ஷி, அலி ராசாவை பார்த்து முறைத்தபடியே, திடீரென தனது காலை கையால் சுட்டிக்காட்டி ஏதோ சைகை செய்தார். "நீ என் காலில் இருக்கும் ஷூ.." என்பது போல அவர் சைகை செய்தார்.

    மைதானத்தில் அவுட் ஆகி வெளியேறும் போது, எதிரணி வீரரை பார்த்து ஷூவை சுட்டிக்காட்டி வம்பிழுத்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதத்தை கிளப்பி உள்ளது. வெறும் 14 வயதான வைபவ் களத்தில் இப்படியா நடந்து கொள்வது? என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தனது ஓவரில் 3 சிக்சர் அடித்த பேட்டரின் விக்கெட்டை வீழ்த்தும் போது எந்தவொரு பந்து வீச்சாளரும் ஆக்ரோஷமாக கொண்டாடுவார்கள் அதைதான் அவரும் செய்திருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். 

    • 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
    • அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் உடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பழைய ஓய்வூதிய திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புவது என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் உடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், இடைநிலை, முதுநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊழியம், சமவேலை சம ஊதியம், பதவி உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை தொடர்பாக அமைச்சர்களுடன் அரசு ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.
    • சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார்.

    சிவகாத்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான், கொட்டுக்காளி, ஹவுஸ்மேட்ஸ் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன.

    இந்நிலையில் அவருடைய தயாரிப்பில் வெளியாகும் புதிய படம் தொடர்பான அறிவிப்பை சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    இது தொடர்பாக சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் அடுத்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து சிறப்பான திரைப்படங்களை சிவகார்த்திகேயன் தயாரித்து வருவதால், அவரின் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பும் மக்களிடையே கவனம் பெற்றுள்ளது.

    • தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி 150 நாட்கள் வேலை கொடுத்ததா?
    • இறந்தவர்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில் உயிர்பெற்று வந்து தி.மு.க.வுக்கு வாக்களித்தனர்.

    சேலம் மாவட்டம் எடப்பாடியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வரலாம்.

    * பொங்கலுக்கு ரேசன் அட்டைக்கு ரூ.5000 வழங்க வேண்டும்.

    * எதிர்க்கட்சியாக இருந்தபோது தி.மு.க. வைத்த கோரிக்கையை தான் அ.தி.மு.க. தற்போது வைக்கிறது.

    * தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி 150 நாட்கள் வேலை கொடுத்ததா?

    * காவிரி விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் தி.மு.க. பேசி இருக்க வேண்டும்.

    * 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் தொடர வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

    * ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் கடன் அதிகரித்து கொண்டிருக்கிறது.

    * தமிழக அரசு பொருளாதார நிபுணர் குழுவை அமைத்த பின்னர் தான் கடன் அதிகரித்துள்ளது.

    * த.வெ.க. நயினார் நாகேந்திரன் கூட்டணிக்கு அழைத்தது பா.ஜ.க.வின் நிலைப்பாடு.

    * கொரோனா காலத்திலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம்.

    * இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது.

    * ரெயில் கட்டண உயர்வை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * த.வெ.க. தூய சக்தியா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

    * கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.

    * த.வெ.க. தூய சக்தி என்ற விஜயின் பேச்சிற்கு கே.பி.முனுசாமி பதில் அளித்து விட்டார்.

    * இறந்தவர்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில் உயிர்பெற்று வந்து தி.மு.க.வுக்கு வாக்களித்தனர்.

    * அ.தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு விரைவில் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 138 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
    • 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது.

    நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கானுவில் நடைபெற்றது.

    நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 575 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர்களான கான்வே இரட்டை சதமும் (227 ரன்), கேப்டன் டாம் லாதம் சதமும் (137) அடித்தனர். ரச்சின் ரவீந்திரா 72 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜெய்டன் ஷீல்ஸ் , ஆண்டர்சன் பிலிப், ஜஸ்டின் கிரீவ்ஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 420 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து 156 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் விளையாடிய நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.

    இதனையடுத்து 462 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் 4 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் அடித்தது.

    கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. மிகவும் பொறுமையுடன் விளையாடிய இந்த தொடக்க ஜோடியை ஜேக்கப் டஃபி பிரித்தார். பிரெண்டன் கிங் 67 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து ஜான் கேம்பல் 105 பந்துகளை சந்தித்து 16 ரன்னில் அவுட் ஆனார்.

    அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 138 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 87 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த 51 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

    இதனால் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘உடன்பிறப்பே வா' என்று கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியை கடந்த ஜூன் மாதமே தொடங்கி விட்டார்.
    • அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது.

    தமிழக சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. எனவே அடுத்த சட்டசபைக்கான தேர்தலை அடுத்த ஆண்டு (2026) மே மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும். சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் தொடங்கி விட்டது. இது ஒருபுறம் இருக்க அரசியல் கட்சிகள், முழுவீச்சில் தேர்தலுக்கான பணியை தொடங்கி இருக்கின்றன.

    தற்போதைய சூழ்நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. ஆகிய 3 கட்சிகளின் தலைமையிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என நான்கு முனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. ஏற்கனவே தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகளுடன் இணைந்து வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.

    தேர்தல் பணிகளில் தி.மு.க.வை பொறுத்தவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'உடன்பிறப்பே வா' என்று கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியை கடந்த ஜூன் மாதமே தொடங்கி விட்டார். மேலும் தேர்தல் கதாநாயகன் என்று சொல்லப்படும் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், 2026 சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று தொடங்கியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது.

    • நடிகை சமந்தாவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ரசிகர் கூட்டம் அவரை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • அண்மையில் நடிகை நிதி அகர்வாலுக்கும் இதே போன்ற சம்பவம் நடந்தது

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடை திறப்பு விழாவின்போது நடிகை சமந்தாவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள பெரும் ரசிகர் கூட்டம் அவரை சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    நடிகை சமந்தா கூட்ட நெரிசலில் இருந்து தப்பித்து வேகமாக தனது காருக்குள் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. நிதி அகர்வாலை தொடர்ந்து சமந்தாவும் சிகர்கள் கூட்டத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அண்மையில் ராஜாசாப் படத்தில் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள பிரபலமான மாலில் நடைபெற்றது. அதில் நடிகை நிதி அகர்வால் கலந்துகொண்டார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு நடிகை அங்கிருந்து வெளியே வரும்போது ரசிகர்கள் சூழ்ந்துவிட்டனர். சிலர் அவரிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி திணறிய நடிகை நிதி அகர்வால் பின்பு காரில் ஏறி புறப்பட்டு சென்றுவிட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலானது.

    இதனையடுத்து ரசிகர்களின் கட்டுப்பாடற்ற தன்மை மற்றும் சமூக பொறுப்பின்மை குறித்து கவலைகள் எழுப்புவதாக இணையத்தில் பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

    • தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் தனித்தனியாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது.
    • மாமல்லபுரத்தில் நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார்.

    தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் தனித்தனியாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் த.வெ.க சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள 'ப்போர் பாயிண்ட்ஸ்' கன்வென்ஷன் சென்டரில் இன்று சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

    மாமல்லபுரத்தில் நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார். விழாவில் பங்கேற்றுள்ள விஜய் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    விழாவில் பங்கேற்றுள்ள முக்கியஸ்தர்களுக்கு விஜய் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.

    ×