search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தியாகராயநகரில் நடைபாதை வளாக பணி- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்
    X

    தியாகராயநகரில் நடைபாதை வளாக பணி- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்

    தியாகராய சாலையில் ரூ.33.80 கோடி மதிப்பில் நடைபாதை வளாகம் அமைக்கும் பணியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    தியாகராய நகரில் உள்ள தியாகராயா சாலையில் நடைபாதை வளாகம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதனடிப்படையில், மோட்டார் வாகனமில்லா போக்குவரத்தை ஊக்குவிக்கும் வண்ணமாக தியாகராய சாலையில் நடைபாதை வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தியாகராய சாலையில் அமையவுள்ள நடைபாதை வளாகம் கட்டுமானப் பணி மேற்கொள்ள ஏதுவாகவும் அத்தருணத்தில் போக்குவரத்தை மாற்றியமைக்க ஏதுவாகவும், பகுதி1, பகுதி2 மற்றும் பகுதி3 என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    தியாகராய சாலையில், பகுதி 1 பனகல் பூங்கா முதல் தணிகாசலம் சாலை வரை 730மீ நீளம் கொண்டதாகும். தியாகராய சாலையில், பகுதி 2 தணிகாசலம் சாலை முதல் போக் சந்திப்பு வரை 380மீ நீளம் கொண்டதாகும். தியாகராயா சாலை, பகுதி 3 போக் சந்திப்பு முதல் அண்ணா சாலை வரை 565மீ நீளம் கொண்டதாகும்.

    இதையொட்டி தியாகராய சாலையில் நடைபாதை வளாகம் அமைக்கும் பணியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று தொடங்கி வைத்தார்.

    தியாகராய சாலையில் நடைபாதை வளாகம் பகுதி1-ல் பேருந்து மற்றும் இருசக்கர வாகனம் மட்டும் செல்லும் வகையில் 7மீ அகலமான வாகனப்பாதையும், மத்திய தடுப்பு சுவரும் அமைக்கப்படவுள்ளது. மேலும், இப்பகுதியில் 10 மீ முதல் 12மீ அகலத்தில் நடைபாதை அமைக்கப்பட உள்ளது.

    தியாகராய சாலையில் நடைபாதை வளாகம் பகுதி 2 மற்றும் 3-ல் அனைத்து வாகனங்கள் செல்லும் வகையில் 15மீ அகலமான வாகனப்பாதையும், மத்திய தடுப்பு சுவரும் அமைக்கப்படவுள்ளது. மேலும், இப்பகுதியில் 5மீ முதல் 6மீ அகலத்தில் நடைபாதை அமைக்கப்பட உள்ளது.

    நடைபாதை வளாகப் பகுதியை பயன்படுத்தும் மக்களின் வசதிக்காக தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சந்திப்பில் உள்ள இடத்தில் பலஅடுக்கு வாகனம் நிறுத்துமிடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    தியாகராய நகர் நடை பாதை வளாகம் அமைப்பதன் மூலம் வணிக வளாகங்களில் உள்ளது போல, வசதிகளான இருக்கைகள், பிரகாசமான தெருவிளக்குகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கழிப்பிடங்கள் அமையவுள்ளதால் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் ரம்மியமான சூழ்நிலையில் பாதுகாப்பான முறையில் எளிதாக பொருட்களை வாங்க இயலும். மேலும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த தேவையான பேட்டரி கார் இயக்கப்படும்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் டிஜெயக்குமார், பென்ஜமின், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் பா.வளர்மதி, ஜெயவர்த்தன் எம்.பி., சத்திய நாராயணன் எம்.எல்.ஏ. துணை ஆணையாளர் கோவிந்த ராவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×