search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்தாள்களை படத்தில் காணலாம்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்தாள்களை படத்தில் காணலாம்.

    திருச்சி விமான நிலையத்தில் ரூ.33 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்

    திருச்சி விமான நிலையத்தில் ரூ.33 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடி விமான சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் தங்கம் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கண்டு பிடித்து பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று கோலாலம்பூர் செல்ல வந்த பயணியிடம் ரூ.33 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருச்சியில் இருந்து கொழும்பு வழியாக கோலாலம்பூர் செல்ல வந்த பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திருச்சியை சேர்ந்த ஜெயிலாபுதின் என்பவர் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்த ரூ.33 லட்சம் மதிப்புள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு பணத்தினை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து அந்த நபரிடம் வெளிநாட்டு பணத்தாள்கள் எப்படி கிடைத்தது என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.




    Next Story
    ×