search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சி பாலியல் வழக்குகளை பெண் போலீஸ் அதிகாரி விசாரிக்க கோரி வழக்கு
    X

    பொள்ளாச்சி பாலியல் வழக்குகளை பெண் போலீஸ் அதிகாரி விசாரிக்க கோரி வழக்கு

    பொள்ளாச்சி பாலியல் வழக்குகளை பெண் போலீஸ் அதிகாரி விசாரிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கும், சி.பி.ஐ., இணை இயக்குனருக்கும் நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #PollachiAbusecase
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் ராதிகா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கூறியிருப்பதாவது:-

    பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பிப்ரவரி மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. உண்மை குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் வகையில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் புலன் விசாரணை நடத்தினர்.

    பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் வீட்டுக்கு சாதாரண உடையில் சென்று விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளியிடக் கூடாது என்ற விதிகளை காவல் துறையினர் பின்பற்றவில்லை.

    புதிதாக வெளியான நான்கு வீடியோக்கள் தொடர்பாக தனி தனி வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை சி.பி.ஐ. பெண் போலீஸ் அதிகாரி தலைமையில் நடைபெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி, நீதிபதி எம்.துரைசாமி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கும், சி.பி.ஐ., இணை இயக்குனருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். #PollachiAbusecase
    Next Story
    ×