என் மலர்
நீங்கள் தேடியது "chennai sangamam"
- 1,500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று இருந்தனர்.
- தமிழ் மண்ணின் கலைகளைக் காக்கும் உங்களது தொண்டு வாழிய! என்று கூறியுள்ளார்.
சென்னை:
சென்னை நகரில் பல வகையான கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் திருவிழாவின்போது 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' என்ற மாபெரும் கலைவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த திருவிழாவை கலை பண்பாட்டுத் துறை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டின் 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' கலைநிகழ்ச்சிகள் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. இதனை கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முரசு கொட்டி தொடங்கி வைத்தார்.
இந்த திருவிழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தேர்வு செய்யப்பட்ட 1,500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று இருந்தனர். இந்நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்.
இதனை தொடர்ந்து 'சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா'வில் பங்கேற்ற கலைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஜன.13 முதல் 17 வரை நடைபெற்ற நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்று மக்களை மகிழ்வித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு என்னுடைய பாராட்டுகள்! வாழ்த்துகள்!
தமிழ் மண்ணின் கலைகளைக் காக்கும் உங்களது தொண்டு வாழிய! என்று கூறியுள்ளார்.
ஜன.13 முதல் 17 வரை நடைபெற்ற #நம்ம_ஊரு_திருவிழா-வில் பங்கேற்று மக்களை மகிழ்வித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு என்னுடைய பாராட்டுகள்! வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) January 18, 2025
தமிழ் மண்ணின் கலைகளைக் காக்கும் உங்களது தொண்டு வாழிய!@KanimozhiDMK @tntourismoffcl pic.twitter.com/PLdd3xcpf8
- சென்னை சங்கமம் திருவிழா ஜனவரி 14 ஆம் தேதி முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றது.
- திருவிழா மாலை 6 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை நடைபெற்றது.
சென்னை நகரில் பல வகையான கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் திருவிழாவின்போது 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' என்ற மாபெரும் கலைவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த திருவிழாவை கலை பண்பாட்டுத் துறை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டின் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள் கடந்த 13ம் தேதி தொடங்கியது. இதனை கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முரசு கொட்டி தொடங்கி வைத்தார்.
இந்த திருவிழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற வடிவங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.
இத்துடன் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசை கலைஞர்களும் கலை நிகழ்ச்சிகளை வழங்கினர். இவற்றுடன் கேரளாவின் தைய்யம் நடனம், மகாராஷ்டிராவின் லாவணி நடனம், ராஜஸ்தான் கூமர் நடனம், மேற்கு வங்காளம் தனுச்சி நடனம், கோவாவின் விளக்கு நடனம், உத்ராகண்ட்டின் சபேலி நடனம் ஆகிய அயல் மாநில கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
சென்னை சங்கமம் திருவிழா ஜனவரி 14 ஆம் தேதி முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றது.
இத்திருவிழாவின் கலை நிகழ்ச்சிகள் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, ராஜா அண்ணாமலைபுரம், அரசு இசைக்கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், கிண்டி கத்திபாரா சந்திப்பு, ஜாபர்கான்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், தியாகராயநகர் நடேசன் பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டுத் திடல், எழும்பூர் அரசு அருங்காட்சியகம், கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ,வெ,ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத்திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் கோபுரப் பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, கே.கே. நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டுத் திடல் ஆகிய 18 இடங்களில் நடைபெற்றது.
திருவிழா மாலை 6 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை நடைபெற்றது.
இந்த நிலையில், 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைகிறது. இன்றைய 'சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் சேகர் பாபு, பொன்முடி உள்ளிட்டோரும் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.
- சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் தற்போது 1500 கிராமியக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
- போக்குவரத்து வசதிகள் உட்பட அனைத்தும் தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்ப்பண்பாட்டை வளர்க்கும் 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி கலை பண்பாட்டுத்துறை சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து முடிந்ததையடுத்து, இந்த ஆண்டிற்கான சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 13-ந்தேதி சென்னை, கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் தொடங்கிவைத்தார்.
