search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடியின் உடை பற்றி பேசுவதற்கு தமிழக அரசியல்வாதிகளுக்கு தகுதி கிடையாது - பொன்.ராதாகிருஷ்ணன்
    X

    மோடியின் உடை பற்றி பேசுவதற்கு தமிழக அரசியல்வாதிகளுக்கு தகுதி கிடையாது - பொன்.ராதாகிருஷ்ணன்

    பிரதமர் மோடியின் உடைகளை பற்றி பேசுவதற்கு தமிழக அரசியல்வாதிகளுக்கு தகுதி கிடையாது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். #PonRadhakrishnan #BJP
    கோவை:

    கோவை ரெயில் நிலையத்தில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மேகதாது விவகாரத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் முன்னதாக ஒரு காரியத்தை செய்ய தமிழக முதல்-அமைச்சர் தவறி இருக்கிறார். முதல் தீர்மானமாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காங்கிரஸ் கட்சியினரை பெங்களூருக்கு அனுப்பி கர்நாடக அரசிடம் பேச சொல்லியிருக்க வேண்டும். பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் பழக்கத்தை தற்போதும் காங்கிரஸ், தி.மு.க கூட்டணி செய்து வருகிறது என்றார்.



    தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது,

    கேள்வி: கஜா புயல் நிவாரண நிதியாக ஒரு பைசா கூட வரவில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியிருக்கிறாரே?

    பதில்: அது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்கு தெரியவில்லை. மத்திய குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா? என்றும் எனக்கு தெரியவில்லை. அறிக்கை சமர்ப்பித்த பின்னர் இது சுமூகமாக முடியும்.

    கேள்வி: தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பு நடத்த இருந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறதே?

    பதில்: என்னை பொறுத்தவரை ஆலயங்கள் காட்சிப்பொருளாக மாற்றப்படக்கூடாது. இந்த பிரச்சனை குறித்து முழுமையாக தெரியாததால் கருத்து கூற விரும்பவில்லை. ஆலயங்கள் ஆலயமாக மட்டுமே இருக்க வேண்டும்.

    கேள்வி: மோடியின் உடை குறித்தும், வெளிநாடு சுற்றுப்பயணம் குறித்தும் வைகோ பேசி வருகிறாரே?

    பதில்: பிறந்தது முதல் ஒரே உடையில் தான் வாழ்கிறார்களா? உடைகளை பற்றி பேசுவதற்கு தமிழக அரசியல்வாதிகளுக்கு தகுதி என்பதே கிடையாது. எளிமையான மனிதர் மோடி, அவர் குறித்து பேச யாருக்கும் அருகதை இல்லை.

    ராமர் பிள்ளை விவகாரம் நீண்ட காலமாக உள்ளது. ஆதார பூர்வமாக உள்ள நிலையில் அது குறித்து பேச தயாராக தான் உள்ளோம். எதையும் உதாசீனப்படுத்தவில்லை.

    கோவையில் ஜெயலலிதா சிலையிடம் அகில பாரத வித்யார்த்தி பரி‌ஷத் மாணவர்கள் மனு கொடுத்தது தவறு. கழகங்கள் செய்வது போல சிலையிடம் ஏன் இவர்கள் மனு கொண்டு கொடுக்க வேண்டும். அகில பாரத வித்யார்த்தி பரி‌ஷத் மாணவர்கள் தெரியாமல் செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan #BJP
    Next Story
    ×