search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் கவர்னருக்கு எதிரான தி.மு.க. போராட்டம் திடீர் வாபஸ்
    X

    திண்டுக்கல்லில் கவர்னருக்கு எதிரான தி.மு.க. போராட்டம் திடீர் வாபஸ்

    திண்டுக்கல்லில் கவர்னருக்கு எதிராக தி.மு.க.வினரின் கருப்புக் கொடி போராட்டம் திடீரென வாபஸ் பெறப்பட்டது. #DMK #TNGovernor #BanwarilalPurohit
    திண்டுக்கல்:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் 2 நாள் பயணமாக நேற்று திண்டுக்கல் வந்தார். காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்று விட்டு மாலையில் பழனி மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

    இன்று அரசின் திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்வார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. எனவே கவர்னர் வருகைக்கு எதிராக தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்த தயார் நிலையில் இருந்தனர். இதற்காக நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு கவர்னருக்கு எதிராக போராட்டம் செய்பவர்களை கைது செய்யவும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    ஆனால் கவர்னரின் வருகை மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் குறித்து பார்வையிடுவதற்காக மட்டுமே என்றும் கள ஆய்வு நடத்த வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் தி.மு.க.வினர் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதனால் போலீசார் நிம்மதியடைந்து மண்டபத்தை விட்டு வெளியேறினர். மேலும் போராட்டம் நடத்த இருந்த இடத்தில் வைக்கப்பட்டு இருந்த பேரிகார்டுகள் அகற்றப்பட்டன. #DMK #TNGovernor #BanwarilalPurohit
    Next Story
    ×