search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகளுக்கு ரூ.6000 உதவி தொகை வழங்கும் திட்டத்தை கோரக்பூரில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
    X

    விவசாயிகளுக்கு ரூ.6000 உதவி தொகை வழங்கும் திட்டத்தை கோரக்பூரில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

    5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு தலா ரூ.6,000 வழங்கும் திட்டத்தை உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். #PMModi
    சென்னை:

    மத்திய பட்ஜெட்டில் நாடு முழுவதும் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு தலா ரூ.6,000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

    இந்த தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் 3 தவணையாக செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கான பட்டியல் தயாரிப்பு பணி நாடு முழுவதும் நடைபெற்றது.

    அனைத்து மாநில அரசுகளும் பயனாளிகள் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளன. பிரதமர் மோடி இந்த திட்டத்தை வருகிற 24-ந்தேதி உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் தொடங்கி வைக்கிறார்.

    இதேபோல் தமிழக அரசு வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் 60 லட்சம் ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை சட்டசபையில் அறிவித்தது. இதற்காக தமிழக பட்ஜெட்டில் ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக தமிழக அரசு கடந்த 16-ந்தேதி அரசாணை வெளியிட்டது. அதில் ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் தலா ரூ.2,000 செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை கண்காணிக்கவும் பயனாளிகள் விவரம் சேகரிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர்கள் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தை மறைந்த ஜெயலலிதா பிறந்த நாளான வருகிற 24-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

    இந்த திட்டத்தின் கீழ் வருகிற 24-ந்தேதி முதல் 28-ந்தேதிக்குள் அனைத்து ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்குகளிலும் ரூ.2,000 செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    இதேபோல் மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் முதல் தவணை நிதி உதவி ரூ.2,000 இந்த மாத இறுதிக்குள்ளும், 2-வது தவணை தொகை ரூ.2,000 மார்ச் முதல் வாரத்திலும் வங்கி கணக்கில் போடப்படும் என்று அறிவித்துள்ளது.

    அத்துடன் தமிழக அரசு வழங்கும் ரூ.2,000 இம்மாத இறுதிக்குள் போடப்படுவதால் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு மொத்தம் ரூ.6,000 கிடைக்கும். பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன் இந்த உதவித் தொகையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #PMModi
    Next Story
    ×