சென்னையில் உள்ள 18 இடங்களில் நேற்று முதல் வருகிற 17-ந்தேதி வரை 4 நாட்கள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் தற்போது 1500 கிராமியக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 75 கலைக் குழுக்களாக பிரிந்து 50 வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.
சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் பங்குபெறும் கிராமியக் கலைஞர்களுக்கு தங்கும் இடம், உணவு, 2 உடைகள், போக்குவரத்து வசதிகள் உட்பட அனைத்தும் தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திரு விழா' கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் அதிக அளவில் கண்டுகளிக்கும் வண்ணம் சென்னையில் மெரினா கடற்கரை, கோயம்பேடு சென்னை புறநகர் பஸ் நிலையம், கிளாம்பாக்கம்-கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையம் மற்றும் மாதவரம்-புறநகர் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் 13-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிகழ்ச்சியையும், நேற்று கலை நிகழ்ச்சிகளையும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்பு துறையின் மின்னணு வீடியோ வாகனங்கள் மூலம் இன்று (15-ந்தேதி) முதல் வருகிற 17-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா' கலை நிகழ்ச்சிகளை சென்னையில் மெரினா கடற்கரை, கோயம்பேடு சென்னை புறநகர் பஸ் நிலையம், கிளாம்பாக்கம்-கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையம் மற்றும் மாதவரம்-புறநகர் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா" கலை நிகழ்ச்சிகளை செய்தி மக்கள் தொடர்பு துறையின் மின்னணு வீடியோ வாகனங்கள் மூலம் மேற்கண்ட இடங்களில் நேரடியாக கண்டு களிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் தற்போது 1500 கிராமியக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
- 75 கலைக் குழுக்களாக பிரிந்து 50 வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தமிழ்ப்பண்பாட்டை வளர்க்கும் 'சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து முடிந்ததையடுத்து, இந்தாண்டிற்கான சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியினை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
சென்னையில் உள்ள 18 இடங்களில் நேற்று முதல் நான்கு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியில் தற்போது 1500 கிராமியக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 75 கலைக் குழுக்களாக பிரிந்து 50 வெவ்வேறு கலை வடிவங்களை நிகழ்த்தி வருகின்றனர்.
சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவில் பங்குபெறும் கிராமியக் கலைஞர்களுக்கு தங்கும் இடம், உணவு, 2 உடைகள், போக்குவரத்து வசதிகள் உட்பட அனைத்தும் தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இது தவிர அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு நாள் ஊதியம் ரூ.5000 ஆக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்."
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள் இன்று தொடங்கியுள்ளது.
- டி.எம். கிருஷ்ணா பாடல் பாடியதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உன்னிப்பாக கவனித்து பாராட்டினார்.
சென்னை நகரில் பல வகையான கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் திருவிழாவின்போது 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' என்ற மாபெரும் கலைவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த திருவிழாவை கலை பண்பாட்டுத் துறை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டின் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள் இன்று தொடங்கியுள்ளது. இதனை கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முரசு கொட்டி தொடங்கி வைத்தார்.
சென்னை சங்கமம் நம்ம ஊர் திருவிழாவின் தொடக்க விழாவில் பிரபல பாடகர் டி.எம். கிருஷ்ணா அவர்கள் தந்தை பெரியார் குறித்து உணர்ச்சி பொங்க பாடல் பாடினார்.
பெரியார் குறித்து டி.எம். கிருஷ்ணா பாடல் பாடியதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உன்னிப்பாக கவனித்து பாராட்டினார்.
- இந்த திருவிழாவை கலை பண்பாட்டுத் துறை நடத்தி வருகிறது.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முரசு கொட்டி தொடங்கி வைத்தார்.
சென்னை நகரில் பல வகையான கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் திருவிழாவின்போது 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' என்ற மாபெரும் கலைவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த திருவிழாவை கலை பண்பாட்டுத் துறை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டின் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள் இன்று தொடங்கியுள்ளது. இதனை கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முரசு கொட்டி தொடங்கி வைத்தார்.
இந்த திருவிழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற வடிவங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை பரவசப்படுத்துவார்கள்.
