search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 627 கன அடியாக சரிவு
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 627 கன அடியாக சரிவு

    மேட்டூர் அணையில் இன்று நீர் வரத்து மேலும் சரிந்து 627 கன அடியாக குறைந்தது.
    மேட்டூர்:

    கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.

    இதன் தொடர்ச்சியாக கடந்த 21-ந் தேதி 695 கன அடி தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நேற்று நீர்வரத்து குறைந்து 673 கன அடியானது. இன்று நீர் வரத்து மேலும் சரிந்து 627 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    நேற்று 35.41 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்றும் 35.41 அடியாகவே இருந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்குமா? அணையின் நீர்மட்டம் உயருமா? என்ற ஏக்கத்தில் விவசாயிகள் உள்ளனர்.
    Next Story
    ×