search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்மபுரி பாராளுமன்ற தொகுதியை 5-வது முறையாக கைப்பற்றிய திமுக
    X

    தர்மபுரி பாராளுமன்ற தொகுதியை 5-வது முறையாக கைப்பற்றிய திமுக

    தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமார் 5,74,988 வாக்குகளை பெற்று வென்றுள்ளார்.
    தர்மபுரி:

    தர்மபுரி பாராளுமன்ற தொகுதியை தி.மு.க. 5-வது முறையாக கைப்பற்றி உள்ளது.

    கடந்த 1967 மற்றும் 1971-ம் ஆண்டுகளில் தி.மு.க.வை சேர்ந்த சி.டி.தண்டபானி வெற்றி பெற்றார். மீண்டும் 1980-ம் ஆண்டு தி.மு.க.வை சேர்ந்த கே.அர்ஜூணன் வெற்றி பெற்றார். 2009-ம் ஆண்டு தாமரைச்செல்வன் (தி.மு.க.) வெற்றி பெற்றார்.

    அதன்பிறகு தற்போது நடந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் வெற்றி பெற்று உள்ளார்.

    செந்தில்குமார் (தி.மு.க.) - 5,74,988

    அன்புமணி ராமதாஸ் (பா.ம.க.) - 5,04,235

    பி.பழனியப்பன் (அ.ம.மு.க.) - 53,655

    ருக்மணி தேவி (நாம் தமிழர்) - 19,764

    ராஜசேகர் (மக்கள் நீதிமய்யம்) - 15614

    ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ம.க.வை சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் பா.ஜனதா கூட்டணியில் நின்று வெற்றி பெற்றார். தற்போது அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் போட்டியிட்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ் தோல்வி அடைந்து உள்ளார்.

    1998, 1999, 2004, 2014 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் 4 முறை பா.ம.க. வெற்றி பெற்ற தொகுதி இதுவாகும். பா.ம.க.விடம் இருந்து இந்த தொகுதியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. தர்மபுரி தொகுதியில் ஏற்கனவே காங்கிரஸ் 2 முறையும், அ.தி.மு.க. 2 முறையும், த.மா.க. ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளது.

    தற்போது தர்மபுரி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள டாக்டர் செந்தில்குமாரின் தாத்தா டி.என்.வடிவேல் கவுண்டர் ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×