இத்துடன் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசை கலைஞர்களும் கலை நிகழ்ச்சிகள் வழங்க உள்ளனர். இவற்றுடன் கேரளாவின் தைய்யம் நடனம், மகாராஷ்டிராவின் லாவணி நடனம், ராஜஸ்தான் கூமர் நடனம், மேற்கு வங்காளம் தனுச்சி நடனம், கோவாவின் விளக்கு நடனம், உத்ராகண்ட்டின் சபேலி நடனம் ஆகிய அயல் மாநில கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
சென்னை சங்கமம் திருவிழா ஜனவரி 14 ஆம் தேதி முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது. இத்திருவிழாவின் கலை நிகழ்ச்சிகள் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, ராஜா அண்ணாமலைபுரம், அரசு இசைக்கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், கிண்டி கத்திபாரா சந்திப்பு, ஜாபர்கான்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், தியாகராயநகர் நடேசன் பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டுத் திடல், எழும்பூர் அரசு அருங்காட்சியகம், கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ,வெ,ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத்திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் கோபுரப் பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, கே.கே. நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டுத் திடல் ஆகிய 18 இடங்களில் நடைபெறுகிறது. திருவிழா மாலை 6 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை நடைபெறும்.
- கிராமங்களில் பொங்கல் திருவிழா மிக உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம்.
- சென்னை சங்கமம்-நம்ம ஊர் திருவிழா 4 நாட்கள் நடைபெறுகிறது.
சென்னை:
சென்னையில் தை மாதம் தொடக்கத்தில் பொங்கல் நாட்களில் "சென்னை சங்கமம்-நம்ம ஊர் திருவிழா" என்ற பிரமாண்ட கலைவிழா கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது.
கிராமங்களில் பொங்கல் திருவிழா மிக உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், மரபுகளை பின்பற்றி கிராமப்புறங்களில் நாட்டுப்புற கலைகள் இன்றளவும் நடைபெற்று வருகின்றன. கிராமங்களில் காலங்காலமாக நடைபெற்று வரும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் இன்றைய இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் தெரியாமல் போய்விடுகின்றன.
குறிப்பாக சென்னை போன்ற நகரப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் நாட்டுப்புற கலைகளை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. இன்றைய இளைய சமுதாயத்திற்கு தமிழர்களின் பண்பாட்டை, கலாச்சாரத்தை விளக்கும் வகையில் சென்னையில் "நம்ம ஊர் திருவிழா" நடத்தப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ள சென்னைவாசிகளை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த திருவிழா ஏற்பாடு செய்யப்படுகிறது.
சென்னை சங்கமம்-நம்ம ஊர் திருவிழா 4 நாட்கள் நடைபெறுகிறது. 14-ந்தேதி (பொங்கல்) முதல் 17-ந்தேதி வரை நடத்துவதற்கு தமிழக அரசு கலை மற்றும் பண்பாட்டுத் துறை திட்டமிட்டுள்ளது.
முன்னதாக இந்த திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 13-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரஸ்வரர் கோவில் திடலில் தொடங்கி வைக்கிறார்.
இதுதொடர்பாக கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ் மண்ணின் கலைகளையும், கலைஞர்களையும் கொண்டாடி மகிழ "சென்னை சங்கமம் 2025" மாபெரும் கலைத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அனைவரும் வாரீர்! என்று பதிவிட்டுள்ளார்.
சென்னையில் 18 இடங்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. தமிழ்நாட்டின் முன்னணி கலைஞர்களுடன் 200 கிராமிய கலைஞர்களும் இணைந்து மாபெரும் இசை நடன நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.
நம்ம ஊர் திருவிழாவில் 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், கோலாட்டம், ஜிக்காட்டம் ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம்.
சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சென்னையின் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசை கலைஞர்களின் கலைநிகழ்ச்சியும் நடக்கிறது.
இவற்றுடன் மகாராஷ்டிர மாநில லாவணி, ராஜஸ்தான் கூமர் நடனம், மேற்கு வங்காளம் துர்சி நிருத்தியா, கோவாவின் விளக்கு நடனம், மிசோரம் மூங்கில் நடனம் ஆகியவை இடம்பெறுகின்றன.
- சென்னை சங்கமத்தில் எம்.பி கனிமொழி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு.
- சென்னை மாநகரில் 18 இடங்களில் 4 நாட்களுக்கு திருவிழா.
