என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைக்கிள்கள் திருட்டு"

    • சூரியகுமார் (50). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் போர்டிகோவில் ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார்.
    • மர்ம நபர்கள் சைக்கிளை திருடிச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சூரியகுமார், இதுபற்றி கன்னங்குறிச்சி போலீசில் புகார் அளித்தார்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி அடுத்த மகேந்திரபுரி பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் சூரியகுமார் (50). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் போர்டிகோவில் ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சைக்கிளை திருடிச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சூரியகுமார், இதுபற்றி கன்னங்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். இதேபோல் மகேந்திரபுரி குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார் (36). இவரது வீட்டின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரூ.22 ஆயிரம் மதிப்பு சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்தும் சதீஸ்குமார் கன்னங்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். இந்த 2 புகார்களின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×