search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆட்டோ நலவாரியம் அமைக்க பட்ஜெட் கூட்டத்தொடரில் நடவடிக்கை - நாராயணசாமியிடம் எம்.எல்.ஏ. மனு
    X

    ஆட்டோ நலவாரியம் அமைக்க பட்ஜெட் கூட்டத்தொடரில் நடவடிக்கை - நாராயணசாமியிடம் எம்.எல்.ஏ. மனு

    ஆட்டோ நலவாரியம் அமைக்க பட்ஜெட் கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் சிவா எம்.எல்.ஏ. மனு அளித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து மனு அளித்தார்.

    புதுவை மாநிலத்தில் ஆட்டோ தொழில் செய்து வரும் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் சிறக்க நலச்சங்கத்தை ஆட்டோ நலவாரியமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நான் சட்டமன்றத்தில் வைத்தேன். அதற்கு தாங்கள் அரசு உடனடியாக ஆட்டோ தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்தீர்கள். ஆனால் 2 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இன்னும் நலவாரியம் அமைக்கவில்லை.

    இது ஆட்டோ தொழிலாளர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆகையால் வருகின்ற கூட்டத்தொடரில் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சிறக்கும் வகையில் நலச்சங்கத்தை ஆட்டோ நல வாரியமாக மாற்றித்தர வேண்டும்.

    தங்கள் ஆட்சியில் நாங்கள் எதிர்பார்க்கின்ற புதிய ஆட்டோ நலவாரியம் அமைக்கப்பட்டால் அதன் மூலம் உதிரி பாகங்கள் கடை அமைத்து ஆட்டோ உதிரி பாகங்கள் மற்றும் பெட்ரோல், டீசல் போன்றவற்றை மானிய விலையில் கிடைப்பதற்கு வழிவகை செய்யலாம். அவர்களின் பிள்ளைகள் மேற்படிப்பு படிக்க உதவி செய்யலாம். நலவாரியம் மூலம் வீடுகட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கலாம்.

    மற்ற சுற்றுலா மாநிலங்களில் உள்ளது போல் புது வையிலும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கி சுற்றுலா மேம்பட வழிவகை காணலாம். மேலும் நவீன ரக ஆட்டோக்களை வாங்கிக் கொடுக்கவும் வழிவகை செய்யலாம். ஆகையால் ஆட்டோ நல வாரியம் ஆண்டின் கூட்டத் தொடரிலேயே நடவடிக்கை எடுப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

    இந்த சந்திப்பின்போது, தி.மு.க. பொருளாளர் சண் குமரவேல், தொ.மு.ச. தலைவர் அண்ணா அடைக்கலம், கவுரவத் தலைவர் சக்திவேல், ஆட்டோ சங்க மாநில தலைவர் முரளி, செய லாளர் மிஷேல், பொருளாளர் சிவலிங்கம் மற்றும் ஆட்டோ சங்க நிர்வாகிகள், உறுப்பினர் உடனிருந்தனர்.

    Next Story
    ×