என் மலர்tooltip icon

    உலகம்

    கத்தாரில் உள்ள ராணுவ தளத்தில் இருந்து சில பணியாளர்களை வெளியேறுமாறு அமெரிக்கா வலியுறுத்தல்
    X

    கத்தாரில் உள்ள ராணுவ தளத்தில் இருந்து சில பணியாளர்களை வெளியேறுமாறு அமெரிக்கா வலியுறுத்தல்

    • ஈரானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் போராட்டம் வெடித்துள்ளது.
    • போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால், அமெரிக்கா தலையிடும் என டிரம்ப் எச்சரிக்கையால பதற்றம்.

    ஈரானில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியவற்றால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஈரான் அரசு மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிரான போராட்டம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.

    நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்ததால் அதை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதில் போராட்டக்காரர்கள்-பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஈரான் முழுவதும் வன்முறை வெடித்தது. வாகனங்கள், அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

    ஈரானில் தற்போது நடந்து வரும் போராட்டங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 2500-யை தாண்டியுள்ளது.

    இதனிடையே, போராட்டக்காரர்கள் கொலை செய்யப்பட்டால், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுக்கும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.

    ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பெரும் போர் வெடிக்கும் என்று கத்தார் எச்சரிக்கை விடுத்தது.

    இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் கத்தாரில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளத்தில் உள்ள சில பணியாளர்களை வெளியேறுமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

    ஈரான் தலைவர் இதற்கு முன்னதாக வெளியிட்டு ஒரு வீடியோ, தற்போது வேகமாக பரவி வரும் நிலையில், அமெரிக்கா இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது.

    ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆலோசகர், அலி ஷம்கானி தனது எக்ஸ் பக்கத்தில் "அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானின் அணுஆயுத நிலையத்திற்கு எதிராக பயனற்ற ஆக்கிரமிப்பு குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். இதனுடன் ஈரானிய ஏவுகணைகளால் அல்-உதைதில் (கத்தார்) உள்ள அமெரிக்கத் தளம் அழிக்கப்படுவது குறித்தும் குறிப்பிடுவது நல்லது.

    எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் பதிலடி கொடுப்பதில் ஈரானின் விருப்பம் மற்றும் திறமை குறித்து ஒரு உண்மையான புரிதலை உருவாக்க இது நிச்சயமாக உதவும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    Next Story
    ×