search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படும் - டிடிவி தினகரன்
    X

    இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படும் - டிடிவி தினகரன்

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கை மற்றும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #AMMK
    திருச்சி:

    அம்மா மக்கள் முன்னேற் கழகத்தின் திருச்சி பாராளு மன்ற தொகுதியின் தலைமை தேர்தல் அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. திருச்சி கலெக்டர் அலுவலக சாலை புதுக்கோட்டை அரண்மனை வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    யார் எந்த தடையினை ஏற்படுத்தினாலும் அ.ம.மு.க. தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க முடியாது. ஏற்கனவே அதிகார துஷ்பிரயோகம், மத்திய அரசின் அச்சுறுத்தல் ஆகியவற்றினை மீறி தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு எதிரிகளையும், துரோகிகளையும் எதிர் கொண்டு வெற்றி பெற்றோம். அ.ம.மு.க. மக்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது.

    திருவாரூரில் அ.ம.மு.க. வெற்றி பெற்றுவிடுவோம் என்ற பயத்தால் தேர்தலை திட்டமிட்டு தள்ளிவைத்தனர். ஆனால் லோக்சபா தேர்தலை தள்ளி வைக்க முடியாது. இதனால் இந்த தேர்தல் வருகிறது. இதில் நாங்கள் வெற்றி பெறுவோம். தமிழக மக்கள் யார் பக்கம் என்பதை மே 23-ல் அனைவருக்கும் தெளிவாக தெரியப்படுத்துவார்கள்.

    அ.ம.மு.க.வின் தேர்தல் அறிக்கை மற்றும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் 22-ந்தேதி வெளியிடப்படும். முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அ.ம.மு.க.வில் இணைந்துள்ளார். அ.ம.மு.க. வேட்பாளர்கள் வருகிற 26-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார்கள். 27-ந்தேதி முதல் 20 நாட்கள் தொடர் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.

    அ.தி.மு.க.விற்கு 45 சதவிதம் 50 சதவிதம் மக்கள் ஆதரவு இருக்கிறது என கூறுவதற்கெல்லாம் மே 23-ல் முடிவு வரும். அ.தி.மு.க.வில் இருப்பவர்கள் ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள் மட்டும் தான். 95 சதவிதம் அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர்.

    மேலும் அ.தி.மு.க.வில் உள்ள ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களும் விரைவில் எங்களுடன் சேருவார்கள். மக்களை வசப்படுத்த வேண்டும் என நினைப்பவர்கள் தான் கவர்ச்சியான வாக்குறுதி யுத்திகளை கையாள வேண்டும். தேர்தலில் எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்ட வெற்றி. மற்ற கட்சிகள் எல்லாம் 2-ம் இடத்திற்குதான் போட்டியிட வேண்டும்.

    கருத்து திணிப்புகளை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள். அ.ம.மு.க.விற்கு சின்னம் வழங்கும் வி‌ஷயத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை உள்ளது என கூறவில்லை. நீதிமன்றத்தின் மீது தான் நம்பிக்கை வைத்துள்ளோம். வருகின்ற 25-ந்தேதி அ.ம.மு.க.விற்கு சின்னம் ஒதுக்கும் வி‌ஷயத்தில் நீதிமன்றமும் நல்ல முடிவை தராவிட்டால் மக்கள் மன்றத்தை சந்திக்க உள்ளோம்.

    ஒவ்வொரு தொகுதிகளிலும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் தனித்தனி சின்னத்தில் நின்றாலும், மக்கள் அ.ம.மு.க. வேட்பாளர்களின் சின்னத்தினை தேடிப்பிடித்து வாக்களித்து வெற்றியைத் தருவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #AMMK
    Next Story
    ×