என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழைய பொருட்கள்"

    • ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
    • மின்னணுக் கழிவுகள் உள்ளிட்டவற்றை எரிப்பதைத் தவிர்த்திடும் வகையில் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டது.

    போகிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களிடமிருந்து 154.17 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்களைப் பெற்று அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    போகிப் பண்டிகையை முன்னிட்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12.01.2020 முதல் 14.012026 ஆகிய நாட்களில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர் (Tyre) ரப்பர் ட்யூப் (Rubber Tube), நெகிழி (Plastic), காகிதக் கழிவுகள், அட்டைப் பெட்டிகள், மரக்கழிவுகள், உலோகக் கழிவுகள், மின்னணுக் கழிவுகள் உள்ளிட்டவற்றை எரிப்பதைத் தவிர்த்திடும் வகையில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டது.

    மேலும், இதுகுறித்து பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களில் உள்ள ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12.01.2026 முதல் 14.012026 வரை 154.17 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் பெறப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.

    இவ்வாறு பெறப்பட்ட பொருட்கள் மாநகராட்சியின் வள மீட்பு மையங்களில் (RRC) பிரித்தெடுக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. மேலும் பயன்படுத்த இயலாத பொருட்கள் எரியூட்டி சாம்பலாக்கும் எரியூட்டும் ஆலைக்கு (Incinerator Plant அனுப்பப்பட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரியூட்டப்படும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    புகையால் பாதிப்பு ஏற்படுவதால் போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிக்க வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. #Bhogifestival
    சென்னை:

    தமிழகத்தில் போகி பண்டிகை 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர்.

    வீடுகளில் சேகரம் ஆகும் இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்துள்ளனர். இச்செய்கையால் ஏற்பட்ட காற்று மாசுபாடு இயற்கையால் ஜீரணிக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்துள்ளது.

    ஆனால் இன்றைய சூழலை எடுத்துக்கொண்டால், போகி பண்டிகை அன்று பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது.

    கடந்த ஆண்டு அதிக அளவு ஈரப்பதம், குறைந்த வெப்பநிலை மற்றும் குறைந்த அளவு காற்றின் வேகம் காரணமாக சென்னை மாநகராட்சி மண்டலங்களில் காற்றில் பி.எம்.10 துகள்களின் அளவு 135 முதல் 386 வரை மைக்ரோம்/கனமீட்டர் என்ற அளவில் இருந்தது. இது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாகும்.

    போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு 9 பன்னாட்டு விமானங்கள் உள்பட 16 விமானங்கள் சென்னையில் இருந்து பிற விமான நிலையங்களான பெங்களூரு, ஐதராபாத் மற்றும் கோயம்புத்தூருக்கு திருப்பி விடப்பட்டன. மேலும் 42 விமானங்கள் தாமதமாகவும் 40 விமானங்கள் ரத்தும் செய்யப்பட்டன.



    சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது.

    பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுகளால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் புகை மண்டலம் காரணமாக மிகுந்த பாதிப்புக்கு உள்ளானார்கள்.

    எனவே இந்த ஆண்டு போகி பண்டிகைக்கு முன்தினம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 30 குழுக்கள் அமைத்து போலீசாருடன் இணைந்து அனைத்து மாநகராட்சி மண்டலங்களிலும் ரோந்து பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

    போகி பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப்பண்டிகை நாளிலும், 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றுத்தரத்தினை கண்காணிக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காற்றின் தர அளவு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.

    போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #Bhogifestival
    ×