சென்னை தீவுத்திடலில் இன்று முதல் சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேளம் கொட்டி தொடங்கி வைத்தார்.
பிறகு, கலைநிகழ்ச்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.பி கனிமொழி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.
தமிழகத்தின் பாரம்பரியாத்தை பிரதிபலிக்கும் 40 வகையான கலைகளுடன் சென்னை சங்கமம் திருவிழா நடைபெறுகிறது.
சென்னை மாநகரில் 18 இடங்களில் 4 நாட்களுக்கு சென்னை சங்கமம் திருவிழா நடைபெறுகிறது.
- சுமார் 600 கலைஞர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தினர்.
- நாளை முதல் 17ம் தேதி வரை சென்னையில் 18 இடங்களில் கலைநிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
சென்னை:
சென்னை தீவுத்திடலில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் நடைபெறும் "சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவை" முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த சுமார் 600 கலைஞர்கள், நம்ம ஊரு திருவிழா துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன், சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதிலும் இருந்து சென்னை வந்து சங்கமித்துள்ள கலைஞர்கள், நாளை முதல் 17ம் தேதி வரை சென்னையில் 18 இடங்களில் கலைநிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
- பறையாட்டம், கரகாட்டம், மலைவாழ் மக்களின் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட நம் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன.
- தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனிச் சிறப்பான உணவு வகைகள் உணவுத் திருவிழாவில் இடம் பெறுகின்றன.
சென்னை:
'சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா' குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
தனித்த அடையாளத்தோடு கலை, பண்பாடு, இலக்கியம் என வாழ்ந்திட்ட தமிழர், பின்னாளில் இனப் பகைவர்களின் சூழ்ச்சிக்கு இரையாகி தங்களது அடையாளங்களை மறந்தனர். மறத்தமிழரின் மான உணர்வை பகுத்தறிவால் மீட்டெடுத்து, இன எழுச்சி பெற வைத்தது திராவிட இயக்கம். தமிழரின் பண்பாட்டை மீட்டெடுக்கும் திராவிட சிந்தனையின் மற்றுமொரு முன்னெடுப்பு தான் 'சென்னை சங்கமம்'.
தமிழினத் தலைவர் கலைஞர் ஏற்றி வைத்த கலை பண்பாட்டுச் சுடரை அணையாது காத்திடும் விதத்தில் தற்போது "சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா" தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் பல்வேறு இடங்களில் வரும் ஜனவரி 13-ம் நாள் தொடங்கி 17-ம் நாள் வரையில் அரசு சார்பில் நடைபெற இருக்கிறது.
வரும் ஜனவரி 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை), சென்னை, தீவுத் திடலில் 'சென்னை சங்கமம்-2023' நிகழ்வை நான் தொடங்கி வைக்கி றேன். 16 இடங்கள், 60-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள், 600-க்கும் மேற்பட்ட மண்ணின் கலைஞர்களை ஒன்றிணைத்து, மீண்டும் வருகிறது 'சென்னை சங்கமம்'.
பறையாட்டம், கரகாட்டம், மலைவாழ் மக்களின் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட நம் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன. இதோடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனிச் சிறப்பான உணவு வகைகள் உணவுத் திருவிழாவில் இடம் பெறுகின்றன.
இலக்கியத் திருவிழாவும் நடைபெற உள்ளது. நம் தமிழ் மண்ணையும், மக்களையும், மக்களின் கதைகளையும் பேசும் இந்தக் கலைகளை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு பெருமிதம் கொள்கிறது. 'தமிழர் என்று ஓர் இனம் உண்டு, தனியே அவருக்கு ஒரு குணமுண்டு'. 'கலைகள் யாவிலும் வல்லவனாம், கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்'. இந்த மாபெரும் மக்கள் திருவிழாவிற்கு அனைவரும் வாருங்கள்! வாருங்கள்! நம்ம ஊரு திருவிழாவில் சந்திப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னையில் 16 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
- மதுரை கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களிலும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளதாவது
இந்த ஆண்டு நாட்டுப்புற கலை நிகழ்ச்சியான சென்னை சங்கமம், புதுப்பொழிவோடு நம்ம ஊரு திருவிழாவாக சிறப்பான முறையில் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி ஒருங்கிணைப்பில் விழாநிகழ்ச்சிகள் மிளிர இருக்கிறது. வரும் 13ஆம் தேதி துவங்கி, 17ஆம் தேதி வரை மிகச் சிறப்பாக சென்னை மாநகரில் இந்த விழா நடைபெறவிருக்கிறது. இதன் தொடக்க விழாவை, 13ந் தேதி மாலை சென்னை தீவுத்திடலில் பிரம்மாண்டமான கலை விழாவோடு முதலமைச்சர் துவங்கி வைக்கிறார்.
