search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான ஆசிரியர் பார்த்திபன்-பறிமுதல் செய்யப்பட்ட சைக்கிள்கள்.
    X
    கைதான ஆசிரியர் பார்த்திபன்-பறிமுதல் செய்யப்பட்ட சைக்கிள்கள்.

    டியூசனுக்கு வந்த மாணவர்களின் விலை உயர்ந்த சைக்கிள்களை திருடி விற்ற ஆசிரியர்

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் டியூசனுக்கு வந்த மாணவர்களின் விலை உயர்ந்த சைக்கிள்களை திருடி விற்ற ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சேரன் நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 48). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாலிங்கபுரத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே தனது சைக்கிளை நிறுத்திவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    சிறிது நேரத்துக்கு பின்னர் வந்து பார்த்தபோது சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். இதேபோல், பொள்ளாச்சியை சேர்ந்த சுப்ரமணியம், சீனிவாசன் ஆகியோரும் தங்களது சைக்கிள்களை காணவில்லை என மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தனர்.

    இந்நிலையில், மகாலிங்கபுரம் போலீசார் கோட்டாம்பட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த 2 பேரை பிடித்து விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

    தொடர் விசாரணையில் ஒருவர் தனியார் பள்ளி ஆசிரியர் பார்த்திபன் (22) என்பதும் மற்றொருவர் 10-ம் வகுப்பு மாணவர் என்பதும் தெரிந்தது.

    மேலும் விசாரணையில்ஆசிரியர் பார்த்திபன் மாணவரை தூண்டிவிட்டு தன்னிடம் டியூனுக்கு வரும் மாணவர்கள் 13 பேரின் விலை உயர்ந்த சைக்கிள்களை திருடியது தெரியவந்தது. மாணவர் திருடும் சைக்கிள்களை விற்று ஆசிரியர் பார்த்திபன் தனது ஆடம்பர செலவுக்கு பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ஆசிரியர் மற்றும் மாணவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடிய சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×