தொடர்ந்து வரும் 14ந் தேதி முதல் 17ந் தேதிவரை நான்கு நாட்களுக்கு சென்னையில் 16 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மதுரை கோவை, திருச்சி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களிலும் இந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கிறது. மேலும் பஞ்சாப், அஸ்ஸாம், மேற்கு வங்கம் போன்ற இதர மாநிலங்களிலிருந்தும், சில நிகழ்ச்சிகளை இணைந்து நம்முடைய ஒருமைப்பாட்டையும் பிரதிபலிக்கக்கூடிய வகையில் இந்த நிகழ்ச்சிகள் அமைய இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- சென்னை சங்கமம் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
- சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்துவதற்காக சென்னையில் உள்ள சில பூங்காக்களை தி.மு.க. எம்.பி. கனிமொழி, மேயர் பிரியா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
சென்னை:
தி.மு.க. ஆட்சியின் போது கடந்த 2007-ம் ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பொங்கல் பண்டிகையின் போது நடத்தப்பட்ட இந்த சென்னை சங்கமம் விழாவின் போது சென்னையில் உள்ள பூங்காக்கள், மைதானங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் பாரம்பரிய நடனம், இசை மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
ஆண்டுதோறும் நடத்தப்பட்ட இந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சி கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்ததை தொடர்ந்து கடந்த பொங்கல் பண்டிகையின் போது நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் சென்னை தீவுத்திடலில் இந்த கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி கிராமிய கலைஞர்கள் பங்கேற்கும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை கோலாகலமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
வருகிற 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. சென்னையில் உள்ள பூங்காக்கள், மைதானங்கள், கடற்கரைகள் என 16 இடங்களில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
சென்னை சங்கமம் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்துவதற்காக சென்னையில் உள்ள சில பூங்காக்களை தி.மு.க. எம்.பி. கனிமொழி, மேயர் பிரியா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்துவதற்காக 16 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
கொளத்தூரில் உள்ள மாநகராட்சி மைதானம், ராயபுரத்தில் உள்ள ராபின்சன் விளையாட்டு மைதானம், மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழி பூங்கா, நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானம், அண்ணாநகர் டவர் பூங்கா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை சாலை, தி.நகர் நடேசன் பூங்கா, வளசரவாக்கம் ராம கிருஷ்ணன் நகர் மைதானம் உள்ளிட்ட 16 இடங்களில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கரகாட்டம், குயிலாட்டம், மயிலாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது. 4 நாட்களும் மாலை 6 முதல் இரவு 9 மணிவரை 30 நிமிட இடைவெளியில் நடனம், இசை நிகழ்ச்சி உள்ளிட்ட நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய கலைகள், பிற மாநில நடனங்கள் ஆகியவற்றின் கலவையாக நடத்தப்படுகிறது.
சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் உணவு திருவிழாவும் நடக்கிறது. கருப்பட்டி, இருட்டுக்கடை அல்வா, கடாய் அல்வா, தலப்பாகட்டி உள்ளிட்ட பாரம்பரிய உணவுகளும், உணவு பொருள் கடைகளும் இந்த உணவு திருவிழாவில் அமைக்கப்படுகின்றன.
மேலும் இந்த இடங்களில் நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏதுவாக மேடைகள் அமைக்கப்படுகின்றன. தரமான குடிநீர் வழங்குவதற்கும், நடமாடும் கழிப்பறைகளை அமைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்காக கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய வழிகாட்டுதல் குழு அமைக்கப்படுகிறது.